மதிப்பிற்குரியவர்களுக்கு...9

மதிப்பிற்குரியவர்களுக்கு...9

வணக்கம்

’ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் தொழிலாளர்கள், உறுதுணையான டீலர்கள் மற்றும் ஏஜென்டுகள், நம்பிக்கை மிகுந்த வாடிக்கையாளர்கள் என எங்கள் நிறுவன வளர்ச்சி ஒரு உறுதியான சங்கிலியைப் போல, ஒருவர் கையை ஒருவர் கோர்த்து நிற்கும் வலுவான பிணைப்பு. நல்ல பாதையில் தொடர்ந்து நடக்க இந்தப் பிணைப்பே எனக்குத் தூண்டுகோலாக அமைகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், எதிர்படும் ஒவ்வொருவரையும் பார்த்ததும் ‘வாழ்க வளமுடன்’ என்று மனதார வாழ்த்தி, நேர்மறை எண்ணங்களுடனே எதிர்கொள்கிறோம். ‘நெகட்டிவ் எண்ணங்கள்’ மனதில் தங்காமல் போனால் யாரிடமும் பகையில்லை. அன்பே ஊற்றெடுக்கிறது.  

‘எப்படியாவது’ தொழிலில் ஜெயித்துவிட வேண்டும் என்கிற வேட்கைக்கும், ‘இப்படித்தான்’ நேர்மையாக தொழில் செய்து ஜெயிக்க வேண்டும் என்கிற கொள்கைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. 40 ஆண்டு கால தொழில் முயற்சியும், அனுபவமும் எனக்கு உணர்த்தியது இதைத்தான். லாப & நஷ்டக் கணக்காக இல்லாமல், பல குடும்பங்களின் மனநிறைவான வாழ்விற்கு தொழில் முயற்சி பயன்பட வேண்டும் என்கிற எண்ணம் மனதில் உதிக்கத் தொடங்கிய பிறகுதான், மனநிறைவு என்றால் என்ன என்பதை உணர முடிந்தது. வேகமான வளர்ச்சியைவிட, நிலையான வளர்ச்சியே எந்த ஒரு தொழிலுக்கும் ஆணிவேர்.

‘இத்தனை தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறேன்’ என்கிற எதிர்மறையான சிந்தனை, தனிப்பட்ட மனிதனை முதன்மையாக்கி, ‘அவர் இல்லையென்றால் எதுவும் இல்லை’ என்கிற அதீத நம்பிக்கையைக் கொடுத்துவிடும். ‘இத்தனை தொழிலாளர்களின் கூட்டு உழைப்பு நம்முடைய வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறது’ என்கிற நேர்மறையான சிந்தனை, அடக்கத்தையும் பணிவையும் தருகிறது.

ஒரே மனிதனை இரண்டு வெவ்வேறு வகையான சிந்தனைகள், வேறு வேறாக பிரித்துவிடுகின்றன. நாள்தோறும் செய்தித்தாள்களைப் பிரிக்கும்போதே, அடிமனதில் ‘திக்... திக்...’ என்று அடித்துக்கொள்கிறது. கொலை, கொள்ளை, வஞ்சம், சூழ்ச்சி, ஊழல், பொறுப்பின்மை என அணிவகுத்து நிற்கின்றன அபாயகரமான செய்திகள். மனிதன் எத்தகைய பாதையில் பயணிக்கிறான் என்பதை அறிவுறுத்தும் அலாரமாகவே இருக்கின்றன அச்செய்திகள்.

தினம் தினம் நிகழும் தீமைகளுக்கெல்லாம் இடம் பகிர்ந்தளிக்கப்பட்ட பிறகு, பத்திரிகைகளில் நல்ல செய்திகளுக்கும் கொஞ்சம் இடம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. ‘வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை’ என்பது தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்திலும், ‘பல்கலைக்கழக மாணவி 12 தங்கப் பதக்கங்கள் பெற்றார்’ என்ற சாதனை, பெட்டிச் செய்தியாக கட்டம் கட்டி ஓரத்தில் பிரசுரம் ஆகின்றன.

‘வெண்மை எண்ணங்கள்’ இதழுக்கு ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம் அளிக்கும் ஆதரவு, சமூக மாற்றத்திற்கான பங்களிப்பாகவே அமைந்தது. ‘மதிப்புக்குரியவர்களாக’ மாற்றும் உடைகளில் உள்ள ‘ராம்ராஜ்’ பிராண்ட் குறியீடு தரத்திற்கான உத்தரவாதமாகும். தரமான உடைகளை வேண்டி விரும்பி வாங்கும் ‘ராம்ராஜ் காட்டன்’ வாடிக்கையாளர்களுக்கு, ‘தரமான சிந்தனைகளை’ உருவாக்கும் ‘வெண்மை எண்ணங்கள்’ இதழும் பிடிக்கும் என்று நம்பினோம். ஜவுளித் தொழிலில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் நினைவுப் பரிசு வழங்குவது மரபு. அந்த மரபைப் போற்றி, ‘வெண்மை எண்ணங்கள்’ இதழை மதிப்புப் பதிப்பாக மாதந்தோறும் வழங்கினோம்.

ஒவ்வொரு இதழையும் படித்துவிட்டு கடிதம் வாயிலாகவும், நேரிலும், தொலைபேசியிலும் பரவசத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் வாடிக்கையாளர்களாகிய வாசகர்கள். ஒவ்வொருவரும் வீட்டில் பாதுகாத்து வைத்துக்கொள்ளும் அரிய பொக்கிஷமாகவே ‘வெண்மை எண்ணங்கள்’ இதழ் மாறியிருக்கிறது. ‘இப்போதுதான் முதன்முதலாக இதழைப் பார்த்தேன். இதற்கு முந்தைய இதழ்களையும் படிக்க வேண்டும். என் முகவரிக்கு அனுப்புகள்’ என்று கேட்டவர்கள் ஏராளம். ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள், ‘ஆண்டுச் சந்தா எவ்வளவு, எங்கள் வீட்டிற்கு இந்த இதழை மாதந்தோறும் அனுப்ப முடியுமா?’ என்று ஆவலுடன் முகவரிகளை தந்துவிட்டுச் செல்கிறார்கள். கடந்த மாதம் வந்த வாடிக்கையாளர்களில் பலர், ‘இந்த மாதம் இதழ் வந்துவிட்டதா?’ என்று விசாரிக்க அடுத்த மாதம் எங்கள் ‘ஷோரூம்’ வருகிறார்கள். நல்ல முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த விசாரிப்பு.

உங்கள் இல்லங்களை அலங்கரிக்கும் பயனுள்ள பரிசாக ‘வெண்மை எண்ணங்கள்’ இதழ் அமையும் என நம்புகிறேன். 

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்!

- கே.ஆர்.நாகராஜன்,

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu