பண உறுதிமொழிகள் பத்து!

பண உறுதிமொழிகள் பத்து!

1. அதிகம் சேமிப்பேன்

சேமிப்பின் அவசியம் நம்மில் பலருக்கும் தெரியும். ஆனாலும், ‘வரவுக்கும் செலவுக்கும் இழுபறியாக இருக்கும்போது எங்கே சேமிப்பது’ என்ற நினைப்பே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதனாலேயே நமது பட்ஜெட்டில் கடைசி இடம்தான் சேமிப்புக்கு ஒதுக்கப்படுகிறது. ‘சேமிப்பு என்பது மாசக்கடைசியில் மிச்சம் இருக்கும் பணத்தை எதிர்காலத் தேவைக்காக எடுத்து வைப்பது’ என்ற நினைப்பு உங்களுக்கு இருந்தால், இந்த ஆண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி நினைத்தால் எந்த மாதத்திலும் சேமிக்க உங்களிடம் ஒரு ரூபாய்கூட மிச்சம் இருக்காது. சம்பளம் கைக்கு வந்ததும், அல்லது பிசினஸ், வியாபாரத்தில் சொந்த செலவுகளுக்காக என பணம் எடுத்ததும், செய்ய வேண்டிய முதல் செலவே சேமிப்புதான்! போனஸ், ஊக்கத்தொகை என வழக்கமில்லாத வருமானங்கள் வரும்போது, அதில் பெரும்பகுதியை சேமிப்புக் கணக்கில் சேர்த்துவிடுங்கள்.

2. கடன்களை அடைப்பேன்

இன்றைய வாழ்க்கைமுறையில் கடன் இல்லாதவர்கள் இருக்க முடியாது. வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்றவை அவசியமானவை. குறைந்த வட்டிக்கு வழங்கப்படும் கடன்கள் என்பதால், இவை ஆபத்து இல்லாதவை. ஆனால் சில கடன்கள் அச்சுறுத்தக் கூடியவை. கிரெடிட் கார்டுக்கு முறையாக செலுத்தாமல் சேர்ந்துகொண்டே போகும் கடன், தங்க நகை அல்லது வீடு போன்ற சொத்துக்களை அடமானம் வைத்து வாங்குகிற கடன், அதிக வட்டிக்கு வாங்கப்படும் பர்சனல் லோன் போன்றவை இந்தப் பட்டியலில் வரும். சிக்கனமாக இருந்து இந்தக் கடன்களை அடைக்கா விட்டால், அவமானத்திலும் சிக்கலிலும் கொண்டு போய் நிறுத்திவிடும். இப்படிப்பட்ட கடன்களை முதலில் அடைப்பது என்ற உறுதிமொழியை இந்த ஆண்டு எடுங்கள்!

3. அவசரத்துக்கு எடுத்து வைப்பேன்

எதிர்பாராத திருப்பங்களும் நிகழ்வுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. திடீரென ஒரு அவசரத் தேவை ஏற்படும்போது, யார் வீட்டு வாசலிலும் போய் கையைப் பிசைந்து கொண்டு நிற்க முடியாது. இரவு நேரம் எனில் இன்னும் அவஸ்தை. இதைத் தவிர்க்க ‘அவசரத் தேவைக்கான சேமிப்பு’ என தனியாக பணம் எடுத்து வைப்பதுதான் ஒரே வழி. இப்படி எவ்வளவு எடுத்து வைக்க வேண்டும்? உங்கள் குடும்பத்தின் இயல்பான மாதச் செலவு எவ்வளவு எனக் கணக்கிடுங்கள். அதுபோல ஆறு மடங்கு தொகை இப்படி அவசர சேமிப்பாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இதுவரை இப்படிச் செய்யாமல் இருந்தால், இந்த ஆண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டு சேமியுங்கள். இதை சும்மா வீட்டில் பீரோவில் வைத்திருக்க வேண்டியதில்லை. வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்தால், சிறிதளவு வட்டி ஈட்டியபடி இருக்கும்.

4. பட்ஜெட் போடுவேன்

நாட்டுக்கு மட்டுமில்லை... வீட்டுக்கும் தேவை பட்ஜெட். தினசரி செலவுகளையும் அவசிய செலவுகளையும் வருமானத்தையும் எழுதிக் கணக்கிட்டுப் பார்த்தால்தான், உங்கள் குடும்பத்தின் நிதி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பது புரியும். வாடகை அல்லது வீட்டு லோன், மின் கட்டணம், போன் கட்டணம், எரிபொருள் செலவு, மளிகை, பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றைத் தாண்டி வேறு எந்தெந்த காரணங்களுக்காக பணம் செலவாகிறது என்பதை பட்ஜெட் மூலமே அறிய முடியும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தையும் பட்ஜெட்டே உணர்த்தும். இன்சூரன்ஸ், முதலீடு போன்றவற்றுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணங்களை எப்போது செலுத்த வேண்டும் என்பதையும் பட்ஜெட்டில் தனியாக எழுதி வைக்கலாம்.

5. புத்திசாலித்தனமாக வாங்குவேன்

விளம்பரங்களும் கவர்ச்சித் தள்ளுபடி அறிவிப்புகளும், முற்றும் துறந்த முனிவர்களைக் கூட சபலப்படுத்திவிடும். அப்படி இருக்கும்போது, எளிய குடும்பத் தலைவர்கள் எந்த மூலைக்கு? விலை குறைவாகக் கிடைக்கிறதே என விழாக்காலத் தள்ளுபடிகளில் பலரும் தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். தேவையில்லாத பொருட்களை இப்படி வாங்க ஆரம்பித்தால், தேவையான பொருட்கள் பலவும் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அவசியத் தேவை எனத் தோன்றுவதை மட்டுமே வாங்குங்கள். அதையும் புத்திசாலித்தனமாக வாங்குங்கள். உதாரணமாக ஏ.சி. வாங்குவது என முடிவு செய்தால், அதை குளிர்காலத்தில் தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதிலும் மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் மாடல் ஏ.சி, சற்றே விலை அதிகமாக இருக்கும்; ஆனால் காலம் முழுக்க உங்கள் மின் கட்டணம் குறையும். இப்படித் திட்டமிட்டு வாங்கினால் துன்பமில்லை.

6. ஓய்வுக் காலத்துக்காக சேமிப்பேன்

குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்பது என்பது ஒரு ரகம்; அதுதவிர இன்னொரு சேமிப்பும் முக்கியம். அது, உங்களின் ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு. அதை இளம் வயதிலிருந்தே திட்டமிட வேண்டும். மத்திய அரசே இதற்காக ஒரு பென்ஷன் திட்டத்தை நடத்துகிறது. இதுபோக வேறு பல பென்ஷன் திட்டங்களும் இருக்கின்றன. இளம் வயதில் வருமானம் அதிகமாக இருக்கும்; மருத்துவச் செலவு குறைவாக இருக்கும். ஓய்வுக்காலத்தில் வருமானம் குறைவாக இருக்கும்; செலவு பாடாய் படுத்தும். மருத்துவக் கட்டணங்களும் மருந்துகளின் விலைகளும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் இவை எங்கு போய் நிற்கும் என கணிப்பதே கடினம். முதுமையில் மற்றவர் கைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பது போன்ற துயரம் வேறு ஏதுமில்லை. ஆகவே, முதுமைக் காலத்துக்கும் இப்போதே திட்டமிடுங்கள்.

7. கவர்ச்சியில் மயங்க மாட்டேன்

‘மூன்றே ஆண்டுகளில் உங்கள் பணம் இரண்டு மடங்காக பெருகும்’ என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டி உங்களை முதலீடு செய்யச் சொல்வார்கள். அதிக வட்டி தருவதாக கவர்ச்சி விளம்பரம் செய்வார்கள். இதற்கெல்லாம் மயங்கி தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்களின் துயரக்கதைகள் எத்தனை படித்திருப்பீர்கள்! அதற்கு மயங்காதீர்கள். முதலுக்கே மோசமாகிவிடும். அங்கீகாரம் பெறாத எந்த நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யாதீர்கள். பாதுகாப்பான முதலீடுகள் மட்டுமே உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் தரும். 

8. இன்சூரன்ஸ் செய்துகொள்வேன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பீர்கள். இன்றைய பண மதிப்பைப் பார்க்கும்போது, அது ஒன்றுமே இல்லை. அப்போது ஐம்பதாயிரம் ரூபாயே பெரிய தொகையாக இருந்திருக்கும். இப்போது நிலைமை வேறு. இன்றைய தேதிக்குத் திட்டமிடுங்கள். வீடு மற்றும் வீட்டிலிருக்கும் பொருட்களுக்கு தனியாக ஒரு இன்சூரன்ஸ், வாகனத்துக்கு இன்சூரன்ஸ், குடும்பத்தில் அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் ஆகியவை கட்டாயம் எடுக்க வேண்டிய பாலிசிகள். மருத்துவக் கட்டணங்கள் அடிக்கடி உயர்வதால், மருத்துவ இன்சூரன்ஸ் தொகையையும் உயர்த்துங்கள். இதற்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.

9. நீண்டகாலத் திட்டம் போடுவேன்

‘இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து நம் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்’, ‘இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்’ எனத் தெளிவாகத் திட்டமிடுபவர்களே அதற்கான வழிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். உதாரணமாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாநகரங்களில் ஆள் நடமாட்டமில்லாத புறநகர்ப் பகுதிகளாக இருந்த ஏரியாக்கள் பலவும் இப்போது நகரத்தின் மையமாகி விட்டன. அப்போது ஆயிரங்களில் முதலீடு செய்து வாங்கிய மனைகள் எல்லாம் இப்போது லட்சங்களில் விலை போகின்றன. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து பிள்ளையைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றால், இப்போது வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் புறநகர்ப் பகுதி ஒன்றில் மனை வாங்கி வைப்பது, பாதுகாப்பான, லாபம் தரும் முதலீடு. அந்த முதலீடு பல மடங்கு வளர்ந்து, கல்லூரி செலவுகளை மொத்தமாகப் பார்த்துக் கொள்ளும். இப்படியான நீண்டகாலத் திட்டமிடல் செய்யுங்கள்.

10. கசிவுகளை அடைப்பேன்

பெரிய செலவுகள் கண்ணை உறுத்தும் அளவுக்கு சின்ன விஷயங்கள் நம் பார்வையில் படாது. ஆனால் இப்படி சிறிது சிறிதாகக் கசியும் நீர், ஒரு பெரிய அணையையே வற்றச் செய்துவிடும் என்பது இயற்கை நியதி. வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையிலும் கவனமாகக் கண் பதியுங்கள். செலுத்தும் ஒவ்வொரு கட்டணத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், எங்கு எது குறைந்த விலையில் கிடைக்கும் என பார்த்து வாங்கினால் செலவு குறையும். ஒவ்வொரு ரூபாயும் சேர்ந்துதான் நூறுகளாகவும், ஆயிரங்களாகவும், லட்சங்களாகவும் ஆகிறது. மின் கட்டணம், டெலிபோன் கட்டணம், பெட்ரோல் செலவு போன்றவற்றிலும் சிக்கனம் சாத்தியமே. ஒரு உறுதிமொழி எடுத்துக் கொண்டு இதைச் செய்தால், மிச்சப்படுத்தும் ஒவ்வொரு ரூபாயும் சேமிப்புதானே!             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu