தன்னம்பிக்கையை செதுக்கும் 12 வழிகள்!

தன்னம்பிக்கையை செதுக்கும் 12 வழிகள்!

பலவீனங்களை உணருங்கள்

உங்கள் உள்மனதின் குரலைக் கேளுங்கள். உங்கள் பலவீனம் எது, உங்களிடம் நீங்கள் நினைத்து நினைத்து வெட்கப்படும் குணம் எது என்பதை அறியுங்கள். முகப்பரு, எவ்வளவு அழுத்தி வாரினாலும் படியாத தலைமுடி, கூட்டமாக மனிதர்களைப் பார்த்தால் கூச்சப்பட்டு தலைகவிழ்ந்து கொள்வது என ஏதாவது ஒரு விஷயம் உங்களை தன்னம்பிக்கை இல்லாதவராக ஆக்கியிருக்கும். உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு எது காரணமோ, அதற்கு ஒரு பெயர் வையுங்கள். அந்தப் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, துண்டு துண்டாக கிழித்துப் போடுங்கள். பாசிட்டிவ் எண்ணங்கள் உங்களுக்குள் தலைதூக்கும்.

நேசிப்பவர்களிடம் பகிருங்கள்

உங்கள் பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பது குறித்து உங்கள் நண்பர்கள், உங்களை நேசிப்பவர்களிடம் பேசுங்கள். சில பிரச்னைகளை உங்களால் தீர்த்துக் கொள்ள முடியும். உதாரணமாக, உங்கள் பிரச்னை முகப்பரு என்றால், சிகிச்சை மூலம் அதை சரி செய்ய முடியும். தலைமுடி எப்போதும் கலைந்துவிடுவது உங்கள் தலையின் இயல்பு என்றால், அதை உங்களால் மாற்ற முடியாது. அதை ஏன் பிரச்னையாகக் கருதுகிறீர்கள். அதுதான் உங்கள் இயல்பு; அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் இந்த பலவீனங்களோடு சேர்த்தே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களும் அப்படி ஏற்றுக்கொள்ளக் கூடும். பிறகு ஏன் கவலை?

தவறுகளிலிருந்து மீண்டெழுங்கள்

யாருமே நூறு சதவீதம் கச்சிதமானவர்கள் கிடையாது என்பது ஞாபகம் இருக்கட்டும். அபார தன்னம்பிக்கையாளர்களிடம்கூட சில பலவீனங்கள் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் வெளியில் காட்ட மாட்டார்கள்; அவ்வளவுதான்! வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மிடமும் பலவீனங்கள் பல முளைக்கும்; இது இயல்பே. எல்லா சாலைகளும் மேடு, பள்ளங்கள் கொண்டவையே! நாம் எங்கு இருக்கிறோம், யாரிடம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நம் மனநிலை மாறும். தவறான மனநிலையிலிருந்து மீண்டெழுங்கள்.

பலத்தைக் கண்டறியுங்கள்

மிக மோசமான மனிதருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். உங்களின் பிரத்யேகத் திறமை எது, பலம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதில் தனி கவனம் செலுத்தி மேன்மை அடையுங்கள். உங்களது அந்தத் திறமை குறித்து பெருமிதப்படுங்கள். தாழ்வு மனப்பான்மை உங்களைத் தழுவும்போது, நீங்கள் ஒரு நோயாளி போல ஆகி விடுகிறீர்கள். அந்த நினைப்பே உங்களை முடக்கி மூலையில் தள்ளிவிடும். அந்த நேரத்தில் இசை, சினிமா, கலைகள் என எதன் பக்கமாவது கவனத்தைத் திருப்பி, உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை மாற்றுவதோடு, புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்யும்.

நிறைவு அடையுங்கள்

பேராசை என்ற பேய்க்கு எல்லையே கிடையாது. ‘பேராசை பிடித்த ஒற்றை மனிதனுக்கு, இந்த ஒட்டுமொத்த உலகமே போதாது’ என்பார்கள். ‘நம்மிடம் கார் இல்லை’, ‘நம் வீட்டில் மட்டும் அடிக்கடி பவர்கட் ஆகிறது’ என்பது போன்ற நினைப்புகளும், அடுத்தவர்களுடனான ஒப்பீடுகளும், மேலும் மேலும் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கவே செய்யும். நிறைவற்ற, திருப்தி இல்லாத மனநிலையைத் துரத்துங்கள். உங்களிடம் இருக்கும் விஷயங்களை நினைத்து நினைத்து நிறைவு அடையுங்கள்.

பாசிட்டிவ்வாக பேசுங்கள்

‘இந்த உலகிலேயே நாம்தான் பரிதாபத்துக்குரிய ஜீவன்’, நமக்கு நேர்ந்தது போல யாரும் கஷ்டப்படக் கூடாது’ என உங்களைப் பற்றி நீங்களே கழிவிரக்கம் கொள்ளாதீர்கள். மற்றவர்களும் உங்கள்மீது பரிதாபமோ, அனுதாபமோ காட்ட அனுமதிக்காதீர்கள். இதற்கு அனுமதித்தால், நீங்கள் மற்றவர்களைவிட தாழ்ந்தவர் ஆகிறீர்கள். உங்களைப் பற்றி, உங்கள் வளர்ச்சி பற்றி, உங்கள் எதிர்காலம் பற்றி, எப்போதும் பாசிட்டிவ்வாக பேசுங்கள். உங்கள் பலத்தையும் பண்புகளையும் பிறரிடம் வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.

மனதால் வாங்குங்கள்

உங்களை யாராவது பாராட்டும்போதோ, நன்றி சொல்லும்போதோ, அதை வெறுமனே காதுகளால் வாங்கி, அங்கேயே கழற்றி எறிந்து விடாதீர்கள். உங்கள் மனதால் அதை முழுமையாக வாங்குங்கள். மனதுக்கு அது மிகவும் தேவைப்படுகிறது.

புன்னகை அணியுங்கள்:

உங்கள் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்வுகளே, உங்கள் மூளையின் சில ஏரியாக்களைத் தூண்டிவிட்டு மனநிலையைக் கட்டுப்படுத்துகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. தினமும் கண்ணாடி முன் சில நிமிடங்களாவது நின்று சிரியுங்கள்; உங்கள் புன்னகை முகத்தைப் பார்த்து உற்சாகம் அடையுங்கள். காலப்போக்கில் இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

நம்பிக்கையாக நடியுங்கள்

உண்மையில் உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்தாலு, அபார தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இந்த சமூகத்தின் முன் நடியுங்கள். தோள்களை உயர்த்தி நடப்பது, நேர்கொண்ட பார்வையால் மற்றவர்களை அணுகுவது, கால் மீது கால் போட்டு கம்பீரமாக அமர்வது என உங்கள் செய்கைகள் உங்களை முழுமையான மனிதராகக் காட்டட்டும். இந்த நடிப்பை ஒரு கட்டத்தில் உங்கள் மனமே நம்பி விடும். அதன்பின் உங்கள் மனநிலை ஸ்விட்ச் போட்டது போல பாசிட்டிவ்வாக மாறும்.

கொள்கைவாதியாக இருங்கள்

வாழ்க்கையில் உங்களுக்கு என்று சில கொள்கைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த வரம்புகளுக்குள் உங்கள் வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளுங்கள். ‘சிகரெட் பிடிப்பதில்லை’ என தீர்மானித்தால், நூறு சதவீதம் அந்தத் தீர்மானத்துக்கு உண்மையாக இருங்கள். ‘லஞ்சம் வாங்குவதில்லை’ என உறுதியாக இருந்தால், எந்தச் சூழலிலும் அந்த உறுதியிலிருந்து பின்வாங்காதீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நெறி தவறினால், ‘எதற்கும் வளைந்து விடும் அவநம்பிக்கை ஆசாமி’ என்ற முத்திரை உங்கள்மீது விழும். அது உங்கள் முன்னேற்றத்துக்கு ஆபத்தானது.

அன்பு காட்டுங்கள்

உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நேசம் காட்டுங்கள். அன்பு என்ற அதிர்வலையை உங்களைச் சுற்றிலும் பரவ விடுங்கள். சிக்னலில் காத்திருக்கும் பார்வையற்றவர் சாலையைக் கடக்க உதவுவது, உங்களுக்கு காபி கொடுக்கும் பணியாளருக்கு நன்றி சொல்வது என சின்னச்சின்ன விஷயங்கள்கூட அன்பின் வெளிப்பாடுதான். நீங்கள் வெளிப்படுத்தும் அன்பு, அவர்கள் வாழ்வில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ‘எங்கெங்கும் நேர்மறை எண்ணங்கள் பரவக் காரணமாக இருக்கிறோம்’ என்ற நினைப்பே உங்களது தன்னம்பிக்கை ஸ்கேலை உயர்த்திவிடும்.

துல்லியத்துக்கு ஆசைப்படாதீர்கள்

மனிதர்கள் எல்லோருமே தவறு செய்யக் கூடியவர்கள். எனவே, நூறு சதவீதத் துல்லியத்தை உங்களிடமோ, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடமோ எதிர்பார்க்காதீர்கள். நிறைய சதவீதம் நிறைகளும், கொஞ்சமே கொஞ்சம் குறைகளும் நிறைந்ததாகத்தான் எல்லாம் இருக்கும். துல்லியத்தைத் தேடினால், ‘நம்மால் இது முடியாதோ’ என்ற நினைப்பு தோன்றும். அது உங்கள் லட்சியத்தை முடக்கிவிடும்!         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One comment on “தன்னம்பிக்கையை செதுக்கும் 12 வழிகள்!”

  1. Thanks wonderful.keep rocking.early morning mind disturb that time I see the this month magazine last page just try website please more information.speechlees.

crossmenu