‘ஒரு குழந்தையின் அத்தனை வளர்ச்சிக்கும் தாய்ப்பால்தான் ஆதாரம்’ என்பது நமக்குத் தெரியும். ‘அம்மா தரும் தாய்ப்பால் புற்றுநோய் செல்களைக்கூட அழிக்கும் சக்தி கொண்டது’ என்ற ஆச்சர்யமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது லேட்டஸ்ட் ஆய்வு ஒன்று. தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘ஹ்யூமன் ஆல்பா லேக்டால்புமின் மேட் லெதல் டு ட்யூமர்’. இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலைக்கழகம் மற்றும் கோத்தென் பெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய […]
நமது உடலில் அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் உறுப்பு, கால் மூட்டுக்கள்தான்! உடலின் முழு எடையையும் தாங்குவதால், அது சீக்கிரமே சீரற்றுப் போய் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. முதுமையை நெருங்குபவர்கள் மட்டுமின்றி, எல்லா வயதுகளில் இருப்பவர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்; என்ன, முதியவர்களுக்கு கொஞ்சம் அதிகமாக இந்தப் பிரச்னை இருக்கும். நீண்டநாள் உழைப்பும் தேய்மானமும் சிலரை நிரந்தர மூட்டுவலி நோயாளி ஆக்கிவிடும். சிலருக்குக் காயத்தாலோ, தவறான உடற்பயிற்சியாலோ திடீரென மூட்டுவலி ஏற்படக்கூடும். என்ன காரணத்தால் மூட்டுவலி ஏற்படுகிறது என்பதைப் […]
குழந்தையை ஆரோக்கியமாக வளர்ப்பதில் மட்டுமின்றி, அவர்களை அறிவாளியாக செதுக்குவதிலும் உணவுக்கு பெரும் பங்கு உண்டு. வளரும் குழந்தைக்கும் சரிவிகித ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு தருவது அவசியம். அப்படிப்பட்ட சூப்பர் உணவுகள் சில: ஓட்ஸ்: காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் குழந்தைகள், பள்ளியில் பாடங்களை ஊன்றி கவனிக்க முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நார்ச்சத்து நிரம்பிய முழு தானியமான ஓட்ஸ், சிறிது சிறிதாகவே ஜீரணமாகிறது. எனவே சீரான சக்தியை நீண்ட நேரம் குழந்தைக்கு வழங்குகிறது. லவங்கப்பட்டை தூள்: காலையில் குழந்தைக்குத் […]
மழையும் பனியும் மாறி மாறிக் கொட்டும் நாட்களில் அழைக்காமலே வீட்டுக்கு வந்துவிடும் இன்னொரு விருந்தாளி, ஜுரம்! குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் ஹோம் ஒர்க்கோடு வருகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக ஜலதோஷம், ஜுரத்தோடு வந்து விடுவார்கள். தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள் இந்த நாட்களில்தான் அதிகமாகத் தாக்கும். வைரஸ் போன்ற கிருமிகளும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும்.நமது உடல் வெப்பநிலை இயல்பான அளவைவிட அதிகமாவதையே நாம் ‘ஜுரம்’ என்கிறோம். ஆனால் எல்லோரும் நினைப்பதைப் போல ஜுரம் என்பது ஒரு நோய் […]
‘வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் & அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். சூரிய மறைவிற்குப் பின் தூங்கி, சூரிய உதயத்திற்கு முன்பு எழும் வழக்கமே ‘பின் தூங்கி முன் எழுவது’ எனப்படுகிறது. உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்கு பத்து […]
ஸ்லிம் தோற்றத்தில் பெருமிதம் கொள்ளும் பல பெண்களுக்கும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பிரச்னை இருக்கும். அது, தோள்களைத் தாண்டிய பகுதியில் கைகள் மட்டும் பெரிதாவது. ஆறு மாதங்களுக்கு முன்பு பட்டுப்புடவைக்கு தைத்த ஜாக்கெட், இப்போது போட்டால் கைகளில் ஏறாது. ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்கிவந்த ஸ்லீவ்லெஸ் டிரஸ்ஸை போட்டுப் பார்த்தால், கைகள் ஏதோ மல்யுத்த சாம்பியன் போன்ற தோற்றம் தரும்.ஆண்களுக்கு கைகளை மடக்கி ‘ஆர்ம்ஸ்’ காட்டுவது அழகு. அதுவே பெண்களுக்கு அந்த இடத்தில் தசைத் திரட்சி […]
உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இல்லாதவர்கள், வாயுத் தொல்லை என்ற பிரச்னையைக் கடந்து வராமல் இருக்க முடியாது! அதிலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு இந்தப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது. காரணம், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்தான். உணவை எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், எந்த உணவை உண்ண வேண்டும் என எதுவுமே பலருக்குத் தெரிவதில்லை.நாம் உண்ணும் உணவில் இருக்கும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து, நார்ச்சத்து எல்லாம் முழுமையாக உறிஞ்சப்படாமல், உணவு சரியாக […]
*காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். *குறைந்தது தினமும் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் நீண்ட நேரம் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. பசியை வளர்த்தால், அது அளவுக்கு அதிகமாக நம்மை சாப்பிட வைக்கும். *உடல் பருமனுக்கு முக்கியக் காரணம் அரிசிச் சாதம். உங்கள் உணவில் சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு […]
தூக்கம் உடலுக்கு மிக அவசியம். உடலுக்கும் மனதிற்கும் முழுமையான ஓய்வைத் தரும் ஒரு உன்னதமான விஷயம்தான் தூக்கம். தினமும் 3 வேளை உணவும், குறைந்தபட்சம்
6 மணி நேரத் தூக்கமும் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.