தினம் ஒரு கதை - 131

தினம் ஒரு கதை - 131

கல்லூரியில் படித்து முடித்து விட்டு வேலை தேட ஊரிலிருந்து சென்னை வந்திருந்தான் அந்த இளைஞன். சென்னையில் அவன் தாய் மாமா மளிகைக்கடை வைத்திருந்தார். வேலை தேடப் போகும் நேரம் போக மற்ற நேரங்களின் மாமாவின் கடையில் உதவி செய்தான்.

அது சின்ன கடைதான். பல சரக்கு சாமான்களும் காய்கறிகளும் விற்கும் சில்லரை வியாபாரக் கடை. மாமாவும் அத்தையும் கடையை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆரம்பப் பள்ளி செல்லும் குழந்தைகளும் உண்டு.

கடையில் இருக்கும்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இவன் வயதுள்ள இளைஞர்களின் நட்பு கிடைத்தது. அந்தப் பகுதியில் அவர்கள் ஐந்து பேர் நட்புக் குழுவாக சேர்ந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவனை அவர்கள் மாற்றினார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர் சுற்ற சொல்லிக் கொடுத்தார்கள். விலையுயர்ந்த உணவகத்தின் ருசியைக் கற்றுக் கொடுத்தார்கள். ‘மது அருந்துவது எல்லாம் தப்பே இல்லை’ என்று பிரசாரம் செய்தார்கள்.

இவனும் அவற்றை எல்லாம் மெல்லிய குற்ற உணர்வோடு, ஆனால் ஆர்வமாகக் கற்றுக் கொண்டான். இப்போது அதற்கெல்லாம் நிறைய பணம் தேவைப்பட்டது. அதற்காக தன் மாமாவின் கடையிலிருந்து திருடும் நிலைக்கு வந்து விட்டான்.

திருட்டை அவன் வித்தியாசமாகச் செய்தான். மதிய உணவுக்கு மாமாவும், குழந்தைகளை அழைத்து வர அத்தையும் கடையை விட்டுச் செல்லும்போது தன் நண்பன் ஒருவனை வரச் சொல்வான். அவன் வந்ததும் சட்டென்று கல்லாவிலிருந்து 50 ரூபாயோ, 100 ரூபாயோ எடுத்துக் கொடுத்து விடுவான். கொஞ்சமாக பணம் எடுக்கும்போது யாராலும் கண்டுபிடிக்க முடியாது. பத்து நாட்களுக்குப் பிறகு ஏதாவது ஒரு கடை விடுமுறை நாளில் அவன் நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசமாக இருக்க ஆரம்பித்தான்.

மாமாவுக்கும் அத்தைக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டாலும், குறிப்பிட்ட சமயத்தில் அத்தை இதைக் கண்டுபிடித்துவிட்டார். கணவனின் அக்கா மகனை என்ன சொல்வது? திட்டினால், ‘வீட்டுக்கு வந்த பையனை அத்தை கொடுமைப்படுத்திவிட்டாள்’ என்று சொல்வார்கள். இதை சரியாகக் கையாள வேண்டும் என்று நினைத்தார்.

ஒருநாள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர அந்த இளைஞனை அனுப்பிவிட்டு, அத்தை கடையில் இருந்தார். சரியாக மூன்று மணிக்கு கடைத்தெருவில் கூட்டமே இல்லாதபோது மருமகனின் நண்பனான ஓர் இளைஞன் கடைப்பக்கம் வந்தான். அத்தையைப் பார்த்ததும் தயங்கி, அங்கிருந்து நகர முயற்சி செய்தான்.

ஆனால் அத்தை அவரைக் கூப்பிட்டார். ‘‘தம்பி! இங்கே வாப்பா. இன்னைக்கு பணம் 100 ரூபாய் இந்தா வச்சிக்கோ. அவனுக்கு நாங்க தினமும் கொடுக்கிறதுதானே’’ என்று பணத்தை நீட்டினார். அவன் விழித்தான். ‘நம் நண்பன் வீட்டுக்குத் தெரிந்துதான் தினமும் காசு தருகிறான் போல’ என்று நினைத்து வாங்கிக் கொண்டான்.

அன்று மாலை தன் நண்பனிடம், ‘‘உன் அத்தையே காசு கொடுத்திட்டாங்க மச்சி’’ என்று சொல்ல, இவன் அதிர்ந்து போனான். குற்ற உணர்ச்சியால் தவித்தான்.

மறுநாள் காலை மாமா கொள்முதலுக்கு மார்க்கெட் சென்று விட, இவனும் அத்தையும் மட்டும் கடையில் இருந்தனர். ‘‘அத்தை, என்ன மன்னிச்சிருங்க. பசங்க என் மனசைக் கெடுத்திட்டாங்க’’ என்று திணறியபடி சொன்னான்.

அத்தை ஒன்றும் சொல்லவில்லை. காய்கறிகளில் உருளைக்கிழங்கு கிடந்த இடத்தில் ஓர் அழுகிய உருளையை எடுத்து நகர்த்தினார். அதனை ஒட்டி இஞ்சித் துண்டு ஒன்று கிடந்தது. அதை எடுத்துக் கழுவினார். அது நல்ல இஞ்சியாக மாறியது.

அந்த இஞ்சியைக் காட்டி, ‘‘அழுகிப் போன உருளைக்கிழங்கோடு கிடந்தாலும் இது அழுகுதா? இல்லைதானே! அதோட இயல்பை அது விட்டுக் கொடுக்கறதில்லை. ஆனா நீ மட்டும் ஏன் உன் நண்பர்களோட சேர்ந்து கெட்டுப் போகணும். வாழ்க்கையில் என்னைக்கும் இஞ்சியா இரு தம்பி. இதை எல்லாம் நான் உன் மாமா கிட்ட சொல்ல மாட்டேன். ஆனா நீ திருந்திருவேன்னு நம்புறேன்’’ என்றார்.

‘‘அம்மா! என்னை மன்னிச்சிருங்க’’ என்று அவன் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டேன்.

‘‘நான் உன் அத்தை தம்பி. அம்மா இல்லை!’’

‘‘இல்லை, அம்மாதான்’’ என்று சொன்னபடி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். அந்தக் கண்ணீர், அவன் மனதில் இருந்த அழுக்கு அனைத்தையும் சுத்தப்படுத்தி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu