முதிய குழந்தைகளைக் கொண்டாடுங்கள்!

முதிய குழந்தைகளைக் கொண்டாடுங்கள்!

பெற்றோரை பட்டினி போட்டு தவிக்க விடும் பிள்ளைகள்... சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு வீதியில் விரட்டிவிடும் மகன்கள்... இப்படித் தொடரும் கொடுமைகள் தொடர்பாக பெற்றோர்கள் புகார் செய்தால், பிள்ளைகளைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் வந்தபோது, பெற்றோர் மீதான பாசத்தை சட்டம் போட்டு நிலைநிறுத்த வேண்டியிருக்கிறதே என எல்லோரும் வேதனைப்பட்டார்கள்.

ஆனால், ‘பொதுவாகவே முதியோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மனநிலை இந்தியர்களுக்கு இருக்கிறது’ என்கிறது ஒரு சர்வே. ‘ஏஜ்வெல் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு, இந்தியாவில் முதியோர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தேசிய அளவில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. ‘‘பொதுவாக தங்கள் வீட்டில் அப்பா, அம்மாவை மதிக்காத பிள்ளைகளும், தாத்தா, பாட்டியை அலட்சியம் செய்யும் பேரப் பிள்ளைகளும், அக்கம்பக்கம் வீடுகளில் இருக்கும் முதியோர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கனிவாக நடந்து கொள்கிறார்கள்’’ என்கிறது இந்த சர்வே முடிவு. மேலும் பல அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது இந்தக் கருத்துக்கணிப்பு...

* பெரியோரை மதிப்பது தொடர்பாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ஏராளமான பொன்மொழிகளும் நாட்டுப்புறக் கதைகளும் வழக்கத்தில் இருக்கின்றன. பள்ளிகளில் இதைப் பாடமாக சொல்லித் தராத கல்விமுறை இங்கே கிடையாது. ஆனாலும்... முதியோர்களுக்கு என்னென்ன விதமான சிரமங்கள் இருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே போதுமான அளவு இல்லை.

* அலுவலகங்களில், கடைகளில், இதர பணியிடங்களில் முதியோர்கள் அலட்சியம் செய்யப்படுகின்றனர். அவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், ஊதிய உயர்வோ, பிரமோஷனோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ‘இந்த வயதில் இவர்களுக்கு எதற்கு?’ என்கிற எண்ணத்துடனேயே அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.

* முதிய வயதில் ஆண்களைவிட பெண்களே தங்கள் வாரிசுகளின் குடும்பங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, தன் கணவனை இழந்துவிட்ட ஒரு மூதாட்டி, தனது வாழ்க்கையின் அந்திமக் காலம் வரை அவதியில் வாழ்கிறார். உணவு, உடை, இருக்க இடம் என அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை.

* முதியவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் இருப்பது பற்றி நிறைய பேர் அறிந்திருக்கவில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் முதியோர்களுக்கு இந்த விஷயம் அடியோடு தெரியவில்லை.

* குடும்பங்களில் முதியோருக்கு மரியாதை தருவது அடியோடு குறைந்துவிட்டதாக இந்த கருத்துக்கணிப்பில் பங்குபெற்றவர்களில் நான்கில் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

* முதியவர்கள் கொடுமைப்படுத்தப்படுவது பற்றி போலீஸ் அக்கறை காட்டுவதில்லை என கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் வருந்துகின்றனர்.

* வெளியுலகத்தில் தாங்கள் சந்திக்கும் முதியவர்களை மதித்து அக்கறை செலுத்தும் பலர், தங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களை அலட்சியம் செய்கின்றனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 59 சதவீதம் பேர் ஒப்புக்கொள்ளும் விஷயம் இது.

* தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கும் உரிமை முதியவர்களுக்கு இருக்கிறது. ஆனால் இதற்கான ஆதரவு அரசிடமிருந்தோ, இந்த சமூகத்திடமிருந்தோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசின் கொள்கைத் திட்டங்களும், சமூக நடைமுறைகளும் முதியோர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றன.

* முதிய வயதில் தங்கள் மருத்துவச் செலவினங்கள் அதிகரிக்கும் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, பென்ஷன் வரும்படியான ஏதாவது நிதித் திட்டங்களில் சேமித்து வைக்கும் வழக்கம் பலரிடம் இல்லை. தனியார் மற்றும் அரசுத்துறைகளில் இப்போது பணிபுரிபவர்களுக்காக அரசு நடத்தும் பென்ஷன் திட்டங்கள் எதுவுமே அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியான நிலையில் இல்லை.

* இந்தக் கருத்துக்கணிப்பில் ஒரே ஆறுதலான விஷயம்... ஓய்வுக்குப் பிறகும் முதியவர்கள் பலர் இந்த சமூகத்துக்குத் தங்கள் பங்களிப்பைத் தரும் தகுதியோடு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் இருக்கின்றனர் என்பதை 85 சதவீதம் பேர் ஒப்புக் கொள்கிறார்கள்.

* முதுமையில் தனிமை கொடுமை என்றால், அதைவிடக் கொடுமையானது அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறை. ‘முதுமை என்பது இரண்டாவது குழந்தைப் பருவம்’ என்பார்கள். குழந்தைகளைக் கொடுமை செய்யும் கொடிய மனம் நம் சமூகத்துக்கு எதற்கு?   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu