மதிப்பிற்குரியவர்களுக்கு...4

மதிப்பிற்குரியவர்களுக்கு...4

‘நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?’

- இந்தக் கேள்விக்கு ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என்று பள்ளி மாணவர்கள்கூட பதில் சொல்லிவிடுவார்கள். ‘நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா’ என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது.

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன்பு, தன் காலடி தடத்தைப் பதித்து வரலாற்றில் இடம் பெற்றிருக்க வேண்டியவர் எட்வின் சி.ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்கை சுமந்து சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்.

ஆல்ட்ரின் அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்தவர். நீண்ட அனுபவம் உடையவர். மேலும் விண்ணில் நடை பயின்ற அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்க கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தன்னம்பிக்கையும் தைரியமும் உடையவர் என்பதால், நிலவுக்குச் செல்லும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்திற்கு இணை விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இருவருக்கும் தகுதியும் திறமையும் இருந்தாலும், அனுபவத்தின் அடிப்படையில் தலைமை பைலட்டாக நியமிக்கப்பட்டார் ஆல்ட்ரின். இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிலிருந்து ‘பைலட் முதலில் செல்லுங்கள்’ என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். ‘நிலவில் முதன்முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவி ஈர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதைமணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்? எரி மணலாக இருந்து காலைப் பொசுக்கிவிட்டால்..?’

இப்படி பல எண்ணங்கள் அவர் மனதில் வந்து போயின. ஆல்ட்ரினின் தயக்கம், சில நொடிகள் அவருடைய செயல்களை நிறுத்தியது. அனுபவம் இருந்தும் தன்னம்பிக்கையில் சின்ன கீறல் விழுந்தது.

அதற்குள் நாசாவில் இருந்து ‘இணை விமானி அடுத்து செல்லவும்’ என்று இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடியே நிலவில் காலடி எடுத்து வைத்தார். அவரிடம் எந்தத் தயக்கமும் இல்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலை செய்யப் போகிறோம் என்கிற பெருமிதம், அவருடைய தன்னம்பிக்கையைப் பல மடங்கு அதிமாக்கியது.  

காலாகாலத்திற்கும் ‘நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தவர்’ என்ற வரலாற்று நிகழ்வில் ஒருவரின் பெயர் மறைந்தது. ஒரு புதுப்பெயர் முளைத்தது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட, தன்னம்பிக்கை இல்லாததுதான், ஆல்ட்ரினுடைய காலில் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

நீல் ஆம்ஸ்ட்ராங்கின் தன்னம்பிக்கை அவருடைய கால்களுக்கு வலு சேர்த்தது. நடுக்கத்திற்குப் பதிலாக, உறுதியைத் தந்தது. அழுத்தமாக தன்னுடைய காலடித் தடத்தை எடுத்து வைத்து, மனித இன வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றார்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் இதுபோன்ற தருணங்களும், நிகழ்வுகளும் நிறைய உண்டு. மதில் மேல் பூனையாக நிற்கிறது தன்னம்பிக்கை. அந்தப் பூனை சரியான பக்கத்தில் குதித்தால் அது வெற்றியாகவும், குதிக்காமல் போனால் தோல்வியாகவும் கணக்கெடுக்கப்படுகிறது.

வேட்டி கட்டும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்று எல்லோரும் தயங்கியதோடு, அந்தத் தொழிலில் இருந்தே வெளியேறினார்கள். அந்த நேரத்தில், ‘நான் வேட்டியை மட்டுமே விற்பனை செய்வேன்’ என்று சொன்னதும் வேடிக்கையாகப் பார்த்தவர்கள் உண்டு.

பிரபலமான ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனம், ஆப்ரிக்க நாடுகளில் விற்பனையைத் தொடங்க முடிவெடுத்ததாம். ‘அங்கு விற்பனை தொடங்கினால் லாபம் கிடைக்குமா?’ என்று சர்வே செய்ய இரண்டு ஜாம்பவான்களை அனுப்பினார்களாம். ‘இந்த நாடுகளில் யாருக்கும் காலில் செருப்பு அணியும் பழக்கம் இல்லை. காலணி என்றால் என்னவென்று கேட்கிறார்கள். இங்கு தொழில் ஆரம்பித்தால் நஷ்டம்தான்’ என்று சீனியர் ஜாம்பவான் உறுதியாகச் சொல்லிவிட்டார். இன்னொருவர், ‘இங்கு யாருமே இன்னும் செருப்பு அணியும் பழக்கத்தில் இல்லை. அவர்களுக்கு சுகாதாரத்தைப் புரியவைத்தால், காலணிகள் அமோக விற்பனையாகும். போட்டியாளர்கள்கூட யாரும் இல்லை. வெற்றி நிச்சயம்’ என்று உறுதியாகச் சொன்னாராம்.

‘வெண்ணிற ஆடைகளை’ தரமாக உற்பத்தி செய்து, இன்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து, மக்களின் நன்னம்பிக்கையைப் பெற்றுள்ள ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தன்னம்பிக்கைதான் ஆழமான வேர்.

‘முடியாது - முடியும்’ என்ற இரண்டு வார்த்தைகளில்தான் தினமும் நாம் கண்விழிக்க வேண்டியிருக்கிறது. ‘நம்மால் முடியாது’ என்ற எதிர்மறை சிந்தனை, நம்மை முடக்கிப் போட்டு விடுகிறது. ‘நம்மால் நிச்சயம் முடியும்’ என்கிற தன்னம்பிக்கை மந்திரம், நம்மை வெற்றியின் அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும். இது வெறும் அறிவுரை அல்ல... முப்பது ஆண்டுகளுக்கும் மேலான என்னுடைய அனுபவம்.

‘வெறும் விரல்கள் என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பார்கள். வெறும் விரல்கள் என்று நினைத்தால், உடலும் மனமும் சோம்பல் அடைகிறது. ‘இந்த விரல்கள் என்னுடைய ஆயுதம்’ என்று நினைத்தால் அதுதான் நம்மை ஏற்றிவிடுகிற ஏணி. ஒரு செயலை நம்பிக்கையோடு தொடங்கினால், ‘வீண் முயற்சி’ என்று சொன்னவர்கள்கூட ‘விடா முயற்சி’ என்று பாராட்டுகிற நிலை நிச்சயம் வரும்.

வாழ்க வளமுடன்..!

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர், ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu