ஜுரம் A to Z உண்மைகள்!

ஜுரம் A to Z உண்மைகள்!

மழையும் பனியும் மாறி மாறிக் கொட்டும் நாட்களில் அழைக்காமலே வீட்டுக்கு வந்துவிடும் இன்னொரு விருந்தாளி, ஜுரம்! குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் ஹோம் ஒர்க்கோடு வருகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக ஜலதோஷம், ஜுரத்தோடு வந்து விடுவார்கள். தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள் இந்த நாட்களில்தான் அதிகமாகத் தாக்கும். வைரஸ் போன்ற கிருமிகளும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும்.
நமது உடல் வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகமாவதையே நாம் ‘ஜுரம்’ என்கிறோம். ஆனால் எல்லோரும் நினைப்பதைப் போல ஜுரம் என்பது ஒரு நோய் அல்ல… உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு நோயை உணர்த்தும் அறிகுறி மட்டுமே! நமது உடலை பாக்டீரியா, வைரஸ் போன்ற ஏதாவது நோய்த்தொற்று தாக்கும்போது, அதை உடல் எதிர்க்கிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு வீரர்களுக்கும், அந்தக் கிருமிகளுக்கும் இடையே பெரிய யுத்தமே நடக்கிறது. அனல் பறக்கும் இந்த யுத்தத்தின் விளைவாகவே உடல் சூடாகிறது.
பொதுவாக பெரியவர்களைத் தாக்கும் ஜுரம், அது 103 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொடும் வரை அபாயகரமானது அல்ல. ஆனால் குழந்தைகள் விஷயத்தில் ஜுரத்தை அலட்சியம் செய்யக் கூடாது. ஏனெனில், அது ஏதாவது ஆபத்தான நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும்! ஜுரத்தின் டிகிரி அதிகமாக இருப்பது ஒன்று மட்டுமே, சீரியஸ்தன்மையை உணர்த்துவதில்லை. சில சமயங்களில் சாதாரண வைரஸ் தொற்று, மிக அதிக டிகிரி ஜுரத்தைக் கொண்டு வரலாம்; உயிருக்கே ஆபத்தான நோய் ஒன்று மிக சாதாரணமான ஜுரத்தை வெளிப்படுத்தலாம்.
அறிகுறிகள்
பொதுவாக ஜுரம் கீழ்க்கண்ட ஏதாவது சிலரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு வரும்…
* பொதுவான உடல் சோர்வு
* தலைவலி
* வியர்வை ஊற்றுவது
* உடல் நடுக்கம்
* தசை வலி
* பசியின்மை
* உடலில் நீர்ச்சத்து குறைவது
காரணங்கள்
* வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று
* ஜலதோஷம்
* ஃப்ளூ
* வெயிலில் களைத்து நீர்ச்சத்தை இழப்பது
* மூட்டுவலி
* கட்டிகள்
* நிமோனியா
* ஆன்டி பயாடிக் மாத்திரைகள், உயர் ரத்த அழுத் தத்தைக் கட்டுப்படுத்த சாப்பிடும் மாத்திரைகளின் பக்க விளைவாகவும் ஜுரம் வரலாம்
* சிலவகை தடுப்பூசிகள் போடுவதாலும் ஜுரம் வரலாம்
* காசநோய்
* காதில் நோய்த்தொற்று ஏற்படுவது
* எலும்புகளில் நோய்த்தொற்று
* குடல்வால் நோய்த்தொற்று
* சைனஸ் மற்றும் சுவாசப் பாதை தொற்று
* சிறுநீர்ப் பாதை தொற்று
* வயிற்றுக் கோளாறு
* புற்றுநோய்
* ரத்தக்குழாயில் ரத்தம் உறைவது
தடுக்கவும் தவிர்க்கவும் சில டிப்ஸ்
* வெதுவெதுப்பான தண்ணீர் நிறைய குடிக்கவும்.
* அதிகமான பழ ஜூஸ், குளுக்கோஸ் போன்ற திரவங்களைத் தவிர்க்கவும்.
* போதுமான ஓய்வு சீக்கிரம் குணப்படுத்தும்.
* படுக்கை விரிப்புகள், போர்வைகளை அடிக்கடி மாற்றித் துவைக்கவும்.
* ஜுரம் நடுக்குகிறதே என சட்டை, ஸ்வெட்டர் மாட்டிக் கொண்டு, அதற்குமேல் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டாம். வியர்வையில் நனைந்து உடல் மோசமாகிவிடும்.
* குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்; வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். அல்லது சூடான தண்ணீரில் டவலை நனைத்து துடைத்துக் கொள்ளவும்.
* ஓய்வெடுக்கும் அறை நல்ல காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.
* அடிக்கடி கைகளைக் கழுவிக் கொண்டால், நோய்த்தொற்று தவிர்க்கப்படும்.
* அடிக்கடி வாயிலும், மூக்கிலும், கண்களிலும் கை வைக்கக் கூடாது. வைரஸ் கிருமிகள் இதன்மூலம் அதிகம் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது.
* தும்மும்போதும், இருமும்போதும் அடுத்தவர்களிடமிருந்து விலகி, டவல் அல்லது கர்ச்சீஃப்பால் முகத்தை மூடிக் கொள்ளவும்.
எது ஆபத்து எது சாதாரணம்
* குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது சமயங்களில் ஜுரம் வரும். இது 100 டிகிரியைத் தாண்டாத வரை பிரச்னை இல்லை.
* அதிக உடல் உழைப்பு, உணர்வுக் கொந்தளிப்பு, அறை அதிக புழுக்கமாக இருப்பது, கோடை அனல் போன்ற காரணங்களால் உடல் வெப்பநிலை அதிகரிக்கலாம். இதை ஜுரம் என நினைத்து பயப்படத் தேவையில்லை.
* பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் உடல் வெப்பநிலை சற்றே அதிகரிக்கலாம். உடலில் வேறு எந்த உபாதைகளும் இல்லாதவரை, இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
* குழந்தைகளுக்கு ஜுரம் வந்து, வேக வேகமாக அதன் கடுமை அதிகரிக்கும்போது, ஒருசில குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும். அதிகம் பதறாமல் டாக்டரிடம் குழந்தையைத் தூக்கிச் செல்லவும். பொதுவாக இது ஆபத்தான அறிகுறி இல்லை என்பார்கள்.
* ஜுரத்தின் அளவு 107 டிகிரியைத் தாண்டினால் ஆபத்து. இவ்வளவு கடுமையான ஜுரம் சிலருக்கு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி முடக்கிவிடும் அபாயம் இருக்கிறது.
எப்போது டாக்டரிடம் போக வேண்டும்?
* மூன்று நாட்களுக்கும் மேலாக ஜுரம் குறையாமல் தொடர்ந்தால்…
* 103 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி ஜுரம் கொதித்தால்…
* ஜுரத்தோடு அதிக குளிரும் உடல் நடுக்கமும் இருந்தால்…
* கடுமையான தலைவலியும் மயக்கம் போன்ற உணர்வும் சேர்ந்திருந்தால்…
* குழந்தைகளைப் பொறுத்தவரை ஜுரம் ஒரு நாளுக்கும் மேலாக இருந்தால்…
* எரிச்சலும், எதிலும் கவனம் செலுத்தமுடியாத நிலையும் தொடர்ந்தால்…
* திரும்பத் திரும்ப வாந்தியும் கடுமையான வயிற்றுவலியும் இருந்தால்…
* வழக்கத்தைவிட குறைவான சிறுநீர் வெளியானால்…
* மூச்சுவிட சிரமம் இருந்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu