அதிகாலையில் சீக்கிரம் விழித்து…

அதிகாலையில் சீக்கிரம் விழித்து…

‘வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் & அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். சூரிய மறைவிற்குப் பின் தூங்கி, சூரிய உதயத்திற்கு முன்பு எழும் வழக்கமே ‘பின் தூங்கி முன் எழுவது’ எனப்படுகிறது. உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்கு பத்து நன்மைகள் கிடைக்கின்றன…

 • அதிகாலையில் சீக்கிரம் எழுவதால் நமக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கிறது. ஜிம்முக்குப் போகிறவர்கள் போகலாம்; வாக்கிங், ஜாகிங் செய்பவர்கள் நிதானமாகச் செய்யலாம்; யோகா பயிற்சி செய்ய நேரம் இருக்கும்.
 • தியானம் செய்ய போதுமான நேரத்தை, அதிகாலையில் விழிக்கும் பழக்கம் தரும். தியானம் என்பது ஏதோ துறவிகள் மட்டுமே செய்ய வேண்டிய விஷயம் இல்லை. அது சிரமமானதும் இல்லை! சில நிமிடங்கள் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தினால், சிந்தனை கூர்மையாகும்; மனம் ஒருவித அமைதியுடன் இருப்பதால், தெளிவாக திட்டங்களை வகுக்க முடியும். நாள்முழுக்க பிஸியான வேலைகளை களைப்பு இல்லாமல் செய்ய இது உதவும். சிக்கலான பிரச்னைகளில் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றலை இது தரும்.
 • அதிகாலைப் பொழுது தரும் அற்புத அனுபவங்களை அந்த நேரத்தில் விழித்து எழுபவர்தான் அனுபவிக்க முடியும். அந்த நிமிடங்களின் நிசப்தமும் பேரழகும் அனுபவித்தால் மட்டுமே புரியும். பறவைகளின் குரலோசை, வாகன நெரிசல் இல்லாத, நச்சுப்புகை சூழாத சூழலின் அழகை அந்த நேரத்தில்தான் ரசிக்க முடியும். இதை ரசிப்பது எதற்கு? ரசனை வளர வளர, எதுவும் சிரமமாகவோ, சுமையாகவோ தெரியாது. கஷ்டமான வேலையைக் கூட இனிய அனுபவமாக மாற்றுவது நமது ரசனைதான்!
 • 2008ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அதிகாலையில் தூங்கி எழுபவர்கள் சுறுசுறுப்பாகவும் கச்சிதமாகவும் தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள் என்ற உண்மையை அந்த ஆய்வு தெரிவித்தது. அதேபோல அதிகாலையில் எழுந்து படிக்கும் மாணவர்கள், மற்றவர்களைவிட அதிகம் மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதும் அதில் தெரிந்தது. ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என பாரதியார் இதை முன்பே சொல்லியிருக்கிறார்!
 • காலை சிற்றுண்டி என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது. இரவு உணவுக்கும் காலை சிற்றுண்டிக்கும் இடையிலான நேர இடைவெளி மிக அதிகம். சுமார் 12 மணி நேர பட்டினிக்குப் பிறகு நாம் அப்போது சாப்பிடுகிறோம். அதனால்தான் இதன் பெயர் ‘பிரேக்ஃபாஸ்ட்’. அதிகாலையில் எழுபவர்கள், தங்கள் கடமைகளை சீக்கிரம் முடித்துவிட்டு எட்டு மணி வாக்கில் நிதானமாக சிற்றுண்டியை எடுத்துக்கொள்ள முடியும். இதனால் உடலின் இயக்கம் ஒரே சீராக இருக்கும். தாமதமாக எழுந்து அரக்க பரக்க அலுவலகமோ, வெளியிலோ கிளம்புகிறவர்கள் முதலில் தவிர்ப்பது சிற்றுண்டியைத்தான். அது இப்படி தவிர்க்க வேண்டிய உணவு அல்ல!
 • அதிகாலையில் எழுந்தால் எதையும் அவசரமாக செய்ய வேண்டியிருக்காது. நிதானமாகத் தயாராகி, குறித்த நேரத்துக்கு முன்பாகவே வெளியில் கிளம்பலாம். பஸ்ஸை தவறவிட மாட்டீர்கள்; டிராஃபிக் நெரிசலில் சிக்க மாட்டீர்கள். அதனால் தேவையற்ற பதற்றமும் மன அழுத்தமும் தவிர்க்கப்படுகிறது.
 • அதிகாலையில் எழுந்து பழகிவிட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை ஒரு சீரான நதி போல ஆகிவிடும். இத்தனை மணிக்கு குளியல், இந்த நேரத்தில் சிற்றுண்டி, குறித்த நேரத்தில் ஆபீஸ், ஸ்கூல் பயணம் என எல்லாமே இயல்பான நடைமுறைக்கு வந்துவிடும். இதனால் அலுவலக வேலையும், படிப்பும் சிறப்பாக அமையும். அதோடு உங்கள் வீட்டிலும் இனிய மாற்றங்கள் நிகழும். காலை நேர அவசரங்கள் ‘பைலின்’ புயல் போல உங்கள் இல்லத்தைத் தாக்காது. அதனால் வீட்டில் தேவையற்ற வாக்குவாதங்கள், சச்சரவுகள் இருக்காது. உறவுகள் மேம்படும்.
 • இரவு வெகுநேரம் விழித்திருந்து படிப்பவர்களும் வேலை பார்ப்பவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கப் பிரச்னையும் விரக்தியான மனநிலையும் இவர்களுக்கு இருக்கும். எதையும் எதிர்மறையான கோணத்திலேயே பார்ப்பார்கள். எட்டு மணி நேர ஓய்வுக்குப் பின் மனித உடல் அதிகாலையில் மிகுந்த ஆற்றல் நிலையில் இருக்கும். காற்றில் ஓசோன் பரவியிருக்கும் அந்த நேரம் மிகுந்த புத்துணர்வை அளிக்கும். அந்த நேரத்தில் வேலைகளைத் தொடங்கினால் செயல்திறன் அதிகரிக்கும். அதுவே நாள் முழுவதும் நீடித்து நிலைத்திருக்கும். மனதில் சந்தோஷம் பெருகும்.
 • நூறாவது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய முதியவர்களை எங்காவது பார்த்தால், அவர்களின் நீண்ட நாள் ஆயுள் ரகசியத்தைக் கேட்டுப் பாருங்கள். சீரான வாழ்க்கைமுறையும் தவறாத உடற்பயிற்சியும்தான் ஆரோக்கியத்தின் ரகசியம் என அவர்கள் சொல்வார்கள். அதிகாலையில் தூங்கி எழுபவர்களுக்குத்தான் இந்த இரண்டும் சாத்தியமாகிறது.
 • உடல்நலம் நன்றாக இருக்கிறது, வேலைகளை சிறப்பாக செய்கிறீர்கள், நாள்முழுக்க உழைக்கும் அளவுக்கு சக்தி உங்கள் உடலில் எப்போதும் இருக்கிறது… இந்த மூன்று விஷயங்களின் நேரடியான பலன் என்ன? நீங்கள் செய்கிற வேலையில்/ கற்கும் கல்வியில் கிடைக்கும் வெற்றிதான்! ஜெயிப்பவர்களின் கழுத்தில் எல்லா மாலைகளும் தானாக வந்து விழும். வாழ்க்கை வளம் பெறும்; வசதிகள் தேடிவரும். பலரும் ஆசைப்படுவது இதற்குத்தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu