பண மொழிகள்!

பண மொழிகள்!

உங்கள் மனைவியின் சகோதரி கணவரைவிட ஆயிரம் ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதே வசதி என பொருள் கொள்ளப்படுகிறது.

- மென்கென்

பணத்தின் மதிப்பை அனுபவத்தில் உணர்ந்திருக்காவிட்டால், உங்களுக்குப் பணம் என்பது வெற்றுக் காகிதமே!

- பர்னம்

உலகத்தில் எல்லா நாடுகளும் கடன் வாங்கி இருக்கின்றன என்றால், எல்லா பணமும் எங்கே போயிருக்கிறது?

- ஸ்டீவன் ரைட்

உங்களுக்கு பணம் தேவையில்லை என நிரூபித்தால் மட்டுமே உங்களுக்குக் கடன் தரும் ஒரு நிறுவனத்தின் பெயர்தான், வங்கி!

- பாப் ஹோப்

பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது. ஆனால், துயரத்தை சுகமாக எதிர்கொள்ள முடியும்.

- ஸ்பைக் மில்லிகன்

ஒருவனைப் புரிந்துகொள்ள, அவன் பணத்தை எப்படி செலவழிக்கிறான் எனப் பாருங்கள்!

- மாஸன் கூலே

பணத்தை அதன் இயல்பான மதிப்பைவிட குறைத்தும் பார்க்காதீர்கள்; உயர்த்தியும் மதிப்பிடாதீர்கள். பணம் ஒரு நல்ல வேலைக்காரன்; ஆனால் மோசமான எஜமானன்.

- அலெக்ஸாண்டர் டூமாஸ்

ஒரு வேலையை நேசித்துச் செய்யாமல், வெறுமனே அதில் கிடைக்கும் பணத்துக்காக மட்டும் செய்பவன், பணத்தையும் சம்பாதிக்க மாட்டான்; வாழ்க்கையிலும் ஜெயிக்க மாட்டான்.

- சார்லஸ் ஷ்வாப்

பணத்தைத் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்யாத தொழில், மிக மலினமானது.

- ஹென்றி ஃபோர்டு

மூளையற்றவர்கள் கையில் சிக்கும் பணம், எப்போதுமே ஆபத்தானது.

- நெப்போலியன் ஹில்

பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொள்வது ஆபத்தானது. உங்களுக்குப் பிடித்த விஷயத்தைச் செய்யுங்கள். அதை நேர்த்தியாகவும் உன்னதமாகவும் செய்தால், பணம் தானாக வரும்.

- எவ்லீன் கார்ஸன்   

பணம் உங்களுக்கு நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்காது; ஆனால் உயர்தரமான எதிரிகள் கிடைப்பார்கள்.

- ஸ்பைக் மில்லிகன்

ஒரு மனிதன் உண்மையில் எப்படிப்பட்டவன் எனத் தெரிந்துகொள்ள, பணத்தை இழக்கும்போது அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைக் கவனியுங்கள்.

- சைமோன் வெய்ல்

பணம் பெருமளவு சம்பாதிப்பதும், அந்தப் பணத்தால் வாங்க முடிகிற பொருட்களை சேர்ப்பதும் நல்லதுதான். அதைவிட நல்லது... இந்த இடைவெளியில், பணம் கொடுத்து வாங்கமுடியாத பொருட்கள் எதையாவது இழந்து விட்டோமா என பரிசோதித்துக் கொள்வது.

- ஜார்ஜ் லாரிமர்

எல்லோரும் விற்கும்போது அதை வாங்குங்கள். எல்லோரும் வாங்க முண்டியடிக்கும்போது அதை விற்றுவிடுங்கள். பங்குச்சந்தையில் வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்கும் மந்திரம் இதுதான்!

- பால் கெட்டி

ஒரு புத்திசாலி பணத்தை தன் மூளையில் சுமக்க வேண்டும்; இதயத்தில் அல்ல!

- ஜோனாதன் ஸ்விஃப்ட்

மனிதன்தான் கள்ள நோட்டு தயாரிக்கிறான். பல சந்தர்ப்பங்களில் பணம்தான் மனிதனைக் கள்ளன் ஆக்குகிறது.

- சிட்னி ஹாரிஸ்

சில சந்தர்ப்பங்களில், நீங்கள் செய்யாத ஒரு முதலீடுதான் உங்கள் கண்ணோட்டத்தில் சிறந்த முதலீடாகத் தெரியும்.

- டொனால்டு ட்ரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu