மூட்டுவலியை மறந்து விடுங்கள்!

மூட்டுவலியை மறந்து விடுங்கள்!

நமது உடலில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் உறுப்பு, கால் மூட்டுக்கள்தான்! உடலின் முழு எடையையும் தாங்குவதால், அது சீக்கிரமே சீரற்றுப் போய் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. முதுமையை நெருங்குபவர்கள் மட்டுமின்றி, எல்லா வயதுகளில் இருப்பவர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்; என்ன, முதியவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக இந்தப் பிரச்னை இருக்கும். நீண்டநாள் உழைப்பும் தேய்மானமும் சிலரை நிரந்தர மூட்டுவலி நோயாளி ஆக்கிவிடும். சிலருக்குக் காயத்தாலோ, தவறான உடற்பயிற்சியாலோ திடீரென மூட்டுவலி ஏற்படக்கூடும். என்ன காரணத்தால் மூட்டுவலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து வலியும் சிகிச்சையும் வித்தியாசப்படும்.

பொதுவான உண்மைகள்:

* பெரும்பாலான மூட்டுப் பிரச்னைகளுக்கு முதுமையே முக்கிய காரணம்.

* உலக அளவில் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது.

* பிறவியிலேயே இருக்கும் உடல் கோளாறுகளும் மூட்டுவலிக்குக் காரணமாகலாம். ஒரு காலைவிட இன்னொரு கால் நீளம் குறைவாக இருப்பது, பாதங்கள் தட்டையாக இருப்பது, மூட்டு இணைப்பு தவறான முறையில் பிணைந்திருப்பது போன்றவை இப்படியான பிறவிக் கோளாறுகள்!

* நீண்ட காலம் உடலுக்கு வேலை தராமல் இருந்தாலும், மூட்டுவலி ஏற்படும்.

* எல்லா மூட்டுவலியும் சீரியஸான பிரச்னை அல்ல.

வலியைத் தடுக்கவும் தவிர்க்கவும்...

* வழக்கமான வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கால்களுக்குப் போதுமான ஓய்வு கொடுங்கள்.

* வலியை அதிகமாக்கும் அளவுக்கு நடக்காதீர்கள்; ஓடாதீர்கள்; படிகளில் ஏறாதீர்கள்.

* ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி, வலிக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை ஒத்தடம் கொடுங்கள்.

* அதிக உடல் எடையோடு இருந்தால், உடனடியாக எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

* நீண்ட நேரம் நிற்காதீர்கள். நிற்க நேர்ந்தால், இரண்டு கால்களுக்கும் சமமாக எடையைப் பரப்புங்கள்.

* நிபுணர்களின் வழிகாட்டுதலோடு மட்டும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடலுக்குப் பொருந்தாத எதையும், நீங்களாகவே முயற்சித்துச் செய்யாதீர்கள்.

* ஓடுவதைவிட சைக்கிள் ஓட்டுவதும், நீச்சலும் மூட்டுக்களுக்கு குறைந்த அழுத்தத்தைத் தந்து பாதுகாக்கும்.

* சமமான, மிருதுவான தரையில் ஓடுங்கள்.

* மூட்டுகளுக்கு அடியிலோ, இடையிலோ ஒரு தலையணை வைத்துக்கொண்டு தூங்குங்கள்.

* குஷன் வசதி கொண்ட ஷூக்களை அணியுங்கள்.

எப்போது டாக்டரிடம் போக வேண்டும்?

* முட்டியை மடக்கவோ, நீட்டவோ முடியாதபோது

* உங்கள் உடல் எடையைத் தாங்கி நிற்கமுடியாத அளவு வலிக்கும்போது

* மூட்டில் வலியோடு வீக்கம், சிவந்திருப்பது என அறிகுறிகளோடு ஜுரமும் சேரும்போது

* மூட்டு அசைக்கவே முடியாதபடி அப்படியே ஒரு குறிப்பிட்ட நிலையில் நின்றுவிடும்போது

* மூட்டுவலி அதன் கீழே இருக்கும் கெண்டைக்கால் பகுதிக்கும் பரவி, அங்கும் வீக்கமும் தொடர் வலியும் இருக்கும்போது.              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu