மதிப்பிற்குரியவர்களுக்கு...1

மதிப்பிற்குரியவர்களுக்கு...1

வணக்கம்.

          வேட்டிக்கு ஒரு பிராண்ட் பெயர் வைத்து, நம் பாரம்பரிய உடையான வேட்டியை மதிப்பிற்குரியவர்களின் ஆடையாக மாற்றிய பெருமை கொண்டது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். நற்சிந்தனைகளை நம் மக்களிடம் கொண்டு செல்வதற்காக ‘வெண்மை எண்ணங்கள்’ என்ற மாத இதழை 2012 நவம்பரில் ராம்ராஜ் காட்டன் தொடங்கியது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘வெண்மை எண்ணங்கள்’. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சந்தா செலுத்தி இந்த இதழைப் படிக்கின்றன. ராம்ராஜ் ஷோரூம்களில் ஆடைகள் வாங்க வருவோருக்கு அன்புப்பரிசாகவும் இந்த இதழ் வழங்கப்படுகிறது.

          அச்சிட்ட புத்தகம் வழியாக மக்களைச் சென்றடையும் அதே சிந்தனைகள், டிஜிட்டல் தளத்தில் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே இந்த இணையதளம்.

          உயர்தரமான ஆடைகளை வாங்கும் எல்லோருக்கும் உயர்தரமான எண்ணங்கள் பிடிக்கும். அந்த எண்ணங்கள் உங்கள் வழியாக உலகைச் சேரவேண்டும் என்ற ஆசையில் உருவான முயற்சி இது.

உங்களுக்கு வர்கீஸ் குரியனைத் தெரிந்திருக்கும். தனது 90 வயதில் மறைந்த உன்னதமான மனிதர். இந்தியர்கள் நினைத்து நினைத்துப் பெருமிதப்பட வேண்டிய சாதனையாளர். இந்தியக் குழந்தைகள் பால் கிடைக்காமல் தவித்திருக்க வேண்டிய அவலத்தை, ‘வெண்மைப் புரட்சி’யின் மூலம் மாற்றியவர்.

            குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் ‘அமுல்’ நிறுவனத்தைத் தொடங்கிய நேரத்தில் அவர் 35 வயது இளைஞர். அப்போது இந்தியா தனது தேவைக்குப் பெருமளவு பால் பவுடரை இறக்குமதி செய்துகொண்டிருந்தது. இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில், பசுமாடுகளைவிட எருமைகள் அதிகம். ஆனால் பசும்பாலை மட்டுமே பால்பவுடர் ஆக்கிக் கெட்டுப் போகாமல் பல நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது. எருமைப் பாலைப் பால்பவுடர் ஆக்க முடியாது என உலகமே நம்பிவந்தது.

            ஆனால், இதைச் சாதித்தால் மட்டுமே, வெளிநாடுகளிடம் கையேந்தும் நிலையிலிருந்து இந்தியா விடுபட முடியும் என நினைத்தார் குரியன். அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார். உலக நாடுகளின் பால் பதப்படுத்தும் நிபுணர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். நியூசிலாந்து நாட்டின் பால்பொருள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான வில்லியம் ரிடெட் என்பவர் குரியனைப் பார்க்க நேரிலேயே வந்துவிட்டார். ‘‘இளைஞனே! இந்தச் சிறிய வயதில் நீ காட்டும் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. ஆனால் நீ ஏன் இப்படி ஒரு முட்டாளாக இருக்கிறாய்? தோற்றுப்போவோம் என்று தெரிந்தே ஒரு முயற்சியில் யாராவது ஈடுபடுவார்களா?’’ என்று கேட்டார். ‘‘இதில் நான் ஜெயிப்பேன்’’ என தீர்மானமாகச் சொன்னார் குரியன்.

            ‘அமுல்’ திறப்பு விழாவுக்கு அப்போதைய பிரதமர் நேரு வந்திருந்தார். அவரிடம் குரியனை அறிமுகப்படுத்தினார் மொரார்ஜி தேசாய். ‘‘எருமைப்பாலைப் பவுடர் ஆக்கமுடியாது என நிறைய பேர் இவரிடம் சொல்லிப் பார்த்துவிட்டார்கள். ஆனால் இந்த மனிதர் பிடிவாதமாக அந்த ஆராய்ச்சியில் இருக்கிறார்’’ என குரியன் பற்றிச் சொன்னார் மொரார்ஜி.

            நேரு ஒருகணம் நின்று நிதானமாக குரியனைப் பார்த்தவர், அப்படியே அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார். ‘‘யாராலும் சாத்தியமில்லை எனச் சொல்லப்படுகிற ஒரு விஷயத்தைச் செய்துகாட்டும் திறமை இந்தியர்களுக்கு உண்டு. உங்களைப் போன்றவர்கள் இந்தியாவில் இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

குரியன் அதன்பிறகு அந்த ஆராய்ச்சியில் சாதித்தார். இப்போது இந்தியா உலகின் முன்னணி பால் உற்பத்தி நாடாகத் திகழ்வதற்கு அவரே காரணம். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தியாவில் ஒரு கோடி விவசாயிகள் வாழ்க்கைத்தரம் முன்னேற அவர் காரணமானார். எல்லா விஷயங்களிலும் மேலைநாடுகளை அப்படியே காப்பி அடிக்கும் இந்திய மனநிலைக்கு மாறாக, இந்தக் கூட்டுறவு சங்க மாடலை இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் காப்பியடித்தன.

            ‘ஜெயித்துவிடுவோம்’ என்ற தீர்மானமான எண்ணமும், ‘நம்மால் முடியும்’ என்ற உத்வேகமும் ஒருவருக்குள் உறுதியாக இருந்தால், அவரது வெற்றிப்பாதையில் எந்தத் தடைக்கற்களும் குறுக்கிடாது. குரியனின் வாழ்க்கை சொல்லும் பாடம் இது!

            சின்னச்சின்ன முயற்சிகளால்தான் மிகப்பெரிய வெற்றிகள் சாத்தியமாகின்றன. நான், ‘‘வேட்டி விற்கப்போகிறேன்’’ என்று சொன்னதும், பலரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். ‘‘கலர் கலராக ஃபேஷன் வந்து கொண்டிருக்கும்போது, வெள்ளை நிற வேட்டி சட்டைகளை எப்படி விற்பனை செய்யமுடியும்?’’ என்று கேட்டார்கள். அவர்கள் கேள்வியில் நியாயம் உண்டு. எல்லோரும் முடியாது என்று ஒதுங்கும்போது, அதில் ஜெயித்துக் காட்டுவோம் என்ற எண்ணம் என் மனதில் உறுதியாக இருந்தது. கலர் கலர் ஆடைகள் ஃபேஷனாக இருக்கலாம். ஆனால், ‘வெள்ளை நிற வேட்டி - சட்டை’ என்பது நம் பண்பாடு. கைராட்டையில் கதர் நெய்து உடுத்தி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள் நாம். இங்கு ‘வெண்மை’ எடுபடாமல் போகாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

            ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம் ‘வெண்மை’யில் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கிறது. அதுவே நிறுவனத்தின் தனித்தன்மையாகவும் மாறி இருக்கிறது. பல ஊழியர்களின், நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்திருக்கிறது. கைராட்டையில் நெசவாளர்கள் நெய்து தருகிற வேட்டியில் இருந்து தொடங்கி, இன்று சொந்தமாக மின்சாரம் தருகிற ‘காற்றாலை’ வரை வளர்ந்திருக்கிறோம். ‘மதிப்பிற்குரியவர்களின்’ அடையாளமாக மாறியுள்ள ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் இந்த வளர்ச்சியில் வாடிக்கையாளர்களின் பங்கு மிக அதிகம்.

            நல்ல எண்ணங்களுக்கு வாழ்வை வளமாக்கும் ஆற்றல் உண்டு. ‘உயர்ந்த எண்ணங்களால் இந்த உலகம் நிறைந்திருக்க வேண்டும்’ என்ற ஆசையோடு உருவெடுத்த முயற்சி இது. உங்கள் வாழ்க்கையை வளமாக்க இந்த இணையதளம் உதவும் என நம்புகிறேன். நல்ல எண்ணங்களை வளர்க்கும் கருத்துகளோடு இங்கே சந்திப்போம்.

வாழ்க வளமுடன்!

- கே.ஆர். நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu