டென்ஷனைத் துரத்துங்கள்!

டென்ஷனைத் துரத்துங்கள்!

டென்ஷனைத் துரத்துங்கள்!

‘முகம் என்பது மனதின் கண்ணாடி’ என்பார்கள். காலை நேரத்தில் பரபரப்பாக அலுவலகத்துக்கு ஓடும் பலரது மனக் கண்ணாடிகளை சற்றே நெருங்கி உற்றுக் கவனியுங்கள். அந்த முகங்களில் முழுக்கவே டென்ஷன் மண்டிக் கிடப்பதைத் தெரிந்து கொள்வீர்கள். சில முகங்கள் எண்ணெய் சட்டி போல தகிக்கும். கடுகு போட்டால் பொரிந்து தூரத்தில் போய் விழும். சில முகங்களில் அயர்ன் பாக்ஸ் போல ஆவி பறக்கும். தடிமனான படுக்கை விரிப்பைக்கூட நேர்த்தியாக அயர்ன் செய்து விடலாம். வேறு சில முகங்கள் பாறை போல இறுகிக் காணப்படும். மோதினால் தலை நசுங்கி விடும்.  

டென்ஷன் எனும் பரபரப்பு காலை நேரங்களில் மட்டுமல்ல... படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் கூட பலரை ஆட்டிப் படைக்கிறது. டென்ஷன் எனும் வலைக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள், சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட உணர்ச்சிவசப்படுகிறார்கள். இந்த டென்ஷன் நம்மைப் படிப்படியாக ரத்த அழுத்த பிரச்னையில் தள்ளி, இறுதியில் இதய நோயில் கொண்டு போய் விடுகிறது. இந்த டென்ஷனைப் பற்றி சற்றுப் பேசலாமா?

மனவேகமும் உடல்வேகமும் போட்டி போட இயலாத நிலையில் உருவாவதே பரபரப்பு. மன வேகத்திற்கு ஒருபோதும் உடல் செயலாற்றும் திறன் ஈடாக முடிவதில்லை. ‘காற்றை விட வேகமாக பயணித்துச் செல்லக்கூடியது மனித மனமே’ என மகாபாரதம் சொல்கிறது. ஆபீஸுக்கு லேட்டாகிவிட்டதே என்ற கவலையோடு நீங்கள் பஸ் ஸ்டாப்பில் நிற்பீர்கள். உங்கள் மனம் உங்களுக்கு முன்பாகவே ஆபீஸ் சென்று, இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்கிவிடும். பஸ் லேட்டாக வருவது, டிராபிக் ஜாம் என எந்தத் தடையும் மனதுக்குக் கிடையாது. அது ஆபீஸ் போய்விட்டு, உடலையும் உடனே அழைக்கும்! அப்போது ஒரு இனம் புரியாத பரபரப்பு உடலையும் மனதையும் ஆட்கொள்கிறதல்லவா? அந்த பரபரப்பே டென்ஷன்!

பொதுவாக அனைவருக்குமே இந்த டென்ஷன் இருந்தாலும், இதன் விளைவுகளால் அதிகம் பாதிப்பிற்கு ஆளாபவர்கள் பொறுமை இல்லாதவர்களும் உணர்ச்சிவசப்படுபவர்களுமே. காலை வேளைகளில் கடமைகள் அதிகம் இருப்பதால் டென்ஷன் அதிகமாகிறது. அதிக பரபரப்பில் எந்த செயலையும் சீராக செய்ய முடியாமல் போகிறது. பதறிய காரியங்கள் சிதறிப் போகின்றன.

இந்த டென்ஷனை எப்படிக் குறைத்துக் கொள்வது?

டென்ஷன் எங்கிருந்தோ ஓடி வந்து நம்மை ஒட்டிக் கொள்வதில்லை. நாமாக வலியச் சென்று வரவழைத்துக் கொள்கிறோம். டென்ஷன் எனும் நகையை காலையில் எழுந்த உடனேயே எடுத்துக் கழுத்தில் அணிந்து கொள்கிறோம். ‘‘ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் போதவில்லை’’ என அங்கலாய்க்கிறோம். டென்ஷன் ஒரு தொற்று நோய். வீட்டில் ஒருவர் டென்ஷனாக இருந்தாலும் போதும்... அது அப்படியே பரவி வீட்டிலுள்ள அனைவரையும் தொற்றிக் கொள்கிறது.

இந்த டென்ஷனிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமா?

பொதுவாக எந்த வேலையையும் திட்டமிட்டுக் கச்சிதமாகச் செய்பவர்களை டென்ஷன் எனும் பூதம் ஆட்டிப் படைப்பதில்லை. உதாரணமாக, நாளை செய்ய வேண்டிய வேலைகளுக்கு இன்றே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நாளைக்கு இவரைப் பார்க்க வேண்டும், இந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்றால், அதையெல்லாம் திட்டமிடுங்கள். உங்கள் டைரியின் நாளைய பக்கம் இன்றே எழுதப்பட வேண்டும். எப்படிப் பயணிப்பது, வேலைகளை எங்கிருந்து ஆரம்பிப்பது என திட்டமிட்டு செயலாற்ற ஆரம்பியுங்கள். உங்கள் கடிகாரத்தை 5 நிமிடங்கள் முன்னோக்கி வையுங்கள். உங்களை அறியாமல் உங்கள் காரியங்கள் குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும்.

எந்த வேலையையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யுங்கள், பாதி டென்ஷன் குறையும். பிடிக்காத வேலையில் மனம் ஒன்றாமல் ஈடுபடுபவர்கள் டென்ஷனுக்கு ஆளாவது இயற்கையே. ஏதாவது ஒரு பிடிக்காத வேலையினை நிர்பந்தம் காரணமாக செய்ய வேண்டி இருக்கிறதா... ‘இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். இதை நேர்த்தியாகச் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவேன்’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டு வேலைகளை ஆரம்பியுங்கள். பரபரப்போ, இடையூறோ இல்லாமல் அந்த வேலை எப்படி மளமளவென்று முடிகிறது என பாருங்கள்.

வீட்டிலும் அலுவலகத்திலும் பொருட்களை எடுத்த இடத்தில் வைத்தாலே பாதி டென்ஷன் குறையும். இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அனைவருமே அனுபவத்தில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். வீட்டில் குறிப்பிட்ட சாமான்களுக்கு குறிப்பிட்ட இடம் என ஒதுக்குங்கள். இடம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேடலில் வீணாகும் நேரம் மிச்சமாகும்!

அந்த நேரத்தை பொழுதுபோக்கிற்கு ஒதுக்குங்கள். உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். தோட்ட வேலை, இசையை ரசிப்பது, விளையாட்டு என பொழுதுபோக்கிற்காக ஒதுக்கப்படும் நேரம், டென்ஷனைக் குறைக்க பெரிதும் உதவும். பொதுவாக இன்னிசை எந்த ஒரு டென்ஷனையும் குறைத்து விடும் ஆற்றல் கொண்டது. கோபம், எரிச்சல், ஆத்திரம், பொறாமை எனும் தீய குணங்கள் ‘டென்ஷன்’ எனும் எரியும் தீயில் விழும் எண்ணெய்த் துளிகள். அந்த குணங்களைக் குறைத்துக் கொள்ளப் பழகுங்கள்.

பொதுவாக இன்று செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் நாளைக்கு என ஒத்திப் போடுவது நல்லதல்ல. இப்படித் தள்ளிப் போடும் பல காரியங்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மை டென்ஷனுக்கு ஆளாக்கி விடுகின்றன. டென்ஷனை படிப்படியாகக் குறைத்து, அதிலிருந்து முழுமையாக விடுபட மிகச் சிறந்த சாதனம் ஒன்று உண்டு. அதுவே தியானம், தியானம் பழகுங்கள். ஒரு நாளில் 20 நிமிடம் மனதைத் துடைத்து வைத்துக்கொண்டு அமைதியாக தியானம் செய்யலாம். தியானம், ஆரோக்கிய வாழ்வின் திறவுகோல். தியானத்தால் உடலும் மனமும் சமனப்படுகிறது. அப்போது டென்ஷன் கரைந்து விடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu