எதையும் சரியாகச் செய்யுங்கள்!

எதையும் சரியாகச் செய்யுங்கள்!

தவறுகளிலிருந்துதான் புதிய விஷயங்களை மனித இனம் கற்றுக் கொள்கிறது. ஆனால் எல்லா தவறுகளையும் ஒரே மாதிரி பார்க்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ‘‘சில தவறுகளைச் செய்யப் பயப்படத் தேவையில்லை. அவைதான் நம்மை பண்பட்டவர்களாக செதுக்குகின்றன’’ என்கிறார்கள் வாழ்க்கை நலக் கல்வி தரும் நிபுணர்கள். அவை...

தப்பானவரிடம் காட்டும் அன்பு:

நம் நேசத்தை எல்லாம் கொட்டி உருவாக்கும் ஒரு உறவு தப்பானது என்றால் இதயமே நொறுங்கிப் போய் விடும். ஆறாத் துயரத்தில் கண்ணீர் பெருக்கெடுக்கும். மாதங்கள், வருடங்கள் கடந்த பின்னும் அந்த வடு மறையாது. ‘இப்படி ஒரு தப்பு செய்தோமே’ என சுய பச்சாதாபம் கொண்டு, முடங்கிப் போகும் பெண்கள் அநேகம். ஆனால் இதில் நீங்கள் எங்கே தப்பு செய்தீர்கள். அந்த நபர் தவறானவராக இருந்தால், அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? புரிந்து கொள்ளுங்கள்... எவ்வளவு மோசமாக உடைந்த இதயமும், என்றாவது ஒருநாள் குணமாகும்!

தப்பான இடத்தில் வேலை:

படித்து முடித்த உடனே, எல்லோருக்குமே கனவு காணும் வேலை கிடைத்து விடுவதில்லை. இங்கே அங்கே முயற்சித்து எங்காவது வேலையில் சேர்ந்த பிறகுதான் தெரிய வரும், அது தப்பான இடம் என்று! ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாது. பணிபுரியும் சூழல், உடன் இருக்கும் மனிதர்களின் மனநிலை என எதுவுமே கற்றுத் தருவதாகவோ, நிம்மதியாக வேலை பார்க்க விடுவதாகவோ இருக்காது. ஆனால், இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்; இப்படியும் இடங்கள் இருக்கின்றன என்பதை அங்கேதானே கற்றுக்கொள்ள முடியும்!

தப்பான நபரிடம் நம்பிக்கை:

ஒரு நண்பரையோ, உறவினரையோ நம்பி ஒரு விஷயம் சொல்கிறீர்கள்; அல்லது ஏதாவது பொருளைத் தருகிறீர்கள். ஆனால் அவர் நம்பிக்கை மோசடி செய்து விடுகிறார். ‘இவரைப் போய் நம்பினோமே’ என உடைந்து போவோம். ஆனால் அதற்காக, ‘இனிமேல் யாருடைய நட்பும் உறவும் வேண்டாம்’ என இந்த உலகத்திலிருந்து நம்மைத் துண்டித்துக் கொண்டுவிட முடியுமா என்ன? இது ஒரு பாடம். கண்ணை மூடிக் கொண்டு யாரையும் நம்பி விடக் கூடாது என்பது கிடைத்த படிப்பினை. ‘அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அவர்தான் தப்பு செய்துவிட்டார்’ என நீங்கள் பெருமிதமாக நினைக்கலாம்.

தப்பான பொருளை வாங்குவது:

‘எல்லோரும் வாங்குகிறார்கள்; இப்போது விட்டால் இத்தனை மலிவாகக் கிடைக்காது’ என ஒரு பொருளைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம், உங்களையும் வாங்கச் செய்து விடும். வாங்கிய பிறகுதான், ‘இதற்கு இவ்வளவு விலை தந்திருக்க வேண்டுமா? இத்தனை ஆண்டு கால சேமிப்பையும் இதில் தொலைத்தோமே’ என்று தோன்றும். ஆனால், சில பாடங்களை அதிக விலை கொடுத்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களிடம் பணம் இல்லாதபோது, தேவையற்ற பொருட்களே வீட்டை நிறைத்திருக்கும்போது, ‘பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக செலவழிப்பது’ என்ற பாடம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

அருமை தெரியாமல் நடத்துவது:

ஒரு பழமொழி நம் கிராமங்களில் உண்டு... ‘செத்தால்தான் தெரியும் செட்டியார் அருமை’ என! நம் கண்ணெதிரே இருக்கும் அந்த உறவு, நாம் வேண்டும்போதெல்லாம் உதவி செய்யும் அந்த நட்பு. ஆனால் இப்படி நாம் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவே உதவுவதற்கு ஓடோடி வரும் உறவு அல்லது நட்பின் அருமை நமக்குப் புரிவதில்லை. அது இல்லாமல் போகும் நொடியில்தான், நாம் எவ்வளவு பெரிய விஷயத்தை இழந்திருக்கிறோம் என்பது புரியும். ஆனால், இப்படிப்பட்ட அருமையான உறவை எப்படிக் கையாள்வது என்ற பாடத்தை இந்தத் தவறு கற்றுத் தரும்.

வேலையில் தப்பு செய்வது:

புதிதாக ஒரு வேலையில் சேரும்போது, நம்மை நிரூபிக்க வேண்டும் எனத் துடிப்போம். அந்தத் துடிப்பிலும் அவசரத்திலும் செய்யும் வேலைகள் பல சமயங்கள் நல்ல பெயரை சம்பாதித்துத் தரும்; சில சமயங்களில் திட்டு வாங்கவும் வைக்கும். திட்டு வாங்கிய ஆத்திரத்தில், ‘இனி தப்பு செய்யக் கூடாது’ என நீங்கள் முடிவெடுத்தால், இனி புதுமையாக எதையும் நீங்கள் செய்யப் போவதில்லை என அர்த்தம். புதிய விஷயங்களைச் செய்பவர்கள்தான் சில சமயங்களில் தவறுகளையும் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

பலர் முன்னிலையில் சங்கடம்:

ஒரு கூட்டத்தில், ஒரு விழாவில், ஒரு விருந்தில், ஒரு குடும்ப நிகழ்ச்சியில், ஒரு அலுவலக மீட்டிங்கில் பலர் முன்னிலையில் அபத்தமாக எதையாவது செய்து, அடுத்தவர்களின் கேலிக்கு ஆளாகிற நிலைமை பலருக்கு நேர்ந்திருக்கும். ஆனால், ‘இந்த நிமிடமே பூமி பிளந்து நம்மை உள்வாங்கிக் கொள்ளக் கூடாதா’ என துக்கப்படும் அளவுக்கு இது மோசமான விஷயமில்லை. இதுபோன்ற தவறுகளில் உடைந்து போகாமல் இருப்பதுதான் உங்கள் உறுதியை மற்றவர்களுக்கு உணர்த்தும். எதுவுமே நடக்காதது போல பாவனை காட்டுங்கள். உங்கள் உறுதி அடுத்தவர்களை வியக்க வைக்கும்.

உடலுக்குக் காட்டும் அலட்சியம்:

இளமைத் துடிப்போடு இருக்கும்போது, எதையும் சாதிக்கும் எனர்ஜியோடு வலம் வரும்போது, நாம் எல்லாவற்றையும் சவாலாக எடுத்துக் கொண்டு செய்வோம். வயதாக ஆக, நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஏதாவது ஒரு கட்டத்தில் உடம்புக்கு முடியாமல் படுக்கும்போதுதான் தவறு உறைக்கும். ‘இனி நம் உடலை அலட்சியமாக விடக் கூடாது’ என்ற பாடத்தை அந்தத் தவறு கற்றுக் கொடுக்கும்.         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu