சாதனை புரிவதற்கு என்ன வேண்டும்?

சாதனை புரிவதற்கு என்ன வேண்டும்?

ஒருமுறை நாரதர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது. நாரதரின் ‘‘நாராயண...’’ நாமத்தைக் கேட்டதும் அந்த யோகி கண்விழித்துப் பார்த்தார்.

‘‘நாரத பகவானே, எங்கு சென்று கொண்டிருக்கிறீர்?’’ என்றார்.

‘‘நான் கைலாயம் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார் நாரதர்.

‘‘அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் நீண்ட காலமாக சிவபெருமானை தரிசிப்பதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தவம் செய்தால் அது சாத்தியமாகும் என்பதைக் கேட்டுவந்து சொல்வீர்களா?’’ என்றார் யோகி.

‘‘கட்டாயம் கேட்டு வருகிறேன்...’’ என்று நகர்ந்த நாரதர், கொஞ்ச தூரம் சென்றதும் வேறு ஒரு யோகியைப் பார்த்தார். அந்த யோகி, ‘‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’’ எனப் பாடி ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அவரும் நாரதரைப் பார்த்ததும், ‘‘எங்கே போகிறீர்கள்?’’ என்று விசாரித்தார்.

‘‘வைகுண்டத்திற்கு...’’ என்றார் நாரதர்.

‘‘மகிழ்ச்சி. இன்னும் எத்தனை காலம் பஜனை செய்து கொண்டிருந்தால் நான் இறைவனை அடையலாம் என்பதைத் தெரிந்து கொண்டு வரமுடியுமா?’’

‘‘கட்டாயம் தெரிந்து வருகிறேன்.’’ என விடைபெற்றார் நாரதர்.

மாதங்கள் பல கடந்தன. நாரதர் மீண்டும் பூலோகத்திற்கு வந்தார்.

புற்று வளர்ந்து தன்னை மூடிக்கொண்டிருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தியானத்தில் இருந்த யோகியைப் பார்த்தார். ‘‘சிவபெருமானிடம் தாங்கள் கேட்டதைச் சொன்னேன். நீங்கள் இன்னும் நான்கு பிறவிகள் எடுத்து தியானம் செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்கு பின்னரே நீங்கள் கைலாயத்திற்கு வரமுடியுமாம்’’ என்று நாரதர் சொன்னதும் வாலிப யோகி அலறினார். புலம்பினார். கண்ணீர் வடித்தார்.

நாரதர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, ‘‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’’ என ஆடிப் பாடிய யோகியிடம் சென்றார். ‘‘நாரதரே! வைகுண்டம் சென்றீர்களா? சேதி ஏதேனும் உண்டா?’’ என்று அவர் விசாரித்தார்.

‘‘உண்டே! அதோ தெரிகிறதே, அந்த மரத்தில் எத்தனை இலைகள் உள்ளனவோ, அத்தனை பிறவிகள் எடுத்த பிறகுதான் தாங்கள் வைகுண்டத்திற்கு வரமுடியுமாம்!’’

‘‘ஓ! இவ்வளவுதானா? இறைவனுக்கு நன்றி. இந்த மரத்தில் மட்டுமில்லை... இந்தத் தோப்பில் உள்ள மரங்கள் அனைத்திலும் இருக்கும் இலைகளின் அளவுக்கு பிறவி எடுக்கவும் நான் தயார்’’ என்று கூறியவர், மீண்டும் பஜனையில் மூழ்கிவிட்டார்.

அப்போது வைகுண்டத்திலிருந்து ஒரு ரதம் வந்தது. ‘‘பரந்தாமன் உங்களை உடனே வைகுண்டத்திற்கு அழைத்து வருமாறு கட்டளை இட்டுள்ளார்’’ என்றனர் அதிலிருந்த தேவர்கள்.

‘‘ஆனால் நான் வைகுண்டம் செல்ல பல பிறவி எடுக்க வேண்டும் என நாரதர் இப்போதுதானே சொன்னார்?’’

‘‘எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுத்து இறைவனை அடைய நீ தயாராய் இருக்கிறாய். அதில் பொறுமையும் ஈடுபாடும் நம்பிக்கையும் உனக்கு இருக்கிறது. அதனால் நீ இப்போதே வைகுண்டம் செல்லலாம்’’ என்றார் நாரதர்.

இந்தக் கதை போதிக்கும் உண்மை... பொறுமையும் மன உறுதியும் நம்பிக்கையும் இல்லாமல் சாதனையை எதிர்பார்க்கக் கூடாது. அமைதியில்லாத மனதினால் எந்தத் தகுதியையும் அடைய முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu