மதிப்பிற்குரியவர்களுக்கு...8

மதிப்பிற்குரியவர்களுக்கு...8

வணக்கம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக இருந்த அனைத்தும் அத்தியாவசியத் தேவையாகி விட்ட காலம் இது. நம்பரைச் சுழற்றி தொலைபேசியில் பேசுகிற அனுபவம், பிறவி பணக்காரருக்கு மட்டுமே வாய்ப்பு. அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் தொலைபேசி இருந்த காலத்தில், ‘இந்தா போன் பண்ணிக்கோ’ என்று யாராவது வாய்ப்பு தந்தாலும், மறுமுனையில் அழைத்துப் பேச பெரும்பாலானவர்களுக்கு ஆள் இருக்காது. ஒரு பணக்காரர் இன்னொரு பணக்காரரை மட்டுமே அழைக்க முடியும். இன்று வீட்டிற்கு குறைந்தது நான்கு செல்போன்களாவது இருப்பது நிதர்சனம்.

தூர்தர்ஷனில் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியைக் கறுப்பு & வெள்ளை தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். ஊருக்கு ஒரு டி.வி இருந்த நேரத்தில், டி.வி இருக்கும் வீடு அந்த ஊர் பெரும் பணக்காரரரின் வீடாக இருக்கும். ‘சித்ரஹார்’ என்கிற பன்மொழி பாடல்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒரேயொரு தமிழ்ப்பாடல் இடம்பெறும். அந்தப் பாடலைப் பார்க்க, டி.வி இருக்கும் வீடுகளின் ஜன்னல் ஓரங்களில் எட்டிப் பார்த்தபடி நிறைய பேர் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். இன்று ஒரே வீட்டில் இரண்டு டி.விகள் சாதாரணமாக இருக்கின்றன. இளைஞர்களும், பெரியவர்களும் டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் சண்டை வந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடாக, இரண்டு டி.வி கலாசாரம் வந்தது.

ஏ.சி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் மக்களின் கற்பனைக்குக்கூட எட்டாத கண்டுபிடிப்புகள். துணிகளை ஒரு இயந்திரத்தில் போட்டு துவைத்து எடுக்க முடியும் என்பதை நம்பாத கிராமத்து மனிதர்களும் உண்டு. மின்சாரமே இல்லாத காலத்தில் வாழ்ந்து பழகிய நமக்கு, இன்று இரண்டு மணி நேர மின்வெட்டு வாழ்வை ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறது. காலத்தின் தேவைக்கு ஏற்ப ‘இன்வெர்ட்டர்’ இன்று பெரிய தொழிலாக மாறி இருக்கிறது.

வீட்டில் மனிதர்களைப் போலவே, பொருட்களுக்கும் சம முக்கியத்துவம் வந்துவிட்டது. சில நேரங்களில் மனிதர்களைவிட பொருட்கள் அதிமுக்கியத்துவதோடு இருப்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வீட்டில் கணவரைப் பிரிந்து ஒரு மாதம் இருக்கிற இல்லத்தரசிகளை, மிக்ஸி இல்லாமலோ, கிரைண்டர் இல்லாமலோ, ஃப்ரிட்ஜ் இல்லாமலோ ஒரு மாதம் இருக்கச் சொன்னால் அது சாத்தியமா என்பது பெரிய கேள்வி. வீட்டில் விதவிதமான விஞ்ஞானப் பொருட்களின் ஆட்சியே நடக்கிறது. அவை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்வை, இந்தப் பொருட்கள் எளிமையாக்கி தருகின்றன. நேரத்தை மிச்சப்படுத்தி, அடுத்த வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கின்றன. பொருட்களைக் காசு கொடுத்து வாங்குவது இன்று பெரிய காரியமே அல்ல. வாங்கிய பொருட்களைப் பழுதடையாமல் பராமரிப்பதுதான் இன்று இல்லத்தரசிகளுக்கு பெரிய சவால். ஒரு முறை பயன்படுத்திவிட்டு, பொருட்களைத் தூக்கி எறிகிற ‘யூஸ் அண்ட் த்ரோ’ கலாசாரம், விலையுயர்ந்த பொருட்களுக்கும் வந்துவிட்டது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயரும் அளவுக்கு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. பொருட்களின் ‘வாரண்டி’ முடிந்த பிறகு, ஒரு முறை அந்தப் பொருள் பழுதானாலும், ‘அடுத்த மாடல் வாங்கிக்கோ சார், இதோட ஸ்பேர் பார்ட்ஸ் இப்போ வர்றதில்லை’ என்று சலனம் இல்லாமல் சொல்கிறார்கள்.

உழைத்து சம்பாதித்த பணத்தைப் போட்டு வாங்கும் பொருட்கள், நீண்ட காலம் வரும் அளவு பராமரிக்கத் தெரிந்திருந்தால்தான் பொருட்களின் ஆயுட்காலம் அதிகமாக வரும். சின்னச்சின்ன விஷயங்களில் செய்யப்படுகிற சிக்கனம், நமக்கு பெரிய சேமிப்பாக இருக்கும்.

நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். மின்விசிறி சற்று வேகமாக சுற்றிக்கொண்டிருந்தது. ‘‘எந்தக் கம்பெனி இது. வேகமா சுத்துது’’ என்று விசாரித்தேன். ‘‘இன்வெர்ட்டர்ல ஓடுங்துங்க. அதான் வேகமா சுத்துது’’ என்றார். ‘‘ஏன், மின்சாரம் இல்லையா?’’ என்று கேட்டபோது, அவர் பயனுள்ள பராமரிப்புக் குறிப்பு ஒன்றைச் சொன்னார். ‘‘இப்போ முன்ன மாதிரி அதிகம் கரன்ட் கட் இல்லை. ஆனா, இன்வெர்ட்டர் சார்ஜ் ஏறி ரெடியா இருக்கும். கரன்ட் இருந்தாலும், அதை நிறுத்திட்டு இன்வெர்ட்டர் போட்டுக்கிட்டா மின்சாரக் கட்டணம் மிச்சம் ஆகுதுங்க. வாங்கின பொருளும் பயன்பாடு இல்லாம இருந்து கெட்டுப் போயிடாம பார்த்துக்கலாம்’’ என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வித்தையை சாதாரணமாகச் சொன்னார். இது அவருக்கு மட்டும் பயன்படுகிற குறிப்பு அல்ல. எல்லாருக்கும் தேவைப்படுகிற குறிப்பு.

வீட்டில் நீக்கமற நிறைந்திருக்கிற அத்தியாவசியப் பொருட்களைப் பராமரிப்பது குறித்த அனுபவங்களை சேகரித்துக்கொள்வது அவசியம்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..!

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர்- ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu