தூக்கி எறிந்து விடுங்கள்!

தூக்கி எறிந்து விடுங்கள்!

தூக்கி எறிந்து விடுங்கள்!

பல ஆண்டு காலம் தங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு முதிய தம்பதியைப் பார்க்க அவர்கள் ஒரு வார இறுதியில் குடும்பத்தோடு கிளம்பினர். தொலைதூர கிராமத்தில், பண்ணை வீடு ஒன்றில் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி.

இவர்களைப் பார்த்ததும் அந்தத் தம்பதிக்குத் தாள முடியாத சந்தோஷம். தங்கள் சொந்த மகனும் மருமகளும் பேரன், பேத்தியோடு வந்தது போலவே கருதி உபசரித்தனர்.

தோட்டத்தில் இளநீர் பறிக்கச் சொல்லிக் குழந்தைகளுக்குக் கொடுத்து, அவர்களோடு விளையாடினார் தாத்தா. கிராமத்து இனிப்புகளாகச் சமைத்துப்போட்டு சந்தோஷப்பட்டார் பாட்டி.

தாத்தாவும் பாட்டியும் தங்களுக்குள் பேசிக் கொள்வதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக இவர்களுக்குத் தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்துத்தான் அது புரிந்தது. அந்த தாத்தா தனது மனைவியைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஒருமுறை ‘செல்லம்...’ என்கிறார். இன்னொருமுறை ‘குட்டி...’ என்கிறார். வேறொருமுறை ‘தேனு...’ என்கிறார். இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிது புதிதாக அன்பான வார்த்தைகளைப் போட்டு அழைக்கிறார். அந்த வார்த்தைகளைக் கேட்டு, பாட்டிக்கு இந்த வயதிலும் முகத்தில் வெட்கம் படர்கிறது.

தாத்தாவிடம் தனியாகப் பேசும்போது பக்கத்து வீட்டுக்காரர் அதைக் குறிப்பிட்டார். ‘‘கிராமத்துக்கு வந்ததும் நீங்க ரொம்ப மாறிட்டீங்க... உங்க மனைவி மேல ரொம்ப அதிகமாக அன்பு வந்துடுச்சு போலிருக்கே!’’ என்றார்.

சுற்றும்முற்றும் பார்த்த தாத்தா சொன்னார்... ‘‘உங்க கிட்ட மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்றேன். வயசாயிடுச்சு இல்லையா? அதான் ஞாபக மறதி போட்டு பாடாப் படுத்துது. உண்மையைச் சொல்லணும்னா, நான் என் பொண்டாட்டி பேரை மறந்து நாலஞ்சு வருஷமாச்சு. யாராவது அவளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டாலாவது எழுதி வச்சு ஞாபகப்படுத்திக்கலாம். புது ஊர்; புது மனுஷாளுங்க. அதுக்கும் வாய்ப்பு இல்லை. அதான் இப்படி ‘மானே... தேனே...’ன்னு கூப்பிட்டுச் சமாளிச்சிக்கிட்டு இருக்கேன்!’’

கேட்டவர் அதிர்ந்தேவிட்டார். ‘‘என்னங்க இது... இப்படிச் சொல்றீங்க? இதுக்குப் பேசாம அவங்ககிட்டயே கேட்டு இருக்கலாமே!’’ என்றார்.

‘‘கேட்கலாம். ஆனா, ‘இத்தனை வருஷம் ஒண்ணா சேர்ந்து வாழ்ந்த பிறகும் நம்ம பேரை இந்த மனுஷன் ஞாபகத்துல வச்சில்லையே’ன்னு அவ நினைப்பா. அந்த நினைப்பு காலம் முழுக்க ஒரு சுமையாவே அவளுக்கு இருக்கும். தலையில சுமக்கற பாரத்தை எப்ப வேணா இறக்கி வச்சிடலாம். ஆனா மனசுல சுமக்கற பாரம் இறக்கி வைக்கக் கூடியது இல்ல. அப்படிப்பட்ட ஒரு பாரத்தை அவ மனசுல ஏத்த நான் விரும்பல’’ என்றார் தாத்தா.

ஒரு டம்ளர் தண்ணீரைக் கையில் பிடித்துப் பாருங்கள். அதன் எடை என்னவோ கொஞ்சமாக இருக்கலாம். சில நிமிடங்கள் அதைக் கையில் பிடித்திருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை. 

ஆனால் தொடர்ந்து ஒரு மணி நேரம் அப்படியே கையில் பிடித்திருந்தால், கை வலிக்க ஆரம்பிக்கும். உள்ளங்கையிலிருந்து தோள்பட்டை வரை வலி பின்னியெடுக்கும்.

ஒருநாள் முழுக்க இப்படி இருந்தால்? உங்கள் கை மரத்துப் போகும். உடலின் ஒரு பக்கமே செயலிழந்து போனது போலத் தோன்றும். உடனடியாக உங்களை ஒரு மருத்துவமனையில் சேர்க்காவிட்டால், உடல்நலம் தேறுவது கடினம்!

ஆனால் யோசித்துப் பாருங்கள்... சில நிமிடங்களிலிருந்து ஒருநாள் வரையிலான இந்தக் காலத்தில் அந்த டம்ளரின் எடை ஒரே ஒரு கிராம்கூட அதிகரிக்கவில்லை. நாம் சுமக்கும் நேரம்தான் வலியைக் கூட்டி முடக்கிப் போடுகிறது.

பிரச்னைகளும் இப்படித்தான். சில நிமிடங்கள் அதைப்பற்றி யோசிக்கலாம்... ஓகே! ஆனால் நீண்ட நேரம் அதையே மண்டையில் ஏற்றிக்கொண்டிருந்தால் தலை கனக்க ஆரம்பித்துவிடும். ஓயாமல் அதைப் பற்றியே சிந்திக்க ஆரம்பித்தால் முடங்கிப் போய்விடுவோம். 

பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம், தேவையற்ற நேரத்துக்குப் பிறகு அதைத் தூக்கிப்போடுவது. அந்த நாளின் நெருக்கடிகளைக் கடந்து, படுக்கச் செல்லும்போது தலையில் எந்தச் சுமையும் இருக்கக்கூடாது. அப்போதுதான் நிம்மதியாகத் தூங்கி, அடுத்த நாள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க முடியும்.

எனவே சுமைகளை அவ்வப்போது தூக்கியெறிந்து விடுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu