மதிப்பிற்குரியவர்களுக்கு - 6

மதிப்பிற்குரியவர்களுக்கு - 6

வணக்கம்.

‘நீங்க ஏன் ஒரு சாமியாரை உங்க விளம்பரங்களில் எல்லாம் போடுறீங்க?’’ என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் குருவாக ஏற்றுக் கொண்ட ‘வேதாத்திரி மகரிஷி’ அவர்களைத்தான், கேள்வி கேட்டவர் ‘ஒரு சாமியார்’ என்று குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது.

என்னுடைய வாழ்வையும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சியையும் ‘மகரிஷிக்கு முன்’ - ‘மகரிஷிக்குப் பின்’ என இரண்டு கட்டங்களாகப் பிரிக்க இயலும். அப்பா, அம்மா சொல்படி கேட்டு நடந்துகொள்கிற பிள்ளை நம் சமூகத்தில் சமத்துப் பிள்ளை. பெற்றோரால் குறிப்பிட்ட அளவுதான் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியும். அதற்குப் பிறகு, ‘உலகம் புரிந்துகொள்ள’ குருவை நம்பித்தான் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு இருக்கும் ஆசிரியர்கள், பிள்ளைகளின் புறவாழ்விற்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ‘ஒவ்வொருவரின் அகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் புறவாழ்வும் இருக்கும்’ என்கிற உண்மை புரியும் வரை, என்னுடைய எல்லா நடவடிக்கைகளும் ‘கணக்கு’ சார்ந்தே இருந்தது. தொழில் என்பது வெறும் ‘வரவு, செலவு, லாபம்’ என்று புரிந்து வைத்திருந்தேன்.

மூடநம்பிக்கையின் பின்னால் போய், ‘எனக்கு மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்கிற தேடலில் நான் ஒரு குருவை அடையவில்லை. என் அன்றாட வாழ்வில், இன்றைய என்னுடைய நிகழ்காலத்தில் நான் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை எனக்குத் தந்ததால் நான் குருவாக வேதாத்திரி மகரிஷியை ஏற்றுக்கொண்டேன். பிறரின் மனதுக்கும் உடலுக்கும் தீங்கு தராத எளிய மனிதனாக வாழ்வதற்கு, மகரிஷியின் வாழ்வும் வாக்கும் எனக்கு உதவியாக இருக்கின்றன. 

ஒரு பேருந்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் பழம் விற்றுக் கொண்டிருந்தார். ‘‘நாலு பழம் பத்து ரூபாய்’’ என்று கூவிக் கூவி விற்கும்போது, இன்னொரு இளைஞன் அதே பேருந்தில், ‘‘ஐந்து பழம் பத்து ரூபாய்’’ என்று கூவினான். எல்லோரும் அவன் பின்னால் ஓடினர். பெரியவருக்கு ஒரு பழம்கூட விற்பனை ஆகவில்லை. தள்ளாத வயதில் விற்றாலும் அவர்மீது யாரும் இரக்கப்படாமல், ஒரு பழம் அதிகம் கிடைக்கும் என்பதால் இளைஞனிடம் மட்டுமே வியாபாரம் செய்தார்கள்.

பரிதாபமாக கீழே இறங்கிய பெரியவரைப் பார்த்து கவலைப்பட்டார் ஒருவர். ‘‘ஒரு இளைஞனால் ஐந்து பழம் பத்து ரூபாய்க்குத் தர முடியும்போது, உங்களால் ஏன் முடியவில்லை. அதனால்தான் உங்களிடம் யாரும் வாங்கவில்லை’’ என்று அறிவுரையும் சொன்னார். அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டு, ‘‘அந்தப் பையன் என்னோட பார்ட்னர். நான் நாலு பழத்துக்கு சொன்ன விலைக்கு, அவன் ஒரு பழம் அதிகம் கொடுத்தா, பழம் வாங்காதவங்களும் வாங்குவாங்க. இதெல்லாம் பிசினஸ் டெக்னிக். ஏமாத்தினாதான் நாலு காசு பார்க்க முடியும்’’ என்று சொன்னதும், அறிவுரை தந்தவர் வாயடைத்துப் போனாராம்.

பெரும்பாலானவர்கள் இப்படித்தான் தொழில் செய்கிறார்கள். மற்றவர்களைப் பற்றியோ, வாடிக்கையாளர்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மகரிஷியை சந்தித்தபோது, ‘‘நேர்மையாகத் தொழில் செய்யுங்கள்... வளமான எதிர்காலம் கிடைக்கும்’’ என்று சொன்னார். அவர் சொன்ன கருத்து, நடைமுறை பிசினஸுக்கு நேர் எதிரான கருத்து. ‘குரு சொல்கிறார், கேட்டுப் பார்க்கலாம்’ என முடிவு செய்தேன். ஒத்து வராமல் போனால், ‘நீங்கள் சொன்னபடி தொழில் செய்ய முடியாது’ என்று நிரூபித்துவிடலாம் என நினைத்தேன். தினமும் ‘மனவளக்கலை’ பயிற்சி செய்து, தியானம் செய்து, குரு சொன்ன படி நேர்மையாகத் தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

பயத்திலும், யாரிடம் என்ன பொய் சொன்னோம் என்ற குழப்பத்திலும் மனம் உழன்று கொண்டிருந்த முந்தைய நிலைக்கும், அதெல்லாம் தேவைப்படாமல் ‘இதுதான் உண்மையான நிலவரம்’ என்று சொன்ன பிறகு இருந்த மனநிலைக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது. எதற்கும் யாருக்கும் அச்சப்படாமல் தொழில் செய்வதில் இருக்கிற ஆனந்தத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.

மகரிஷி ஒருமுறை என்னிடம், ‘‘மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் அரசாங்கம் என்பதையும் ஐந்தாவதாகச் சேர்க்க வேண்டும். அரசு இல்லாமல் நாடு இயங்காது. ஒரு வாரம் அரசு செயல்படாமல் போனால் விலையுயர்ந்த குழாய் போட்டிருந்தாலும் தண்ணீர் வராது. சந்தனத்தால் வீட்டைக் கழுவினாலும், சாக்கடை நாற்றமெடுக்கும். சாலைகள் இருக்காது. மின்சாரம் இருக்காது. அடிப்படைப் பாதுகாப்பு இருக்காது. ஒவ்வொரு குடிமகனுக்கும் இவற்றையெல்லாம் உறுதி செய்வது அரசாங்கம்தான். நாம் தருகிற வரிப்பணத்தில்தான் அரசு இதையெல்லாம் செய்யமுடியும். எனவே, அரசாங்கத்திற்கு ஒழுங்காக வரி கட்டுங்கள்’’ என்று சொன்னார்.

ஒரு குரு இப்படிச் சொன்னால், யார் அவரிடம் போவார்கள்? ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் உண்மையை எங்களுக்கு உணர்த்தினார். முன்பெல்லாம் ‘அரசாங்கம் எங்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குகிறது’ என்ற நினைப்பு, ஒவ்வொரு ஆண்டு வரிகட்டும்போதும் மனதில் வந்து நிழலாடும். இப்போது, ‘நம்முடைய நலனுக்காக வரி கட்டுகிறோம்’ என்கிற மனநிறைவோடு ஒவ்வொரு ஆண்டும் வரி செலுத்துகிறேன். ‘நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன்’ என்று சொல்லும்போது எனக்குள் வருகிற கம்பீரத்திற்கு அளவே இல்லை. நாட்டில் அது சரி இல்லை, இது சரி இல்லை என்று குறை சொல்லுவதற்கு முன்னால், ‘நாம் சரியாக இருக்க வேண்டும்’ என்பதை உணர்த்தினார் மகரிஷி.

ஒரு தனிமனிதன் திருந்தினால், அவன் சார்ந்த நிறுவனமும் திருந்தும் என்பதை என்னால் உணர முடிந்தது. எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிற ஒவ்வொரு ஊழியரும் ‘மனவளக்கலை’ பயிற்சி எடுத்தவர்கள். உடலுக்குத் தேவையான யோகாவும், மனதிற்குத் தேவையான தியானமும் செய்பவர்கள். அதற்கான வசதியை எங்கள் தொழிற்சாலை, அலுவலகம் என எல்லா இடங்களிலும் உருவாக்கி இருக்கிறோம். ‘தரமற்ற பொருளை வாடிக்கையாளர்களிடம் எப்படியாவது தள்ளி விடலாம்’ என்ற சிந்தனை எங்கள் ஊழியர்களுக்குக்கூட வராது.

‘நெசவாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் நலன் பாதிக்காத முடிவுகளைத் துணிந்து எடு. இவர்களில் ஒருவரின் நலன் பாதிக்கும் என்றாலும் அந்த முடிவை கைவிடு’ என்ற தொழில் மந்திரத்தை மகரிஷி எனக்கு சொன்னார்.  இன்றுவரை அதை கடைப்பிடிக்கிறேன்.

நாம் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக இருந்தால், வாடிக்கையாளர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்கள் என்கிற அடிப்படை உண்மையே இன்று ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேராக மாறி இருக்கிறது. ‘பணத்துக்குப் பின்னால் உரிய உழைப்பு இருக்க வேண்டும்’ என்கிற மகரிஷியின் கருத்து எனக்குள் ஆழமாக பதிந்து விட்டதால், தவறான வழியில் பணம் வரும் சந்தர்ப்பத்தை யாராவது சுட்டிக் காட்டினால், ‘எனக்கு வேண்டாம்’ என்று மனச்சலனம் இன்றி சொல்ல முடிகிறது. தொழில் வளர்ச்சிக்காக விமானத்தில் பறந்தாலும், கால் தரையில் ஊன்றி நிற்கிறது. யாரையும் ஏமாற்றாமல் தொழில் செய்யவும், யாரையும் புண்படுத்தாமல் வாழவும் முடியும் என்கிற உண்மையை மகரிஷியின் ‘மனவளக்கலை’ உணர்த்தியது.

‘‘எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன. சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன. செயலில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன. பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன. ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது’’ என்பது மகரிஷியின் தத்துவமாக மட்டும் இருந்திருந்தால் அது என்னை ஈர்த்திருக்காது. அவர் சொன்னபடி என் கண்முன்னே வாழ்ந்து காட்டினார். மகான் மட்டுமே வாழ முடிந்த வாழ்வாக இருந்திருந்தால், அது பயன் இல்லை. எளிய மனிதர்கள் யாராலும் அவர் சொன்னபடி இயல்பாக வாழ இயலும் என்பதே என்னுடைய அனுபவம். எனக்கு முன்னால் தொழிலில் நேர்மையுடன் செயல்பட்டு உயர்ந்த இலக்கை அடைந்து, இன்று மகரிஷியின் ‘மனவளக்கலை’யை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துள்ள எஸ்.கே.மயிலானந்தம் போன்ற என் ‘ரோல் மாடல்’ மனிதர்களின் அனுபவமும் இதுவே.

எங்கேனும் நல்லது ஒன்றைக் கண்டால், ‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று நினைப்பதுதான் நல் மன இயல்பு. அதன் அடிப்படையில்தான் என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் மகரிஷி இடம்பெறுகிறார். அவரை பாப்புலர் ஆக்கும் முயற்சி அல்ல அது. அது அந்த குருவுக்குத் தேவையும் இல்லை. நம்முடைய வாழ்வை வளமாக்கும் நல்லெண்ணத்தின் முதல் படி.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu