காந்தி துளிகள்!

காந்தி துளிகள்!

  • காந்திஜிக்குத் திருமணம் நடந்தபோது அவரது வயது 13. இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தைத் திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார்.
  • காந்தி மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், ‘பிரேதப் பரிசோதனையில் பிணங்களை அறுத்துச் சோதிப்பது நம் குடும்ப மரபுக்கு ஆகாது’ என அவரது சகோதரர் தடுத்துவிட்டார். காந்தி மருத்துவம் படித்திருந்தால் மகத்தான மருத்துவராக இருந்திருப்பார். அவரது வாழ்க்கை மாறியிருக்கும். ஆனால், இந்தியா மாபெரும் தலைவனை இழந்திருக்கும்.
  • காந்தியின் குடும்ப நண்பரான ஜோஷி, ‘இங்கிலாந்து போய் மூன்று ஆண்டுகள் சட்டம் படித்துத் திரும்பினால் நல்ல வேலையும் நிறைய சம்பளமும் கிடைக்கும்’ என்று வழிகாட்டினார். அந்த யோசனையைக் காந்தியின் குடும்பம் ஏற்றுக் கொண்டது.
  • 1930ம் ஆண்டு புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகையால் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் காந்தி.
  • முதன்முதலில் காந்தியை ‘மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர். 1915ம் ஆண்டு சாந்தி நிகேதனுக்கு காந்தியடிகள் சென்று தாகூரைப் பார்த்து, ‘நமஸ்தே குருதேவ்’ என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். உடனே தாகூர், ‘நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா’ என்று சொல்லி வணங்கினார். அன்றுமுதல் அவர் மகாத்மா.
  • புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்திக்கு, மிகவும் பிடித்த எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடன் காந்தி அதிக நட்புறவு கொண்டிருந்தார்.
  • லண்டனில் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பும்போது, ரோமன் ரோலந்தை முதன்முதலாக சந்தித்தார் காந்தி. அப்போது ரோலாந்தை தனக்காக பியானோ வாசிக்கச் சொல்லி கேட்கிறார், அவரும் மகிழ்ந்து பீத்தோவனின் பிரபலமான இசைக் கோர்ப்பை வாசித்துக் காட்டினார்.
  • தென் ஆப்ரிக்காவில் அவர் இருந்தபோது அங்கு உள்நாட்டுப் போர் நடந்தது. அப்போது காயமடைந்த பிரிட்டிஷ் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, இந்தியர்களை ஒருங்கிணைத்து ஒரு தொண்டர்கள் பிரிவைத் துவக்கினார்.
  • ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் வெளிவந்த இண்டியன் ஒப்பீனியன், ஹரிஜன், யங் இண்டியா போன்ற பல பத்திரிகைகளுக்கு காந்திஜி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  • மகாத்மா காந்திஜியின் சுயசரிதையான ‘சத்தியசோதனை’, 1927ம் ஆண்டு வெளியானது. அது, 20ம் நூற்றாண்டின் 100 முக்கிய புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • தென் ஆப்பிரிக்காவில் அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக பணத்தைக் குவித்தாலும் அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சக இந்தியர்கள் அங்கே வறுமையில் வாடினர். பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் துன்பத்தைப் போக்க வருமானத்தின் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார்.
  • ஒரு முறை காந்தி உடுத்தியிருந்த வேட்டி கிழிந்திருந்தது. அதைப் பார்த்த ஒருவர், ‘‘பாபு! உங்கள் வேட்டி கிழிந்திருக்கிறது’’ என்று சொன்னார். காந்தி குளியல் அறைக்குச் சென்று, கிழிசல் வெளியே தெரியாமல் வேட்டியைத் திருப்பி உடுத்திக் கொண்டு வந்தார். ‘‘பார்! எங்கே கிழிந்திருக்கிறது? இந்த வேட்டியில் கிழிய இன்னும் நிறைய இடமிருக்கிறது’’ என்றார். கிழிந்த துணிகளைத் தானே தைத்துக் கொள்வார் காந்திஜி.
  • காந்திக்கு உயர் ரத்த அழுத்த நோய் இருந்தது. ஆனால் அதனால் அவர் சிடுசிடுப்பாகவோ, கோபத்துடனோ நடந்து கொள்ளவில்லை. அந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருந்தார்.
  • டெல்லியிலுள்ள காந்தி மியூசியத்தில் காந்தியின் இதய ஒலியைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். காந்தியின் இதயம் துடிப்பதைப் பார்வையாளர்கள் அங்கு கேட்க முடியும்.
  • காந்திஜி மறைந்த அன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் இலங்கை வானொலி நிலையம் 24 மணி நேரத்திற்கு எந்த நிகழ்ச்சியையும் ஒலிபரப்பவில்லை. முழுமையாக மௌன அஞ்சலி செலுத்தியது.
  • 1948ம் ஆண்டு காந்திஜியின் உடலைச் சுமந்து சென்ற அதே பீரங்கி வண்டி, 1997ல் அன்னை தெரசா உடலையும் சுமந்து சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu