மதிப்பிற்குரியவர்களுக்கு...15

மதிப்பிற்குரியவர்களுக்கு...15

வணக்கம்.

‘பிறை நிலாவைப் பார்த்து, இரண்டு பக்கமும் குறுகி இருக்கிறது என்கிறார்கள். இல்லை, அது இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கிறது’ என்று இக்பால் என்கிற கவிஞர் எழுதி இருந்தார். ரொம்ப நேரம் மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்த சிந்தனை இது. எல்லாமே நாம் பார்க்கிற பார்வையில்தான் இருக்கு. ‘கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் அங்கு இல்லை.. கடவுள் மட்டும் தெரிந்தால் அது கல்லாய் இருக்க வாய்ப்பில்லை’னு நம் முன்னோர்கள் தெளிவாச் சொல்லிட்டுப் போன விஷயம்தான்.  

எந்த விஷயத்திலேயும் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. எந்த வேலையா இருந்தாலும் அதுக்கு பாசிட்டிவ் பக்கமும் உண்டு; நெகட்டிவ் பக்கமும் உண்டு. எந்தப் பக்கம் நாம் நிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம். ஒரு வேலையைப் புதுசா ஆரம்பிக்கும்போது, அதோட நெகட்டிவ் பக்கத்தைப் பார்த்தா அடுத்த அடி எடுத்து வைக்க முடியாது. முதல் முயற்சியிலேயே சோர்வு வந்துடும்.

கடல் பார்த்த முதல் மனிதனுக்கு, கடல் ஆபத்தான விஷயமா தெரிஞ்சுது; உயிருக்கே உத்தரவாதம் இல்லன்னு நினைச்சிருந்தா நீச்சல்னு ஒரு கலை தெரியாமலேயே போயிருக்கும். கட்டுமரத்துல இருந்து கப்பல் வரைக்கும் எந்தக் கண்டுபிடிப்பும் நிகழ்ந்திருக்காது. கடல் தண்ணீர் எதுக்குமே பயன்படாது என்று நெகட்டிவாக நினைத்திருந்தால், உணவின் அத்தியாவசிய தேவையா இருக்கிற உப்பு எனும் பொருள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும். ‘மீள முடியாத அளவுக்குக் கடல் ஆழமானது’ன்னு நினைச்சிருந்தா, முத்து எடுத்திருக்க முடியாது. பாசிட்டிவ் சிந்தனைகள் மட்டுமே யாரையும் அடுத்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போகும்.

என்னோட நண்பர் ஒருத்தர், புது வருஷம் பிறக்கிறதா இருந்தா, உடனே ஒரு புது சபதம் எடுத்துடுவார். ‘இந்த வருஷத்துல இருந்து நான் இப்படி இருக்க போறேன்’னு தண்டோரா போடாத குறையா எல்லார்கிட்டேயும், தன்னோடு புது வருஷ சபதம் பத்தி விரிவா சொல்லுவார். ‘இந்த வருஷத்துல இருந்து நான் அசைவம் சாப்பிடப் போறதில்லை’ன்னு ஒரு சபதத்தைப் போன வருஷம் ஜனவரி மாதம் எடுத்தார். அதைக் காரணமா சொல்லி, அடுத்த வருஷத்துக்குத் தேவையான அசைவத்தை டிசம்பர் மாதம் முழுக்க வெட்டு வெட்டுன்னு வெட்டினார். ‘இன்னும் நாலு நாள்... இன்னும் ரெண்டே நாள்’னு கவுன்ட் டவுன் வேற. ஜனவரியில அசைவத்தை விட்டவர், பிப்ரவரியில் திரும்பவும் சாப்பிட ஆரம்பிச்சிட்டார். ‘எதுக்கு மனுஷன் உயிர் வாழணும்... உப்பு சப்பு இல்லாம சாப்பிட்டு அஞ்சு வருஷம் கூட வாழுறதுக்கு, நாக்குக்கு ருசியா சாப்பிட்டு, ரெண்டு வருஷம் முன்னால போய் சேர்ந்தாதான் என்ன தப்பு?’ன்னு அவரே பேச ஆரம்பிச்சிட்டார். இந்த வருஷமும் ஒரு சபதம் எடுத்திருக்கிறதா சொன்னார். ‘‘நீங்க என்ன சபதம் வேணும்னாலும் எடுங்க. ஆனா, ஒவ்வொரு வருஷமும் ரெண்டு சபதம் எடுங்க. ‘இதைப் பண்ணப் போறேன்’னு சொல்றது முதல் சபதம். ‘அதை மறக்காமச் சரியா பின்பற்றணும்’னு சொல்றது ரெண்டாவது சபதம். இரண்டையும் சேர்த்து எடுங்க’ன்னு அவருக்குச் சொன்னேன்.

அவர் மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ‘நேற்றோடு நான் சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு’ன்னு இருப்பாங்க. ‘உறுதியற்ற மனம் மோசம் செய்துவிடும்’ என்று சொல்வார்கள். உறுதியற்ற மனநிலைதான் இருக்கிறதுலேயே மிகப்பெரிய பலவீனம். ‘இன்றிலிருந்து இதை மனப்பூர்வமாகச் செய்யப் போகிறேன்’ என்று நமக்கு நாமே வாக்கு கொடுத்துவிட்டால், அதை எப்பாடு பட்டாவது காப்பாற்ற முயற்சிகள் எடுக்க வேண்டும். திட்டமிட்டு, வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வேண்டும். மனம் இருந்தால்தான் மார்க்கம் தெரியும்.

பத்திரிகையாளராக உள்ள நண்பர் ஒருவர், அவர் மட்டுமின்றி, அவர் குடும்பத்தைச் சேர்ந்த படிச்சு வேலைக்குப் போகிற இளைய தலைமுறையினர் எல்லோரையும் சேர்த்து ஆக்கப்பூர்வமான உறுதிமொழி எடுக்க வைத்தார். அவங்க குடும்பத்தில் இருக்கிற 40 வயசுக்கு மேற்பட்டவங்க எல்லாருக்கும், இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவங்க பணம் போட்டு மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கிறதுதான் அந்த உறுதிமொழி. ‘‘வயசான காலத்துல பசங்க பாத்துக்குவாங்கன்னு நினைச்சுத்தான், பெத்தவங்க தங்களோட சுக துக்கங்களை மறந்து, பிள்ளைகளுக்காக எல்லாம் பண்றாங்க. வயதாகி, அவங்களால முடியாத காலத்துல, பெரியவங்க வீட்டுக்குப் பாரமா ஆகிடுறாங்க. அவங்க உடம்புக்கு ஏதாவது வந்தா, பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிட்டு நல்லா வைத்தியம் பார்க்க, பணம் அதிகம் தேவை. அதை நம் நிகழ்கால நெருக்கடிகள் செய்யவிடாது. மெடிக்கல் இன்சூரன்ஸ் இருந்தா நல்லது. வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாம, ஒரு பாதுகாப்பு உணர்வையும் தர முடியும்’’ எனச் சொன்னார் அவர்.

சிலருக்குப் பிள்ளைகளே இல்லாமகூட இருக்கு. நம்மளோடு நேரடியா சம்பந்தப்பட்டவங்களைப் பார்த்துக்கிறது மட்டும் நம்ம பொறுப்பு இல்லை. நம்ம சுத்தி இருக்கிற, பாதுகாப்பு இல்லாம இருக்கிற பெரியவங்களைப் பார்த்துக்கிறதும் நம்ம கடமை. எல்லாருடைய குடும்பத்துலேயும் இந்த மாதிரி பயனுள்ள ஒரு உறுதிமொழி எடுத்து, மத்தவங்களையும் அதுல இணைத்துக்கொண்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். பாசிட்டிவா யோசிக்கிறதுல நமக்கும் நன்மை, மத்தவங்களுக்கும் நன்மை.

இந்த மாதிரி ஆக்கப்பூர்வமான உறுதிமொழிகள் எடுக்கலாம். பாசிட்டிவ் எண்ணங்களால் வாழ்க்கையை அழகா மாத்தலாம். உறுதியேற்று உளமாரக் கடைப்பிடிப்போம். 

வாழ்க வளமுடன்!

வாழ்க வையகம்!

குரு அருள்!

கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர், ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu