பேசத் தெரிய வேணும்!

பேசத் தெரிய வேணும்!

மேடையில் மட்டுமில்லை... மனிதர்களோடு பேசுவதற்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் கூட்டத்தில், தொலைபேசியில், ஏன்... அறிமுகம் இல்லாத புது இடத்திலும் புது மனிதர்களிடமும் பேச்சுதான் நாம் விரும்பும் விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது. நாம் விரும்புவது எதுவானாலும், அதைப் பேச்சின் மூலமே வெளிப்படுத்த முடியும்; அதன் விளைவான செயல்களால் அடைய முடியும். அதற்கு எப்படிப் பேச வேண்டும்?

* பேச்சு என்பது வெறுமனே தகவல் பரிமாற்றம் அல்ல. ‘இதை நாம் சொல்லிவிட்டால் போதும்’ என இருக்க முடியாது. எப்படிச் சொல்கிறோம் என்பதே, அந்தப் பேச்சுக்கான விளைவுகளைத் தருகிறது. எதையும் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் வகையில் நம் பேச்சு அமைய வேண்டும்.

* உங்கள் பேச்சே ஒரு சுறுசுறுப்பையும் பரபரப்பையும் பற்ற வைக்கும் வகையில் இருக்க வேண்டும். காட்டும் எனர்ஜி, கண்களில் தெரியும் தீர்க்கம், கை மற்றும் உடல்மொழி, குரலின் ஏற்ற இறக்கம் என உடலே பேச வேண்டும்.

* நம் பேச்சைக் கேட்கக் காத்திருப்பவர்களுக்கு ‘என்ன சொல்லப் போகிறார்’ என ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் பேச்சின் ஆரம்பமே ‘அடடா! என்ன அருமையாகப் பேசுகிறார்’ என நினைக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும். முதல் நிமிடத்திலேயே அவர்களைக் கூர்ந்து கவனிக்க வைத்துவிட வேண்டும். நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன என்பதையும் உடனடியாகச் சொல்லிவிட வேண்டும். அதை வெளிப்படுத்தும் விதம் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும்.

* கச்சிதமான வார்த்தைப் பிரயோகம் முக்கியம். நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை மிக சிறப்பாக வெளிப்படுத்தும் வார்த்தை எதுவோ, அதைப் பொருத்தமாகப் பயன்படுத்த வேண்டும். வார்த்தைகளை மிகவும் திட்டமிட்டு செதுக்கி பேச்சில் இணைக்க வேண்டும். யாருக்கும் புரியாத பழைய இலக்கியத்திலிருந்தோ, அந்நிய மொழியிலிருந்தோ வார்த்தைகளை எடுக்காமல், பேச்சு வழக்கில் உள்ள, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சென்றடையக் கூடிய, அலங்காரமான, வலிமையான வார்த்தைகளே, சொல்லும் விஷயத்தை கேட்பவரின் மனதில் கொண்டு போய் சேர்க்கிறது.

* கேட்பவரின் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். உரையாடல் என்பது உதடுகளுக்கும் காதுகளுக்கும் இடையே மட்டும் நிகழ்வதல்ல; அது கண்களுக்கு இடையேயும் நிகழ்கிறது.

* பேச்சு சுவாரசியமாக இருக்க, நகைச்சுவை சேர்ப்பது அவசியம்தான். ஆனால் வலிந்து திணிக்காதீர்கள். அது, உங்கள் பேச்சில் முக்கியமான விஷயம் எதுவும் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

* அளவு மிக முக்கியம். அளவாகப் பெய்தால்தான் ‘மழை பொழிந்தது’ என்போம். ஆபத்தைத் தந்தால் ‘கொட்டித் தீர்த்த பேய் மழை’ என திட்டுகிறார்கள். எத்தனையோ பரபரப்புக்கு மத்தியில் ஒருவரை அதிக நேரம் இறுக்கிப் பிடித்து அமர்த்தி உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடியாது. அளவைத் தாண்டி பேசினால், கேட்பவர் பொறுமையிழப்பார். நல்ல விஷயத்தை அழுத்தமாகச் சொல்வதற்கு நேரம் ஒரு பொருட்டில்லை. ஆபிரகாம் லிங்கன் கெட்டிஸ்பர்க்கில் வெறும் 4 நிமிடங்கள்தான் பேசினார்; 20 வரிகளில் வரும் நானூற்றி சொச்சம் வார்த்தைகள்தான் மொத்த உரையே! இன்றைக்கும் புகழ்பெற்ற அரசியல் உரையாக அதுதான் கருதப்படுகிறது.

* கேட்பவர்கள் யாரோ, அதற்கு ஏற்றபடிதான் பேச வேண்டும். அவர்களில் ஒருவராக நெருங்கினால்தான் கருத்துப் பரிமாற்றம் சுலபமாகும். எளிய மக்களிடம் பேசும்போது, புகழ்பெற்ற சினிமா வசனங்கள், குட்டிக்கதைகள், ஒப்பீடுகள் எனப் பேசினால் அழுத்தமாக எதையும் பதிய வைக்கலாம்.

* ஒருவரால் ஒரு நிமிடத்துக்கு அதிகபட்சம் 250 சொற்களைப் பேச முடியும். ஆனால் எவராலும் ஒரு நிமிடத்தில் 800 சொற்களைக் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும். அதனால், ‘வேகமாகச் சொன்னால் இவர்களுக்குப் புரியுமா?’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். யாரும் யார் சொல்வதையும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில்லை. சொல்லும் விஷயம் எதுவோ, அதை தங்களுக்குத் தகுந்த விதத்தில், தங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளைப் போட்டுப் புரிந்துகொள்கிறார்கள்.

* நல்ல பேச்சுத்திறன் கைவருவதற்கு நிறைய படிக்க வேண்டும். நிறைய நூல்களைப் படித்தால் புதிய கருத்துகள் கிடைக்கும்; நல்ல சொற்கள் அறிமுகமாகும். அவை பேச்சில் வெளிப்படும். படிப்பதையும், கேட்டதையும் மனதில் அலசி சிந்திக்க வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க, அரிய கருத்துக்கள் தோன்றும்.

* பேசும் எந்த விஷயத்தையும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். பெரிய பேச்சாளர்கள் பலர், கண்ணாடி முன்னால் நின்று பேசி பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எளிய உரையாடல்களுக்கு அது தேவையில்லை என்றாலும், குறைந்தபட்சம் மனதுக்குள் பேசி பயிற்சி எடுத்தல் அவசியம்.

* தெளிவும் நம்பிக்கையும் துணிவும் அவசியம். நீங்கள் பேசப் போகிற விஷயத்தில் உங்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். உங்கள் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நீங்கள் சொல்கிற விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்பதைத் துணிச்சலோடு வெளிப்படுத்த வேண்டும்.

* பேசத் தெரிந்தவர்களாக மட்டுமின்றி, கேட்கத் தெரிந்தவர்களாகவும் இருங்கள். அடுத்தவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவும், மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் தெரிந்து வைத்திருங்கள்.

* நீண்ட நேரம் பேசுவதாக இருந்தால், பேச்சின் எல்லா கட்டங்களிலும் நீங்கள் சொல்ல வந்த விஷயம் என்ன என்பதை அடிநாதமாக வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

* பேச்சை ஆரம்பிக்கத் தெரிந்தது போல, நிறுத்தவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுவாரசியமான ஒரு விஷயத்தை விவரிக்கும்போது, இடையில் சில நொடிகள் இடைவெளி விடுவது, கேட்பவர்களுக்கு அதை கவனித்து யோசிக்க நேரம் கொடுக்கும். பேச்சை இறுதியாக முடிக்கும்போதும் தடுமாற்றம் கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu