மதிப்பிற்குரியவர்களுக்கு...2

மதிப்பிற்குரியவர்களுக்கு...2

வணக்கம்.

          போக வேண்டிய இடத்திற்கு அவசர அவசரமாக ஓடுவதைவிட, நேரத்தில் கிளம்புவதே சரியானது. ஒரு காரியத்தைப் பதறாமல் செய்ய வேண்டுமானால், சரியான நேரத்தில் அந்தக் காரியம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வளவு விலைகொடுத்தாலும் கடந்துபோன ஒரு நொடியைக்கூட வாங்க முடியாது என்பதுதான் காலத்தின் தனித்தன்மை. அது யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை!

          ஓர் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கும்போது, ‘இந்த வருடம் நாம் என்ன செய்தோம்’ என யோசித்துப் பார்ப்போம். ‘இன்னும் உருப்படியாக நிறைய விஷயங்களைச் செய்திருக்கலாமே’ என அப்போது தோன்றும். ஒவ்வொரு 24 மணி நேரமும் கடந்து போகும்போது, நல்லன நினைத்து, நல்லன செய்து, நல்லவண்ணம் மண்ணில் வாழ்வதற்கு ஆக்கப்பூர்வமான பல காரியங்களைச் செய்வதற்கு இன்னும் நேரத்தைச் சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தி இருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தோன்றும்.  

          இந்தியர்களின் சராசரி வயது ‘65 வருடங்கள்’ என்று சொல்கிறார்கள். அதில், தினசரி குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூக்கம் என வைத்துக் கொண்டால், 22 வருடங்கள் தூங்குவதற்கே தேவை. பல் துலக்குவது, குளிப்பது என தினசரி அத்தியாவசியக் கடமைகளான நமது உடல் பராமரிப்புக்கு ஒரு மணி நேரம் என வைத்துக் கொண்டால், அதில் இரண்டே முக்கால் வருடங்கள் ஓடிப் போய்விடும். தினசரி மூன்று வேளை உணவு சாப்பிடுகிறோம். ஒரு வேளை உணவுக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கினாலும், தினம் தினம் அதற்கே ஒரு மணி நேரம் செலவு செய்கிறோம். அப்படிப் பார்த்தால் இதில் இன்னும் இரண்டே முக்கால் வருடங்கள் கடந்து போய்விடும்.    

          வேலை மற்றும் இதர தேவைகளுக்காக என ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணம் செய்ய, பொதுவாக இந்தியர்கள் தங்கள் ஆயுளில் 3 வருடங்கள் செலவழிக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. அதோடு தங்கள் குடும்பத்துக்கு எனத் தங்கள் ஆயுளில் எட்டே கால் வருடங்கள் செலவழிக்கிறார்கள். டி.வி., பார்ப்பதற்குச் சராசரியாகத் தினமும் 96 நிமிடங்கள் செலவழிப்பதாக இன்னோர் ஆய்வு சொல்கிறது. இதைக் கணக்கிட்டால் ஆயுளில் 3.13 வருடங்கள் கரைந்து போகின்றன. ஒவ்வொருவரும் அவர்களுக்கென ஒரு நேரத்தை ஒதுக்குகிறார்கள் அல்லவா... அதைக் கணக்கிட்டால் ஆயுளில் 1.34 வருடங்கள் செலவழிவதாகச் சொல்லப்படுகிறது.

          நமது அரசியல் சாசனம் வகுத்த மாதிரி தினசரி 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றால், உழைக்கக் கூடிய வயதில் வெறும் 14 வருடங்கள்தான் அதற்கு முழுமையாகச் செலவழிகிறது. இது வெறும் காகிதக் கணக்கே! இதில் வார விடுமுறைகள், தேசிய விடுமுறைகள், அவ்வப்போது விடப்படும் விசேஷ விடுமுறைகள், சாதாரணமாகவோ, உடல்நிலை சரியில்லாமலோ எடுக்கும் விடுப்புகள் என எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால், வேலையும் அதன் பலன்களும் என மிஞ்சுவது என்னவோ கொஞ்சம்தான்!

          பாரதியார் சொன்னதுபோல, ‘தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னச்சின்ன கதைகள் பேசி, தேவையில்லாத விஷயங்களுக்கு சண்டை போட்டு மனம் வருந்தி, துன்பங்களை விலை கொடுத்து வாங்கி, பிறர் வருந்தும் செயல்களைச் செய்து, நரை கூடி, கிழப்பருவம் எய்தி, வேடிக்கை மனிதர்களைப் போல வாழ்கிற’ நேரங்களைக் கணக்கில் கொண்டால், நாம் வாழ்நாளில் உருப்படியாக செய்கிற வேலைகளுக்கான நேரம் மிகக் குறைவு.

          நேரத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பவர்கள், தங்கள் எதிர்காலத்தைச் சரியாகத் திட்டமிடுகிறார்கள். பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவிட்டால், அது நல்ல லாபத்தைக் கொடுக்கும். ‘நேர நிர்வாகம்’ சரியாகச் செய்வோம் என்ற எண்ணத்தை மனதில் விதையாக ஊன்றிக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்!

- கே.ஆர். நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu