எப்படிப் போடுவது குடும்ப பட்ஜெட்?

எப்படிப் போடுவது குடும்ப பட்ஜெட்?

சி.முருகேஷ் பாபு

எப்படிப் போடுவது குடும்ப பட்ஜெட்?

‘கையிலே வாங்கினேன்... பையிலே போடலை... காசு போன இடம் தெரியலை’ என்கிற ரேஞ்சில்தான் வருமானமும் செலவுகளும் இருக்கின்றன என்று சலித்துக் கொள்கிறீர்களா? வரவையும் செலவையும் எழுதிப் பார்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். எழுதிப் பார்த்துச் செலவழிக்க நாம் என்ன நிதியமைச்சர் ப.சிதம்பரமா என்று கேட்கிறீர்களா... அவர் நாட்டுக்கு நிதியமைச்சராய் இருந்தவர் என்றால் நீங்கள் வீட்டுக்கு நிதியமைச்சர்தான்! அதனால் நீங்கள் பட்ஜெட் போடுவதில் தவறில்லை!

நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது அவருக்கு ஆலோசனை சொல்லப் பெரிய கூட்டமே இருக்கும். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். உங்கள் வரவு என்ன, செலவுகள் என்னென்ன என்றெல்லாம் நிர்ணயித்துச் செயல்படுத்த எங்கள் ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த இடத்தில் சின்னதாக ஒரு டிஸ்கிளைமர்... அடுத்து சொல்லப் போகும் வரவு – 

செலவுத் திட்ட அறிக்கை பொதுவாக, பரவலாக நம் மக்கள் மத்தியில் இருக்கும் வரவு – செலவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாதிரிதான். உங்களுக்கென்று பிரத்யேகமான வருமான வாய்ப்புகளும் இருக்கலாம்; செலவுகளும் இருக்கலாம். எனவே, உங்களுக்கென்று தனிப்பட்ட திட்ட அறிக்கை வேண்டுமென்றால், நீங்கள் நல்ல நிதி ஆலோசகரை நாடுங்கள். பொதுவான தகவல்கள் அடிப்படையில் உங்கள் பிரத்யேக வரவு செலவுகளை இதில் சேர்த்துக்கொள்ள முடியும் என்றால், இந்தத் திட்ட அறிக்கையைக் கடைப்பிடியுங்கள்!

முதலில் என்னவெல்லாம் பொதுவான வரவு – செலவு என்று பார்க்கலாம்.

வரவுக் கணக்கு என்பது நம்முடைய வருமான வாய்ப்புகள்... நீங்கள் மாத சம்பளக்காரராக இருக்கலாம். அப்படியானால் உங்களுடைய பிரதான வருமான வாய்ப்பு, சம்பளம். இது தவிர, நீங்கள் அலுவலகத்தில் செய்யும் ஓவர் டைம், உங்களுக்கென்று வீடோ, கடையோ இருந்தால் அதில் இருந்து கிடைக்கும் வாடகை, விவசாய நிலம் இருந்தால் அதில் இருந்து கிடைக்கும் குத்தகை அல்லது தானியங்களை விற்பதால் கிடைக்கும் பணம், சேமிப்பாகப் போட்டு வைக்கும் பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டி, பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் இருந்து கிடைக்கும் டிவிடெண்ட் போன்றவற்றையும் வருமானம் என்றே சொல்லலாம்.

உங்கள் குடும்பத்தில் வேறொருவரும் வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவருடைய சம்பளமும் குடும்ப வருமானத்தில் சேரும். இதையெல்லாம் ஒன்று திரட்டி வரவுக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக செலவுக் கணக்கு... முதலில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். அதற்கான ப்ரீமியம் தொகையைக் கணக்கிட வேண்டும். அதேபோல மொத்தக் குடும்பத்துக்கான மெடிக்கல் இன்சூரன்ஸ் ப்ரீமியமும்! இந்த ப்ரிமீயம் தொகைகள் என்பது செலவுதான் என்றாலும், பாதுகாப்பு தொடர்பானது. அதனால் இவற்றைச் செலவாகப் பார்க்கக்கூடாது.

அடுத்ததாக உங்கள் குடும்ப உறுப்பினர்களின் போக்குவரத்துச் செலவு, குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் போன்றவை இதில் அடங்கும்.

மூன்றாவதாக எதிர்பாராத செலவுகள்... மருத்துவச் செலவாக இருக்கலாம். நம்மிடம் உள்ள வாகனங்கள் திடீரென்று வைக்கும் செலவுகளாக இருக்கலாம். உறவினர் வீடுகளில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் செலவுகளாக இருக்கலாம். இதெல்லாம் நாம் திட்டமிடாமல் ஏற்படும் செலவுகள். இதற்கும் நம்முடைய பட்ஜெட்டில் இடம் இருக்க வேண்டும்.

கடைசியாக நாம் இடம் கொடுக்க வேண்டியது கேளிக்கைச் செலவுகளுக்காக... பட்ஜெட்டில் இந்தச் செலவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். கேளிக்கை இல்லையென்றால் நம்முடைய இயல்பு வாழ்க்கையே பாதிப்புக்கு உள்ளாகிவிடும். கேபிள் அல்லது டிஷ் கட்டணம், சினிமா, ஹோட்டல் செலவுகள் மற்றும் சுற்றுலா செலவுகள் போன்றவை இதில் அடங்கும்.

இந்தக் கணக்குகளை எல்லாம் போட்டுப் பார்க்கும்போது நம் பட்ஜெட்டில் மீதம் இருக்க வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். அதை முதலீடு செய்ய வேண்டும். அதுதான் நம்முடைய இலக்கு. ஆரம்பம் இப்படி இருந்தாலும், பட்ஜெட் கொஞ்சம் பழக்கப்பட்டதும் சேமிப்பு முதலிடத்துக்குச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் திட்டமிடும் இலக்கை அடையமுடியும்.

இப்போது மாதம் 30,000 ரூபாய் வருமானம் என்ற கணக்கில் ஒரு மாதிரி பட்ஜெட்டைப் பார்க்கலாம்.

வரவு

சம்பளம்25,000 ரூபாய்
ஓவர் டைம்3000 ரூபாய்
அப்பாவின் பென்ஷன்2000 ரூபாய்

செலவு

நான்கு பேர் கொண்ட உறுப்பினர்களுக்கு6000 ரூபாய்
வாடகை, மின் கட்டணம் வீட்டுக்கான கட்டணங்கள்16000 ரூபாய்
தொலைபேசி கட்டணம், பெட்ரோல்2500 ரூபாய்
எதிர்பாராத செலவுகளுக்காக1000 ரூபாய்
கேளிக்கை செலவுகளுக்கு1500 ரூபாய்
இன்சூரன்ஸ்1000 ரூபாய்
மீதம்2000 ரூபாய்

உங்கள் பட்ஜெட் இப்படி இருந்தால் மீதமுள்ள இரண்டாயிரம் ரூபாயை நல்ல திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் வருடந்தோறும் கிடைக்கும் போனஸ் போன்ற உபரித் தொகையினைப் பிள்ளைகளின் கல்வி, பண்டிகை நாட்கள் போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், கேளிக்கை செலவுகளைக் குறைக்கலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படாத நிலையில் அதைப் பயன்படுத்தலாம்.

ஆக, திட்டமிட்டால் தெளிவாகப் பயன்படும் உங்கள் வருமானம்... வாழ்த்துகள்!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu