புற்றுநோயைத் தடுக்கிறது தாய்ப்பால்!

புற்றுநோயைத் தடுக்கிறது தாய்ப்பால்!

‘ஒரு குழந்தையின் அத்தனை வளர்ச்சிக்கும் தாய்ப்பால்தான் ஆதாரம்’ என்பது நமக்குத் தெரியும். ‘அம்மா தரும் தாய்ப்பால் புற்றுநோய் செல்களைக்கூட அழிக்கும் சக்தி கொண்டது’ என்ற ஆச்சர்யமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது லேட்டஸ்ட் ஆய்வு ஒன்று.     

தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘ஹ்யூமன் ஆல்பா லேக்டால்புமின் மேட் லெதல் டு ட்யூமர்’. இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்!

ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலைக்கழகம் மற்றும் கோத்தென் பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் இந்த புரோட்டீனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்து, புற்றுநோய்க் கட்டிகளுக்கு எதிரான கீமோதெரபி சிகிச்சையில் பயன்படுத்த இப்போது ஆய்வுகள் நடந்துவருகின்றன.

குழந்தைகளை ஒவ்வாமை நோய் தாக்கும் ஆபத்தை தாய்ப்பால் குறைக்கிறது. ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமா நோயைத் தடுக்கும் வல்லமை தாய்ப்பாலுக்கு இருக்கிறது. இப்படி தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தையே தருகிறது.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், தங்கள் பணிச்சூழல் காரணமாக இப்படிச் செய்கின்றனர். இது மிகவும் தவறானதாகும்.

ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், மருத்துவமனைக்குச் செல்ல நேர்வது 80% குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கின்றன. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும்போது சீரான எடையில் வளர, சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் மகத்துவத்துக்கு பக்கத்தில்கூட வர முடிவதில்லை என்பதே உண்மை. ‘தாய்ப்பாலுக்கு இணையானது’ என பரிந்துரைக்கப்படும் எதுவுமே அதற்கு இணை இல்லை என்பதே நிஜம்.

தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க, தாய்ப்பால் வழி செய்வதே இதற்குக் காரணம்.

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியிருக்கின்றன. இயற்கையாகவே இப்படி அமைந்திருப்பதால், மிக எளிதாக இது செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதையும் தாய்ப்பால் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu