மதிப்பிற்குரியவர்களுக்கு...11

மதிப்பிற்குரியவர்களுக்கு...11

வணக்கம்.

இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவை, உதாரண புருஷர்கள். ‘இவரைப் போல வாழ வேண்டும்’ என்று தூண்டுகிற நல்ல மனிதர்கள்தான் இந்த உலகத்தின் சொத்து. யாரை நாம் ரோல் மாடலாக நினைக்கிறோமோ, அதுவே நாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைவர்கள், அறிஞர்கள், ஆன்மிக வாதிகள் என நம் குழந்தைகளுக்கு சிறந்தவர்களை முன்னுதாரணமாக அடையாளம் காட்டினால், அவர்கள் வாழ்க்கை சிறக்கும். உலகம் தழைக்கும்.

நான் என் வாழ்வில் ‘ரோல் மாடல்’ என நினைக்கும் மாமனிதர், திரையுல மார்க்கண்டேயர் நடிகர் சிவகுமார். ‘ஒழுக்கம் உயிரை விட மேலானாது’ என்பதை பள்ளியில் படித்திருக்கிறேன். அந்த வரிகளுக்கு, என் கண் முன்னால் வாழும் உதாரணமாக இருக்கிறார் சிவகுமார் அண்ணன். ‘‘நான்கு பேர் மத்தியில் ஒழுக்கமாக இருப்பதைவிட, யாருமில்லாத ‘நான்கு சுவருக்குள்’ ஒழுக்கமாக இருப்பதே முக்கியம்’’ என்று சொல்வார் அவர். சொல்லைப் போலவே அவர் வாழ்வும் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். நல்ல சூழல் அமையும்போது மட்டும் நல்ல சிந்தனைகளைத் தாங்கி நிற்பதில் பெருமை இல்லை. சோதனை வரும்போதும் சத்தியத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதை வாழ்வில் தொடர்ந்து பின்பற்ற, எனக்கு உந்துசக்தியாக அவர் இருக்கிறார்.

சிவகுமார் அவர்களின் வாழ்க்கைப் பயணம், எந்த வசதி வாய்ப்பும் அற்ற சூழ்நிலையில் பிறந்து வளரும் கோடிக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கைப் பாதை. ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற அவரின் வாழ்க்கை அனுபவ நூல், ஏழ்மை நிலையிலிருந்து வாழ்வில் உயர நினைக்கிற அனைவருக்கும் கலங்கரை விளக்கம். சினிமாத் துறை, மனித பலவீனங்களை எளிதில் சோதித்து விடும். ஒழுக்கத்திற்கு எதிரான அனைத்தும் எளிதில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும். மன உறுதி குலையாமல் பிறர் போற்றும் வாழ்வை வாழ்வது அண்ணனின் நிஜமான சாதனை.

பெற்றோர் இந்த சமூகத்திற்கு ஆற்றக்கூடிய மிகப்பெரிய தொண்டுகளில் முதன்மையானது, சமூகப் பொறுப்புள்ள பிள்ளைகளை வளர்ப்பதுதான். அந்த வகையிலும் சிவகுமார் அண்ணனின் குடும்பம், தமிழகத்தின் செல்லக் குடும்பம். ‘இப்படி பெற்றோர் அமைய வேண்டும்’ என்று பிள்ளைகளும், ‘இப்படி பிள்ளைகள் இருக்க வேண்டும்’ என்று பெற்றோர்களும் விரும்புகிற நிலையை சிவகுமார் அவர்களின் சீரிய வாழ்க்கை உருவாக்கியிருக்கிறது.

ஐம்பது வயது ஆகிவிட்டால், உடலிலும் மனதிலும் பலருக்கு முதுமை பூத்து விடுகிறது. ஆனால் எந்த வயதிலும், அக்கறையோடும், கடின உழைப்போடும் எடுத்துக்கொண்ட பணியைச் செய்தால், அதில் முத்திரை பதிக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறார் அவர். தமிழ்த் திரையுலகில் இரண்டு மகன்களும் உச்ச நட்சத்திரங்கள் ஆகிவிட, ‘இனி அரிதாரம் பூசுவதில்லை’ என்கிற முடிவை மேற்கொண்டாலும் அவர் ஓய்வு எடுக்கவில்லை. பேச்சாளராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக புதிய அவதாரங்கள் எடுத்தார். 100 பாடல்களில் கம்பராமாயணத்தை எளிமையாக அவர் விளக்கியபோது அறிஞர்களே வியந்தனர். சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பற்றியும், தன் வாழ்வில் இடம்பெற்ற பெண்கள் குறித்தும் அவர் ஆற்றிய உரைகள், தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்தின. கடும் பயிற்சிக்குப் பிறகு அவர் ஆற்றிய உரைகள் நூல்களாக வெளிவந்து பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. டி.வி.டி.களாக வலம் வந்து, பல வீடுகளில் பயனுள்ள பொழுதுபோக்காக மாறின.

உடலிலும் சிந்தனையிலும் நடுக்கம் வருகிற வயதில், இளைஞர்களுடன் போட்டி போடுகிற உடல் ஆரோக்கியத்தோடு சமூகத்திற்கு நல்ல பணியை ஆற்றி வருகிறார் அவர். அவருடைய சீரிய முயற்சியின் மகுடமாக விளங்கியது, மகாபாரத உரை. ஈரோடு கொங்கு மகளிர் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகளின் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது இன்னும் என் செவிகளில் எதிரொலிக்கிறது. 2 மணி நேரம் பேசுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்த சிவகுமார் அண்ணனின் முயற்சிக்கே தலைவணங்கலாம்.

ராமாயணம் போல மகாபாரதம் சொல்வது சுலபம் அல்ல. சின்ன வயதிலிருந்து பாட்டி சொன்ன கதைகளாகவும், நாடகங்களாகவும், தொலைக்காட்சித் தொடராகவும், நூல்களாகவும் நம் வாழ்க்கையில் நெருங்கிய தொடர்புடைய மகாபாரதம், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கோணத்தில் புதிய பொருளை வழங்கும் வாழ்வியல் சுரங்கம். ‘மகாபாரதத்தில் சொல்லப்படாத எதுவும் புதிதாக நடந்துவிடாது’ என்பார்கள்.

சின்னத் தடுமாற்றம்கூட இல்லாமல், மடை திறந்த வெள்ளமாக சிவகுமார் அவர்கள் நிகழ்த்திய மகாபாரத உரையில் இடம்பெற்ற கிளைக்கதைகள் என்னை நிறைய சிந்திக்க வைத்தன. ஏற்கனவே அறிந்த கதைகளுக்கும் புதிய அர்த்தம் சொல்லி விளக்கினார்.

மனிதர்கள் தமக்கு உரிமையானதை விட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே ராமாயணம்; அடுத்தவருக்கு உரிமையானதை விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே மகாபாரதம். இரண்டு இதிகாசங்களும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே கவனப்படுத்துகின்றன.

மகாபாரத யுத்தம் நடைபெற காரணமாக இருந்தவர் சகுனி. அவரின் சாணக்கியத்தனம் அதர்மத்தை நோக்கியே இருந்தது. யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர் கிருஷ்ணர். அவருடைய சாணக்கியத்தனம் தர்மத்தை நோக்கியே இருந்தது. வாழ்க்கைக்கு சாணக்கிய தனம் என்பது தேவைதான். ஆனால்,  அது தர்மத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே மகாபாரதத்தின் அடிப்படை.

சிவகுமார் அவர்களின் மகாபாரத உரை, இந்திய தேசத்தின் மகத்தான ஒரு இதிகாசத்தை அறிந்துகொள்ள நமக்குத் துணையாக இருக்கும். நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை நமக்கு உணர்த்தும். நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்கிற கேள்வியை நமக்குள் எழுப்பும். இளைய தலைமுறையினர் ஆரோக்கியமாக சிந்திக்கவும் செயல்படவும் இது போன்ற உரைகள் வழிகாட்டும். ஒருவகையில் இது சிவகுமார் அண்ணன் ஆற்றுகிற சமுதாய சேவையாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம், அவரின் உரைவீச்சுகளை தொலைக்காட்சி மூலம் கோடிக்கணக்கான உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதை பெருமிதமாகச் செய்து வருகிறது. .

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..!

கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu