நம்பிக்கையின் பாதை!

நம்பிக்கையின் பாதை!

நம்பிக்கையின் பாதை!

கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்தப் பட்டாம்பூச்சி. கூட்டின் ஓடு லேசாக விரிசல் அடைய, அந்த ஓட்டினை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப் போராடிக் கொண்டிருந்தது அது. அக்கறையோடு அதைப் பார்த்தான் ஒரு சிறுவன். அது நீண்ட போராட்டம் என்பதை அவன் அறியவில்லை. பட்டாம்பூச்சி கூட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லேசாக உடைத்துவிட்டான். அதன் வழியே வெளியில் வந்த பட்டாம்பூச்சி, சிறிது நேரம் பறக்கப் போராடிவிட்டு இறந்து போகிறது.

சிறுவன் அப்பாவிடம் போய் அழுதபடி நடந்ததைச் சொன்னான். பட்டாம்பூச்சியை வைத்து பையனுக்கு வாழ்க்கைப் பாடம் நடத்தினார் அப்பா. ‘பட்டாம்பூச்சி இப்படி ஒரு போராட்டம் நடத்தி கூட்டைவிட்டு வெளியில் வந்தால்தான், அதன் சிறகுகள் வலுவாகும்; முழுமையான வளர்ச்சியும் கிடைக்கும். அதேபோல் மனிதர்களும் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும்; நம்பிக்கையோடு போராடினால் வாழ்வில் முன்னேறலாம்’ என்பது அந்தப் பாடம்.

உங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

* அரைகுறை தாடி, கலைந்த தலை, எண்ணெய் வடியும் முகம் என்றில்லாமல், தோற்றத்தில் புத்துணர்வு காட்டுங்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். 

* எந்தச் சூழலிலும் எதிர்மறையாக சிந்தித்து சோர்ந்து போகாதீர்கள்.

* சொல் மட்டுமில்லை, செயலும் எதிர்மறையாக இருக்கக்கூடாது. நல்ல விளைவுகளைத் தரும் நம்பிக்கையான விஷயங்களையே செய்யுங்கள்.

* உங்கள் பலம், பலவீனம் உணருங்கள். எந்தக் கடினமான சூழலையும் எதிர்கொள்வதற்கு மனதளவில் எப்போதும் தயாராக இருங்கள்.

* வாழ்வில் உங்களுக்கென சில கொள்கைகளும் லட்சியங்களும் வைத்திருங்கள்.

* வேகமாகவோ, சத்தமாகவோ, படபடப்பாகவோ பேசாதீர்கள். நம்பிக்கையான மனிதர்கள் எப்போதும் மெதுவாகவும் ஆணித்தரமாகவும் பேசுகிறார்கள்.

* எப்படிப்பட்ட போட்டியையும் எதிர்கொள்ளும் திறமையையும் பக்குவத்தையும் சம்பாதியுங்கள்.

* எடுத்த எடுப்பிலேயே நிலவில் ஏணி போட்டு ஏற ஆசைப்படாதீர்கள். சின்னச் சின்னதாக இலக்குகள் வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக அடையுங்கள்.

* தவறான பழக்கங்கள் ஏதேனும் இருந்தால், உடனே கைவிடுங்கள்.

* பிரச்னைகளைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், தீர்வுகளையே எப்போதும் யோசியுங்கள்.

* எந்தக் கஷ்டத்தையும் புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள்.

* உங்கள் வெற்றியில் பலருக்கு பங்கு இருக்கிறது. நன்றியோடு இருங்கள்.

* உங்கள் செயலுக்குத் தேவைப்படும் சிறந்த அறிவைத் தேடிப் பெறுங்கள்.

* எதையும் எப்போதும் காரணங்கள் இல்லாமல் தள்ளிப் போடாதீர்கள். அன்றே செய்யுங்கள், நன்றே செய்யுங்கள்.

* எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதைவிட ஏதோ ஒன்றைச் செய்வது சிறப்பு. அதன் விளைவுகள் தவறாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு பாடம் கிடைக்கும்!   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu