நேர நிர்வாக டிப்ஸ்

நேர நிர்வாக டிப்ஸ்

1. நேர நிர்வாகம் என்பது நேரத்தைத் திட்டமிடுவது இல்லை. உங்களைத் திட்டமிடுவது! எவ்வளவுதான் திட்டமிட்டு உழைப்பவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். அந்த நேரத்தில் நீங்கள் எப்படி செயல்படுவது என்பதையே திட்டமிடுகிறீர்கள்.

2. எந்த விஷயத்தில் நமது நேரம் பயனற்ற வகையில் நீண்ட நேரம் செலவழிகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். நண்பர்களுடன் அரட்டை, செல்போன் பேச்சு, டீக்கடை மீட்டிங், டி.வியில் கிரிக்கெட் மேட்ச்… என எல்லாவற்றுக்கும் வாழ்க்கையில் பங்கு இருக்க வேண்டும். பொழுதுபோக்கு இல்லாத வாழ்க்கை போரடித்துவிடும். ஆனால் அதுவே நாளின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துவிடக் கூடாது. கவனம்!

3. சில சின்னச்சின்ன உறுதிகளை எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். ‘இரண்டு மணி நேரத்தில் இந்த வேலையை முடிக்க வேண்டும்; அதுவரை யாருக்கும் போனில் பேசக்கூடாது’ எனத் தீர்மானிக்கலாம். ‘இன்று மாலை 5 மணிக்குள் இதை முடிக்க வேண்டும். அதுவரை டி.வி பக்கம் பார்வையைத் திருப்பக்கூடாது’ என முடிவு செய்யலாம். இந்த முடிவுகள், உங்கள் வேலையை விரைந்து முடிக்க வைக்கும்.

4. ஒவ்வொரு நாளிலும், ‘இன்று செய்து முடிக்க வேண்டியது என்ன’ எனப் பத்து நிமிடங்களாவது ஒதுக்கித் திட்டமிடுங்கள். இவை உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். தினம் தினம் அன்றைய வேலையை முடித்துவிட்டுப் போவதற்காக மட்டுமே நீங்கள் வாழவில்லை. அதற்கு இயந்திரங்கள் போதும். உங்கள் வளர்ச்சி மிக முக்கியம்!

5. இன்றைக்கு நீங்கள் முடிக்க வேண்டியவை என இருபது வேலைகள் இருக்கின்றன. அவற்றில் எதை முதலில் செய்வது, எதை லேட்டாகச் செய்யலாம் எனப் பிரித்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனில் அதை மதியம் இரண்டரை மணிக்குள் கட்டியாக வேண்டும். மாலையில் பார்த்துக் கொள்ளலாம் எனப் போனால், ஏமாற்றம் மிஞ்சுவதோடு அடுத்த நாள் வேலைகளில் ஒன்று கூடிவிடும். சமயங்களில் அபராதம் போன்ற இழப்புகளையும் ஏற்படுத்தும்.

6. எவ்வளவு சின்னதாக நீங்கள் பிசினஸ் செய்தாலும், சின்ன ஆபீஸை நிர்வகித்தாலும், மிகச்சிறிய நிறுவனத்தில் வேலை செய்தாலும், பகிர்ந்து செய்யும்போதுதான் முழுமை பெறுகிறது பணி. உங்களால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என நினைக்கும் வேலைகளை நீங்களே செய்யுங்கள். ‘யாரும் இதைச் செய்ய முடியும்’ என்கிற மாதிரியான வேலைகளைப் பகிர்ந்து கொடுக்கப் பழகுங்கள்.

7. சிலவிதமான தினசரி நியதிகளுக்குப் பழகுங்கள். காலையில் பத்து மணிக்கு ஆபீஸ் போவது, தேடி வருகிறவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் சந்திப்பது, இந்த நேரத்தில் கண்டிப்பாக இங்கு இருப்பார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என நியதிகளுக்குப் பழகினால் நேரம் கச்சிதமாகப் பயன்படும்.

8. ‘ஒவ்வொரு வேலைக்கும் இதுதான் நேரம்’ எனக் குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்குங்கள். படிப்பதற்கு இவ்வளவு நேரம், கடிதங்களுக்குப் பதில் தர இவ்வளவு நேரம் என நேரம் ஒதுக்கிச் செய்யும்போது எந்த வேலையும் உங்கள் நேரத்தை விழுங்கி விடாது.

9. சிலருக்குத் தினமும் தேடுவதிலேயே நிறைய நேரம் வீணாகும். எதை எங்கே வைத்தோம் எனத் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பார்கள். எங்கெங்கோ தேடியது கடைசியில் பார்த்தால், டேபிளிலேயே இருக்கும். இன்சூரன்ஸ் பாலிசி, டெலிபோன் பில் எனப் பலவற்றையும் இப்படி மறந்து வைத்து, உரிய நேரத்தில் கட்டாமல் விட்டு, கடைசியில் அபராதத்தோடு சேர்த்துக் கட்டுகிறவர்கள் பலர். இதை இந்த இடத்தில்தான் வைக்க வேண்டும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு இடத்தை நிர்ணயித்துவிட்டால், நிறைய நேரம் மிச்சமாகும் என்பது உண்மை.

10. வாழ்க்கையில் பலருக்கும் காத்திருப்பதிலேயே நிறைய நேரம் வீணாகிவிடுகிறது என்பது உண்மை. டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கினாலும், உரிய நேரத்தில் அழைக்கப்படுவதில்லை; ரயில் குறித்த நேரத்து வருவதில்லை. பஸ்ஸில் ஏறினால் எங்காவது வழியில் சாப்பிட நிறுத்திவிடுகிறார்கள். இப்படி விரயமாகும் நேரத்தை நகத்தைக் கடித்தபடி கடத்துவதைவிட, உருப்படியாகச் சில வேலைகளைச் செய்யலாம். புத்தகம் படிக்கலாம்; நீண்ட நாட்களாகப் பேசாமல் இருக்கும் ஒரு நண்பரை நலம் விசாரிக்கலாம்; ‘அடுத்த வாரம் கூப்பிடுங்கள்’ எனச் சொல்லியிருந்த ஒரு பிசினஸ் தொடர்பாளரைக் கூப்பிட்டுப் பேசலாம். கையோடு ஏதாவது அலுவலக வேலைகளை எடுத்துச் சென்று முடிக்கலாம். காத்திருக்கும் அவஸ்தையும் இருக்காது; நேரமும் வீணாகாது!                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu