திரும்பத் திரும்ப…

திரும்பத் திரும்ப…

எழுபது வயதை நெருங்கும் அப்பாவும், அவரது 35 வயது மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். தென்னையில் தொங்கும் இளநீர், காய்த்துக் குலுங்கும் மாமரம் என்று அப்பா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க… செல்போனில் பேசியபடியே, தனது லேப்டாப்பில் பிஸியாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார் மகன்.
அப்போது ஒரு புறா பறந்து வந்து மாமரத்தில் உட்கார்ந்தது. மகன் செல்போனில் பேசி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த அப்பா, ‘‘அது என்னதுப்பா?’’ என்று கேட்டார். தன் வேலையில் மும்முரமாக இருந்த பையன், நிமிர்ந்து பார்த்து ‘‘புறா’’ என அவசரமாக பதில் சொல்லிவிட்டு திரும்பவும் வேலையில் மூழ்கினான். அப்பாவுக்கு அது காதில் சரியாக விழவில்லை. இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார். பையனுக்கு சலிப்பும் எரிச்சலும் பொங்கியது.
‘‘அதான் புறான்னு அப்பவே சொன்னேன் இல்ல! உங்களுக்குத்தான் கண்ணும் தெரியலை; காதும் கேட்கலை. வயசான காலத்துல சும்மா வீட்ல படுத்துக்கிட்டு இருக்கலாம் இல்ல. ஏன் இங்க வந்து என் உயிரை வாங்கறீங்க?’’ என்று எரிந்து விழுந்தான்.
சத்தமாகக் கத்தியதால் இது தெளிவாகக் கேட்டது அப்பாவுக்கு. தட்டுத் தடுமாறி உள்ளே எழுந்து போன அவர், ஒரு பழைய டைரியைக் கையில் எடுத்து வந்தார். கண்களைச் சுருக்கியபடி டைரியைப் புரட்டியவர், ஒரு பக்கத்தில் தான் தேடியது கிடைத்ததும் சந்தோஷமானார். பையனிடம் அந்தப் பக்கத்தைக் காட்டியவர், ‘‘கோவிச்சுக்காதப்பா! உன் வேலையைக் கெடுக்கறேன்னு நினைக்காத. நேரம் இருந்தா இதை மட்டும் படிச்சிப் பாரு!’’ என்று அவன் கையில் கொடுத்துவிட்டு உள்ளே போனார்.
அது அந்த அப்பா தனது இளம் வயதில் எழுதியிருந்த டைரியின் பக்கம்தான். இன்று எரிந்துவிழும் தனது மகனின் மழலைப் பருவத்தைப் பற்றித்தான் எழுதியிருந்தார்.
‘‘இன்று என் மகன் தோட்டத்தில் புறாக்களைப் பார்த்து சந்தோஷப்பட்டான். அவை எழுப்பும் விநோதமான ஓசை அவனுக்கு ஆச்சரியம் தந்தது. ‘அது என்னதுப்பா?’ என மழலைக் குரலில் கேட்டான். ‘புறா’ என்றேன். இன்னொரு புறாவைப் பார்த்தும் ‘அது என்ன?’ என்றான். ‘புறா’ என்றேன். திரும்பவும் பழைய புறா பறந்து வேறொரு கிளையில் உட்கார்ந்தது. ‘அது என்ன?’ என்றான். ‘புறா’ என்றதும் சிரித்தான். இப்படி 23 முறை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தான். அவனது மழலைக் குரல் என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. அவன் சந்தேகம் கேட்ட ஒவ்வொரு முறையும், அவனைத் தூக்கி முத்தம் கொடுத்து, அவன் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது எனக்கு சந்தோஷம் தந்தது’’ என்று டைரியில் எழுதி வைத்திருந்தார் அப்பா.
வயதான காலத்தில் பெரியவர்களை நாம் பாரமாக நினைக்கிறோம். பிறந்தது முதல் படித்து முடித்து வேலைக்குப் போகும்வரை பிள்ளைகளை பெற்றவர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள்; பராமரிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பிள்ளைகளை பாரமாகப் பார்ப்பதில்லை.
முதுமை என்பது இரண்டாவது குழந்தைப் பருவம். முதுமையடைந்த தங்கள் பெற்றோரை குழந்தைகளாகப் பார்க்கும் மனநிலை நமக்கும் இருக்க வேண்டும். அவர்களைப் பார்த்துக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக நினைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu