வாயுத் தொல்லைக்கு குட்பை!

வாயுத் தொல்லைக்கு குட்பை!

உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இல்லாதவர்கள், வாயுத் தொல்லை என்ற பிரச்னையைக் கடந்து வராமல் இருக்க முடியாது! அதிலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான். உணவை எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும் என எதுவுமே பலருக்குத் தெரிவதில்லை.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து, நார்ச்சத்து எல்லாம் முழுமையாக உறிஞ்சப்படாமல், உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் சமயங்களில் பெருங்குடலில் தள்ளப்படுகிறது. அப்போது அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக உற்பத்தியாகி, அந்த உணவு புளித்துப் போகிறது. இதனாலேயே வாயு உருவாகிறது.
சிலர் அவசரமாக சாப்பிடும்போது உணவோடு நிறைய காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவார்கள். அந்தக் காற்று இரப்பையில் சேர்ந்து வாயுவாக வெளியாகும். குறிப்பாக பெண்களுக்கு வாயுத் தொல்லை பெரும் அவஸ்தை. ஒவ்வொருமுறை மாதவிலக்கு ஏற்படும்போதும், அதற்குமுன்பாக பல பெண்கள் வாயுத் தொல்லையால் பாதிக்கப்படுவார்கள். உடலில் திரவச் சமநிலை மாறுபாடு ஏற்படுவதால் இது நிகழ்கிறது.
சாதாரணமான சூழலில் வாயுத் தொல்லை என்பது பெரிய பிரச்னையே இல்லை. ஒருநாளைக்கு ஆறு முதல் 20 முறை வரை வாயு பிரிவது நார்மல்தான். ஆனால் அதிகமான ஏப்பம், வயிறு உப்பிக் கொள்வது, வயிற்று வலி, வயிற்றில் பொருமல், புரட்டல் என இயல்பான வேலைகளைச் செய்ய முடியாதபடி உங்களை இது முடக்கிப் போட்டால், நீங்கள் பிரச்னையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாயுத் தொல்லைக்கு என்ன காரணம்? எப்படித் தடுப்பது? எப்போது டாக்டரிடம் போக வேண்டும்?

எதனால் வருகிறது?

  • சுண்டல் வகைகள், பீன்ஸ், முளை கட்டிய பயிறு ஆகியவை வாயுத் தொல்லை தரும்.
  • சோடாவோ, செயற்கை குளிர்பானங்களோ குடித்தால் வாயுத் தொல்லை நீங்கி, வயிற்று வலி சரியாகும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் கார்பனேட்டட் பானங்கள் அனைத்தும் வாயுத் தொல்லை உண்டாக்குபவை. அதனால்தான் இவற்றைக் குடித்தபின் வயிறு உப்பியது போல் இருக்கிறது.
  • மன அழுத்தம் மற்றும் பதற்றமும் வாயுத் தொல்லைக்குக் காரணம்.
  • மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவுக் கழிவுகள் எவ்வளவு அதிக நேரம் வயிற்றில் இருக்கின்றனவோ, அவ்வளவு பிரச்னை!
  • அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றாலும் வாயுத் தொல்லை வரும்.
  • பால், பாலிலிருந்து வரும் உப பொருட்களான சீஸ், பனீர் போன்றவையும் மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகள். தயிர் இந்த ஆபத்து இல்லாதது.
  • கிழங்கு வகைகளால் வாயுத்தொல்லை ஏற்படுகிறது என பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வெங்காயம், பட்டாணி, சோயாபீன்ஸ், துவரை, முள்ளங்கி போன்றவை வாயுத் தொல்லை தரும். பழங்களில் ஆப்பிள் இந்தப் பிரச்னையைத் தரக்கூடியது.
  • கோதுமை, ஓட்ஸ், மக்காச்சோளம், பிரட், பன் போன்றவை ஓரளவுக்கு வாயுத்தொல்லை தரக்கூடியவை.
  • சூயிங்
  • கம் சாப்பிடும்போது, தேவையில்லாத காற்று வாய் வழியாக இரப்பைக்குச் சென்று வாயுப் பிரச்னையை உண்டாக்குகிறது. எனவே இதைத் தவிர்ப்பது நல்லது. சாக்லெட்டை மெல்லும்போதும் இப்படி நிகழ்கிறது!
  • உடல் குண்டாக இருப்பவர்களுக்கு எப்போதும், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும் வாயுத்தொல்லை இருக்கும். அல்சர் பிரச்னை, குடலில் நோய்த்தொற்று, உடலில் நீர்ச்சத்து குறைவது, உமிழ்நீர் அதிகமாக சுரப்பது ஆகியவையும் வாயுத் தொல்லைக்குக் காரணங்கள்.

என்ன செய்வது?

  • உணவை அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக நன்கு மென்று சாப்பிட வேண்டும். தண்ணீரையும் பொறுமையாகக் குடிக்க வேன்டும். அவசரமாக சாப்பிடும்போது, உணவுப் பொருட்கள் இரைப்பைக்கு காற்றையும் தள்ளிக் கொண்டு சென்றுவிடும். பின் வாயுத் தொல்லை ஏற்படும். மெதுவாக சாப்பிட்டால், உமிழ்நீர் சுரப்பிகள் உணவுப் பொருட்களை கரைத்து, மென்மையாக்கி, எளிதில் செரிமானமடைய வைக்கிறது. இதனால் வாயுத் தொல்லை தடுக்கப்படும்.
  • ஏதோ அவசரத்தில் இருக்கும்போதும், மனச்சோர்வோடு இருக்கும்போதும் சாப்பிடக் கூடாது.
  • அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.
  • ஸ்ட்ரா போட்டு பானங்களைக் குடிக்கக் கூடாது.
  • அதிக நார்ச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகள் செரிமானத்துக்கு உதவினாலும், வாயுத் தொல்லையும் தருகின்றன.
  • கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். இவை செரிமானத்தை தாமதப்படுத்துகின்றன.
  • நெஞ்சு எரிச்சலுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
  • உணவு உண்டபின் ஒரே இடத்தில் உட்காராமல், சிறிது தூரம் நடக்க வேண்டும். இதனால் செரிமான மண்டலம் நன்கு இயங்குவதோடு, இரைப்பையில் இருக்கும் கடினமான உணவுப் பொருட்களும் உடைந்து செரிமானமாகி விடும். வாயுத் தொல்லையும் நீங்கும்.

வீட்டு சிகிச்சை:

  • இஞ்சி, சீரகம், பூண்டு, பெருங்காயம், சோம்பு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
  • உங்களுக்கு அதிகமாக வாயுத்தொல்லை தரும் உணவு எது என்பதை சிலமுறை சாப்பிடுவதிலேயே உணர்ந்துவிடுவீர்கள். அவற்றைத் தவிர்க்கவும்.
  • சுண்டல் வகைகளை இரண்டு, மூன்று முறை தண்ணீர் மாற்றி ஊற வைத்துவிட்டு, வேக வைத்தால் வாயுத் தொல்லை இருக்காது. கூடவே சிறு துண்டு இஞ்சி சேர்த்து, மேல் தோல் வெடிக்கும் வரை வேக வைத்து சாப்பிடவும்.
  • தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, இரைப்பையிலிருந்து வாயுவும் வெளியேறிவிடும்.

எப்போது டாக்டரிடம் போவது?
வாயுத் தொல்லையோடு குமட்டலும் வாந்தியும் சேர்ந்து வருவது, வயிற்றில் நீண்ட நாட்களாக வலி இருப்பது, கடுமையான வயிற்று வலி ஏற்படுவது, வயிற்றுப்போக்கு, மோசமான நெஞ்சு எரிச்சல், திடீரென உடல் எடை குறைவது, மோசமான மலச்சிக்கல், ஜுரம், நெஞ்சு வலி…
இதெல்லாம் இருந்தால் அவசியம் சிகிச்சை பெற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu