கைகள் ஸ்லிம் ஆக…!
கைகள் ஸ்லிம் ஆக…!
ஸ்லிம் தோற்றத்தில் பெருமிதம் கொள்ளும் பல பெண்களுக்கும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்னை இருக்கும். அது, தோள்களைத் தாண்டிய பகுதியில் கைகள் மட்டும் பெரிதாவது. ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டுப்புடவைக்கு தைத்த ஜாக்கெட், இப்போது போட்டால் கைகளில் ஏறாது. ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்கிவந்த ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸை போட்டுப் பார்த்தால், கைகள் ஏதோ மல்யுத்த சாம்பியன் போன்ற தோற்றம் தரும்.
ஆண்களுக்கு கைகளை மடக்கி ‘ஆர்ம்ஸ்’ காட்டுவது அழகு. அதுவே பெண்களுக்கு அந்த இடத்தில் தசைத் திரட்சி அதிகம் இருப்பது பிரச்னை. அங்கு சேரும் கொழுப்பைக் கரைத்து, கைகளை அழகாக வைத்திருப்பது எப்படி?
- கைகள் பெரிதாகின்றன என்றால், உடலுக்கு போதுமான வேலையை நாம் தரவில்லை என்று அர்த்தம். அதற்காக ஜிம்முக்குப் போய் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. ‘மாப்’ போட்டு தரையைத் துடைப்பதும் ஒருவகை உடற்பயிற்சியே. இதைச் செய்தால் கைகளில் கொழுப்பு கரையும். நீண்ட துடைப்பத்தை இறுக்கமாகப் பிடித்து பெருக்குவது, துணிகளை அயர்ன் செய்வது என விறுவிறுப்பான வேலைகளிலேயே கைகள் மெலியும்.
- உணவும் மிக முக்கியம். அதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்; துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், அரை வேக்காடாக வேக வைத்த காய்கறிகள் என இயற்கை சார்ந்த உணவுகள் உங்கள் தட்டில் அதிகம் இருக்க வேண்டும்.
- வீட்டிலேயே இன்னொரு பயிற்சியும் செய்யலாம். அது, ஸ்கிப்பிங்! வியர்க்க வியர்க்க ஸ்கிப்பிங் செய்வது, கைகளில் எப்படி கொழுப்பைக் குறைத்து வலுவாக்கும் என்ற சந்தேகம் வேண்டாம்! உடல் எடையை மொத்தமாக தூக்கிக் கொண்டு குதிப்பதால், உடலில் கொழுப்பைக் கரைக்கச் செய்கிறது ஸ்கிப்பிங். அதேநேரத்தில், குதிக்கும்போது ஸ்கிப்பிங் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கைகளை வட்டமாகச் சுற்றுவதால், கைகளுக்கு அது பெரிய பயிற்சி ஆகிறது.
- உடற்பயிற்சி என்பது அதிகாலையிலும் அந்திமாலையிலும் மட்டுமே செய்வது என நினைக்க வேண்டாம். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ‘ஸ்ட்ரெச்சிங்’ செய்யுங்கள். இதனால் சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். உங்கள் டென்ஷனும் குறையும். இந்த ‘ஸ்ட்ரெச்சிங்’ பயிற்சியால் கைகள் பழையபடி ஸ்லிம் தோற்றத்துக்கு வந்துவிடும்.
எப்படி செய்வது?
- கைகளை தலைக்குப் பின்னால் கொண்டுசென்று, இரண்டு கை விரல்களையும் பிணைத்துக் கொள்ளுங்கள். அப்படியே கரங்களை தலைக்கு மேல் உயர்த்துங்கள். அதே நிலையில் இடதுபுறமாக உங்கள் இடுப்பைத் திருப்புங்கள்; சில நொடிகள் விட்டு வலதுபுறமாகத் திருப்புங்கள்.
- இரண்டு கைகளையும் பின்புறம் கொண்டு சென்று, அடி முதுகுக்கு நேராக கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளுங்கள். கைகளை அப்படியே பின்னால் நீட்டுங்கள்; மார்பு விரிந்து முன்னால் வரும் அளவுக்கு கைகள் நீள வேண்டும். இந்தப் பயிற்சி கைகளை மெலியச் செய்வதோடு, முதுகுவலிக்கும் நிவாரணம் தரும்.
- மணிக்கட்டுப் பயிற்சியும் கைகளை ஸ்லிம் ஆக்கும் இன்னொரு எக்சர்சைஸ். இரண்டு கைகளிலும் எடை குறைந்த தம்புள்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். கால்களை சற்றே அகல வைத்துக் கொண்டு நில்லுங்கள். இரண்டு கைகளையும் முன்னே நீட்டுங்கள். இறுக்கமாக கைகளை வைத்துக் கொண்டு மணிக்கட்டை மட்டும் மேலேயும் கீழேயும் ஆட்டுங்கள். இருபது முறை செய்துவிட்டு சற்றே ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் செய்யுங்கள். தம்புள்ஸை கால்களில் போட்டுக் கொள்ளாமல் கவனமாகச் செய்யுங்கள்.
- பள்ளி நாட்களில் பையன்கள் ‘புல் அப்ஸ்’ செய்வதைப் பார்த்திருப்பீர்கள். உயரம் தாண்டுதலுக்கு வைத்திருக்கும் கம்பி போல உயரத்தில் இருக்கும் ஒரு இரும்புக்குழாயை இரண்டு கைகளாலும் பிடித்தபடி, அப்படியே குதித்து மேலெழும்பி தாடையை அந்தக் கம்பிக்கு மேலே உயர்த்தி அந்தரத்தில் நிற்க வேண்டும். இதில் கைகள் மிகவும் வலுப்பெறுகின்றன. தேவையற்ற கொழுப்பு கரைந்து ஸ்லிம் தோற்றம் கிடைக்கிறது.
- தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கைகளை இருபுறமும் இடுப்புக்கு ஒரு அடி தூரம் தள்ளி தரையில் வைத்துக்கொள்ளுங்கள். கைவிரல்கள் பின்புறம் நோக்கி இருக்கட்டும். கால்களை குத்தங்கால் போட்டு அமர்ந்து, இரண்டு பாதங்களையும் அருகருகே வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் முழு எடையையும் கைகளுக்குக் கொடுத்தபடி, அப்படியே கைகளை நேராக தரையில் ஊன்றிக் கொண்டு உடலை மேலே தூக்குங்கள். ஒரு கையை மட்டும் வளைத்து ஒருபுறமாக சாயுங்கள். பிறகு அந்தக் கையை நேராக்கிக் கொண்டு, மற்றொரு கையைச் சாய்த்து அந்தப் பக்கம் உடலை வளையுங்கள்.
Share
Related Posts