இரண்டு விருப்பங்கள்!

இரண்டு விருப்பங்கள்!

அந்தப் பிரபல ஹோட்டலுக்கு வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கினான் ஒரு இளைஞன். அவன் கூடவே காரிலிருந்து இறங்கியது ஒரு நெருப்புக்கோழி. இருவரும் ஒரு டேபிளில் சாப்பிட உட்கார்ந்தார்கள். உணவு பரிமாற ஓர் இளம்பெண் வந்து வணங்கி நின்றாள். மெனு கார்டைப் பார்த்துவிட்டு, சூப், சாப்பாடு, ஐஸ்கிரீம் என அவன் வரிசையாக ஆர்டர் செய்தான். ‘‘ஆமாம்... ஆமாம்... எனக்கும் அதுவே வேண்டும்’’ என்றது நெருப்புக்கோழி.

இருவரும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். பில் வந்தது. 1640 ரூபாய். அவன் ஏதாவது கிரெடிட் கார்டை எடுத்து நீட்டுவான் என நினைத்தாள் பரிமாறியவள். ஆனால் அவன் தனது சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டுப் பணத்தை எடுத்து, எண்ணிப் பார்க்காமல்கூட அப்படியே வைத்துவிட்டு எழுந்து போனான். இவள் போய்ப் பார்த்தபோது மிகச் சரியாக 1640 ரூபாய் இருந்தது. அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

அடுத்த நாளும் அதேபோல இருவரும் வந்தார்கள். அவன் ஏதேதோ ஆர்டர் செய்தான். ‘‘ஆமாம்... எனக்கும் அதுவே கொண்டு வாருங்கள்’’ என்றது நெருப்புக்கோழி. இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள். 1734 ரூபாய்க்கு பில் வைத்தாள். அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து நேற்று போலவே பணம் எடுத்து, அப்படியே வைத்துவிட்டுப் போனான். எண்ணிப் பார்த்தாள். மிகச் சரியாக இருந்தது.

மூன்றாவது நாளும் அவர்கள் வந்தார்கள். எல்லாம் வழக்கம் போலவே நிகழ்ந்தது. அவன் பாக்கெட்டில் கைவிட்டு, 1526 ரூபாயை எடுத்து வைத்துவிட்டு எழுந்தபோது அவளால் தன் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவன் பின்னாலேயே சென்றாள். ‘‘எப்படி சார் இது? எப்போதும் பாக்கெட்டில் கையைவிட்டு மிகச் சரியான சில்லரையை எடுக்கிறீர்கள்? என்னால் நம்பவே முடியவில்லை’’ என்றாள்.

அவன் சின்ன தயக்கத்துக்குப் பிறகு சொன்னான்... ‘‘சில மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்தபோது ஒரு பழைய விளக்கு கிடைத்தது. அதைத் துடைத்தபோது, அதற்குள்ளிருந்து ஒரு பூதம் வந்தது. அதை விடுதலை செய்ததற்காக எனக்கு இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னது. கொஞ்சம் யோசித்துவிட்டு எனது முதல் வரத்தைக் கேட்டேன்... ‘எப்போது எதை வாங்க முடிவு செய்தாலும், என் பாக்கெட்டில் கைவிட்டதும் மிகச் சரியான சில்லரை வர வேண்டும்’ என்பதே நான் கேட்ட முதல் வரம்!’’

‘‘புத்திசாலித்தனமாகக் கேட்டிருக்கிறீர்கள். கோடிக்கணக்கில் பணம் வேண்டும், கிலோ கிலோவாக தங்கம் வேண்டும் என்று மற்றவர்கள் கேட்டிருப்பார்கள். ஆனால் அதையெல்லாம்விட, இந்த வரத்தின் மூலம் நீங்கள் வாழ்நாள் முழுக்க பணக்காரராக இருப்பீர்கள்’’ என்றாள் அந்தப் பெண்.

‘‘ஆமாம்! ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கினாலும், என் பாக்கெட்டில் போதுமான பணம் வரும். பத்து கோடி ரூபாய்க்கு ஒரு பெரிய வீடு வாங்கினாலும் வரும். பத்து ரூபாய்க்கு ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கினாலும் வரும்...’’ என்றான் அவன்.

‘‘அது சரி... இந்த நெருப்புக்கோழி மேட்டர் என்ன?’’ என்று திரும்பவும் கேட்டாள் அவள்.

அவன் வெட்கத்தோடு தலையைக் குனிந்துகொண்டு சொன்னான். ‘‘எனக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை வேண்டும் என ஆசைப்பட்டேன். உயரமான, ஒல்லியான, கச்சிதமான உடலமைப்பு கொண்ட, நீண்ட கால்களைக் கொண்ட, நான் எதைச் சொன்னாலும் அதை ஆமோதிக்கிற ஒரு துணை வேண்டும் எனக் கேட்டேன். பூதம் என்ன புரிந்துகொண்டதோ... இதைக் கொடுத்தது!’’

‘வெறும் அழகும், எதைச் சொன்னாலும் வாய்மூடி ஒப்புக்கொள்கிற குணமும் மட்டுமே ஒரு மனைவிக்குப் போதும்’ என நினைக்கிறவர்களுக்கு இப்படித்தான் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu