நேரம் முக்கியம்!

நேரம் முக்கியம்!

தங்களின் ஒரே மகளுக்காக ஓடி ஓடி உழைத்தார்கள் அந்தத் தம்பதி. காலையில் குழந்தை தூங்கி எழும் முன்பாகவே இரண்டு பேரும் வேலைக்குப் போய் விடுவார்கள். இரவில் குழந்தை தூங்கிய பிறகுதான் இருவருமே வீட்டுக்கு வருவார்கள். குழந்தைக்கு எல்லாம் செய்ய வேலைக்கு ஆட்கள் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் தன் அப்பா, அம்மாவை அந்தக் குழந்தை பார்க்க முடியும்.
பக்கத்து குடிசைப் பகுதியில் இருக்கிற ஒரு ஏழை சிறுவனும், அந்த சின்னப் பெண்ணும் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் மாலையில் அந்த சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து சுற்றிக் காட்டினாள் அந்த சிறுமி. அந்த வீட்டில் எல்லாமே அவனுக்கு ஆச்சரியம் தருவதாக இருந்தன. அவன் இதற்குமுன் பார்த்திருக்காத, கேள்விப்படாத பல பொருட்கள் அங்கு இருந்தன.
ஒவ்வொரு பொருளாகக் காட்டி, ‘‘இது என்ன… அது என்ன?’’ என்று அவளிடம் கேட்டான். ‘‘இது தெரியாதா உனக்கு… இதுதான் மிக்ஸி. அது தெரியாதா உனக்கு… அதுக்குப் பேரு வாஷிங் மெஷின்; துணி துவைக்கும். இது தெரியாத உனக்கு… இது டெடி பியர் பொம்மை; என் வீட்ல எனக்கு இருக்கற ஒரே ஃபிரண்ட். இது தெரியாதா உனக்கு… இதுதான் ஏ.சி. இதைப் போட்டுக்கிட்டுதான் நான் தூங்குவேன்’’ என்று ஒவ்வொன்றையும் பெருமையாக விளக்கிக்கொண்டே போனாள் சிறுமி.
அப்போது, ‘மணி இரவு எட்டு’ என்று சுவர்க் கடிகாரத்திலிருந்து ஒரு இயந்திரப் பறவை எட்டிப் பார்த்து கத்திச் சொல்லிவிட்டு மறைந்தது. ‘‘இது என்ன?’’ என்று பையன் கேட்டதும், ‘‘இதுவும் தெரியாதா உனக்கு… இந்த க்ளாக்ல எட்டு மணி ஆகிட்டா, இந்த பறவை எட்டு முறை கத்தும்’’ என்றாள் அந்தச் சிறுமி.
‘‘அடடா! எங்க அப்பா வீட்டுக்கு வந்திட்டிருப்பாரு. இது நாங்க ‘நிலாச் சோறு’ சாப்பிடுற நேரம். நான் கிளம்பறேன். அப்புறம் வர்றேன்’’ என்று அந்தப் பையன் பரபரப்பானான்.
‘‘நிலாச் சோறா… அப்படின்னா என்னா?’’ என்று கேட்டாள் சிறுமி.
‘‘இது தெரியாதா உனக்கு? அப்பா, அம்மா, நான், தங்கச்சி எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து நிலா வெளிச்சதுல சாப்பிடுவோம். கதை சொலிக்கிட்டே எங்கம்மா எங்களுக்கு ஊட்டி விடுவாங்க. சந்தோஷமும் சோறுமா வயிறு நிறையும்’’ என்றான் பையன். அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் சிறுமி.
இது வெறும் கதை இல்லை. பெரும்பாலான வீடுகளில் தினம் தினம் நடந்துகொண்டிருக்கிற விஷயம். குழந்தைகளுக்காக பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசையில், காலில் சக்கரம் கட்டாதகுறையாக சுற்றிச் சுற்றி உழைக்கிறோம். அதுவும் அவசியம்தான்! ஆனால் எதிர்காலத்துக்கான கனவுகளைக் காணும்போது நிகழ்காலத்தை இழந்துவிடக்கூடாது. பணம் எவ்வளவு முக்கியமோ, நாம் குழந்தைகளோடு செலவிடும் நேரமும் அதைவிட முக்கியம்! றீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu