சிறந்த தம்பதி யார்?

சிறந்த தம்பதி யார்?

எந்த விஷயத்திலாவது கருத்து வேறுபாடு வரும்போது, யார் விட்டுக் கொடுப்பது என்று போட்டி போட்டு, கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் விட்டுக் கொடுப்பதுதான் சிறந்த வாழ்க்கை என நிறைய பேர் நினைக்கிறார்கள்.
வெறுமனே விட்டுக் கொடுத்து வாழ்கிறவர்கள் சிறந்த கணவன் & மனைவி இல்லை. புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால்தான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லாவிட்டால் எஜமான்-அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். யார் எஜமான், யார் அடிமை என்பது சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி மாறும்!
‘ஏன்’ என்று கேட்க முடியாதபடி ஒருவருக்கு வாழ்க்கை அமைந்துவிட்டால், எப்போதும் ‘விட்டுக் கொடுத்து’ மட்டும்தான் வாழ முடியும். தனக்காக வாழ்க்கைத்துணை என்ன விட்டுக்கொடுத்தார் என்று யோசித்துப் பார்த்தால், ஒரு பெரிய பூஜ்ஜியம் மட்டுமே அங்கு இருக்கும். தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டுக்கொடுத்து இப்படி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லையே?
ஒருத்தர் மாற்றி இன்னொருத்தர் அடிக்கடி எதற்காவது விட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஏதோ ஒரு நேரத்தில் ஈகோ வந்து ஆட்டிப் படைத்துவிடும். ‘‘எத்தனை முறை நானே விட்டுத் தர்றது… 10 முறை நான் விட்டுக் கொடுத்தேன். 4 முறைதான் நீ விட்டுக் கொடுத்திருக்கிறாய்’’ என்று கணக்குப் போட ஆரம்பித்து விடுவோம். கணக்குகளின் எண்களுக்கிடையே வாழப்படுவதில்லை வாழ்க்கை.
தினம் மூன்று வேளையும் சமைத்து, கணவனின் தேவைகளை கவனித்து, வீட்டைப் பராமரித்து, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது மட்டும் மனைவியின் வேலை இல்லை. அப்படி மட்டும் செய்தால், கணவனுக்காக மனைவி விட்டுக் கொடுத்து வாழ்வதாக அர்த்தம். வேலைக்குப்போய் உழைத்து குடும்பத்துக்காக சம்பாதித்து வந்து, மனைவிக்கு புடவை, நகை எடுத்துக் கொடுப்பது மட்டும் கணவனின் வேலை இல்லை. அப்படிச் செய்தால், அவர் மனைவிக்காக விட்டுக் கொடுத்து வாழ்வதாக அர்த்தம்.
ஒவ்வொருத்தரிடமும் இருக்கும் திறமைகள் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும். மனைவி என்றால் இந்த வேலைதான் பார்க்க வேண்டும், கணவன் என்றால் இந்த வேலைதான் பார்க்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல் இருக்க வேண்டும். எங்கே செல்வதாக இருந்தாலும் தம்பதியாகவே போக வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் சேர்ந்துதான் எடுக்க வேண்டும்.
வெறுமனே விட்டுக் கொடுத்து மட்டும் வாழ்ந்தால் கஷ்டமாக இருக்கும்; அதையே புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்தால் ஈஸியாக இருக்கும்.

பால் காய்ச்சும்போதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் விட்டுத்தான் காய்ச்சுவார்கள். பாலை அப்படியே காய்ச்சிக் குடிப்பது உடலுக்கு நல்லதில்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். குடும்ப வாழ்க்கையில் கணவன் - மனைவி எவ்வளவு உண்மையாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை இந்த பால் காய்ச்சும் செயல் உணர்த்தும்.
தண்ணீரும் பாலும் இணைபிரியாத ஜோடி. அதை ரொம்ப உணர்ந்த காரணத்தால்தான் பால்காரர் நம் வீட்டுக்குக் கொடுக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே பாலில் தண்ணீரைக் கலந்து ஊற்றிவிடுவார். இணைபிரியாமல் ஒரு தம்பதி இருந்தாலே, பிரிப்பதற்கு நிறைய சோதனைகள் வரும். அவை எந்த ரூபத்திலும் வரலாம். சேர்ந்து இருக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டால், எந்த தீய சக்தி பிரிக்க நினைத்தாலும் பொங்கி எழுந்து விடுவார்கள். எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கிற இந்த விஷயத்தை, தினமும் வீட்டில் பால் காய்ச்சும்போது பார்க்க முடியும்.
பாலில் இருக்கும் தண்ணீரை ‘ஆவியாக்கி’ பிரிக்கிற வேலையை தீ செய்ய ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக… பாலுக்குள் இருக்கிற தண்ணீர் ஆவியாகி பாலை விட்டுப் பிரிந்து போகும். தண்ணீர் தன்னைவிட்டுப் பிரிந்துபோகிறது என்பது தெரிந்ததும், பால் சும்மா இருக்காது. அப்படியே பொங்கி எழுந்து பாத்திரத்துக்கு மேல்வரை நிரம்பி வழியும். எந்தத் தீ தன்னையும் தண்ணீரையும் பிரித்ததோ, அந்தத் தீயை பால் அணைத்து விடும்.
தண்ணீர் ஆவியானதற்குப் பிறகு பால் பொங்காமல் தடுக்க வேண்டும் என்றால், பொங்கி வரும் பால்மீது கொஞ்சம் தண்ணீரை விட வேண்டும். பால் அப்படியே அடங்கிவிடும். பொங்கிவரும் அதே வேகத்தில் பால் அடங்கும்! தன்னை விட்டுப் பிரிந்த தண்ணீர் மீண்டும் வந்து சேர்ந்துவிட்டதே என்ற சந்தோஷம் அதில் தெரியும்.
இரண்டறக் கலப்பது என்பதை செய்கைகளில், வார்த்தைகளில், வாழ்க்கையில் உணர்த்துவதே இனிக்கும் இல்லறம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu