எதிரியை நேசியுங்கள்!

எதிரியை நேசியுங்கள்!

நண்பர்களை நேசிப்பது சுலபம்; உறவினர்கள் மீது அன்பு காட்டுவது அதைவிட எளிது. எதிரிகளை நேசிக்க முடியுமா? ஒரு வழக்கறிஞராக தென் ஆப்ரிக்கா போன காந்தியை அந்த மண் மகத்தான மகாத்மாவாக திருப்பி அனுப்பியது. ‘எதிரியை நேசிப்பது எப்படி’ என்பதை அங்கு காந்தி கற்றுக்கொண்டார். நமக்கும் கற்றுத் தருகிறார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களின் சம உரிமைக்காக பெரும் போராட்டங்கள் நடத்தினார் காந்தி. அதனால் அங்கு ஆதிக்கம் செலுத்திவந்த வெள்ளையர்களின் தாக்குதலுக்கு அவர் அடிக்கடி ஆளாவதுண்டு. அப்படி ஒருமுறை அவர் மீது வெள்ளை இன வெறியர்கள் தாக்குதல் நடத்தியபோது, அதைத் தடுத்து காந்தியைக் காப்பாற்றியவர் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் மனைவி. ‘‘ஏன் இவரைத் தாக்குகிறீர்கள்? இவர் ஒரு வழக்கறிஞர் தெரியுமா?’’ என அவர்களிடம் சண்டை போட்டு அவரைக் காப்பாற்றுகிறார் அந்தப் பெண்.
இந்த சம்பவம் காந்திக்குள் ஒரு முக்கியமான பண்பை விதைக்கிறது. ‘எதிரியையும் எதிரியின் செயல்களையும் பிரித்துப் பார்ப்பது’ என்பதுதான் அது. ஒருவர் செய்யும் தவறுக்காக பொத்தாம்பொதுவாக எல்லோரையும் குற்றம் சொல்லும் போக்கு நம்மிடம் இருக்கிறது. ‘இந்த ஊர்க்காரர்களே இப்படித்தான்’ என ஒருவரின் குறையை ஊருக்கே பொதுவாக்குவது, இனத்துக்கே பொதுவாக்குவது என வன்மம் வளர்க்கிறார்கள் பலர். இன்றைய சமூகப் பிரச்னைகள் பலவற்றின் ஆணிவேராக இப்படிப்பட்ட வன்மமே இருக்கிறது. எதிரியின் செயல்களைத்தான் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்; எதிரியை அல்ல.
தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக தொழில் செய்யப் போன காந்தி, ட்ரான்ஸ்வால் நகரிலிருந்து நடால் நகருக்கு ரயிலில் சென்றார். அவரது பெட்டிக்கு வந்த ஒரு வெள்ளையர், ‘‘கூலியான உனக்கு இங்கு இடமில்லை’’ என காந்தியை அவமதித்தார். காந்தியிடம் டிக்கெட் இருந்தும், பெட்டி&படுக்கைகளோடு குண்டுகட்டாக பிளாட்பாரத்தில் வீசி எறியப்பட்டார். பிற்காலத்தில் ராஜ்மோகன் காந்தி இந்த நிகழ்வைக் குறிப்பிடும்போது சொல்வதுண்டு, ‘பீட்டர்மாரிஸ்பர்க் பிளாட்பாரத்தில் விழும்போது அவர் மோகன்தாஸ் காந்தி; எழும்போது அவர் மகாத்மா காந்தி’. அவரது வாழ்க்கையின் பாதையையே மாற்றிய ஒற்றைச் சம்பவம் அது. அகிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துவதற்கு அவரைத் தூண்டிய ஆரம்பப்புள்ளி.
சாதாரண மனிதர்கள் இப்படி நிகழ்ந்தால், தள்ளிவிட்ட நபரிடம் சண்டைக்குப் போவார்கள்; கோர்ட்டுக்கு இழுப்பார்கள்; வீட்டுக்கு ஆள் அனுப்புவார்கள். ஆனால் காந்தி அந்த வெள்ளையரை எதிரியாக நினைக்கவில்லை. அவருக்குள் இருந்த ஆதிக்க வெறி என்ற செயலை எதிர்க்கத் தீர்மானித்தார்.
தென் ஆப்ரிக்காவில் டிரான்ஸ்வால் நகரத்தில் காந்திஜி தங்கியிருந்தபோது, அவருக்கு பல வெள்ளையர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அந்த நகரச் சட்டப்படி இந்தியர்கள் எவரும் பொது நடைபாதையில் நடக்கக்கூடாது; இரவு ஒன்பது மணிக்கு மேல், அனுமதிச்சீட்டு பெறாமல் செல்வதும் கூடாது. காந்திஜி அனுமதிச்சீட்டு வைத்திருந்தும், ஒருநாள் இரவில் வெளியே போனபோது, ஒரு வெள்ளைக்கார காவலன் அவரைத் தாக்கினான்.
காந்தி தடுமாறி விழுந்தார். அப்போது காந்தியின் நண்பர் கோடெஸ் என்பவர் அங்கே வந்தார். காந்திஜி கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்ததும் பரபரப்புடன் குதிரையிலிருந்து இறங்கி, ‘‘நண்பரே! அடி ஏதும் பட்டு விட்டதா’’ என்று அன்போடு விசாரித்தார். தாக்கிய காவலன் மீது கடுங்கோபம் கொண்டார். ‘‘முரட்டுத்தனமாக தாக்கிய இவன்மீது வழக்குத் தொடர வேண்டும்’’ என்றார். காந்திஜி அமைதியாக அவரைப் பார்த்து சிரித்தபடி சொன்னார். ‘‘பாவம்! கறுப்பு மனிதர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது இந்த நாட்டுச் சட்டம். அவன் மேல் கோபம் கொண்டு பழிவாங்க மாட்டேன். தீமையை மன்னித்து விட்டேன்.’’ அந்தக் காவலன் காந்திஜியிடம் ஓடிவந்து மன்னிப்பு கேட்டான்.
நேசத்தையும் மன்னிப்பையும் பரப்பினால், கருணையும் அன்பும் எவரது மனதிலும் முளைவிட்டு எழும் என மகாத்மா நம்பினார். அந்த நம்பிக்கை இன்றும் அதிசயங்கள் நிகழ்த்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu