எந்த வயதில் என்ன முதலீடு!

எந்த வயதில் என்ன முதலீடு!

நிதி நிர்வாகம்

பண விஷயத்தைப் பொறுத்தவரை, கடந்து போன நாட்களில் செய்யாமல் விட்ட முதலீடுகள் மற்றும் சேமிப்புகளைப் பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருப்பது பலரின் இயல்பு. ‘‘கிரவுண்ட் ஒரு லட்ச ரூபாய்க்கு கூவிக் கூவி வித்தான். காடு மாதிரி இருக்கேன்னு தயங்கினேன். ஒரு ஸ்கூல் கட்டினதும் பத்து வருஷத்துல எல்லாம் மாறிப் போச்சு. இப்போ விசாரிச்சா அம்பது லட்சம் சொல்றான்’’ என ஆதங்கப்படும் குடும்பத் தலைவர்கள் நிறைய.

இப்படி புலம்புவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இருபதில் ஓய்வூதியம்:

‘பெரும்பாலான இந்தியர்கள் 40 வயதுக்குப் பிறகுதான், தங்கள் ஓய்வுக்காலம் குறித்து யோசிக்கவே ஆரம்பிக்கிறார்கள்’ என்கிறது ஆய்வு ஒன்று. இருபது வயதிலேயே அறுபதை நினைப்பது நல்லது. இதற்கான சிறந்த திட்டமாக இருக்கிறது, பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் எனப்படும் பி.பி.எஃப். இதில் நீங்கள் கட்டும் பணத்துக்கு வருமான வரிச் சலுகை உண்டு. வரும் வட்டிக்கும், முதிர்வுத் தொகைக்கும்கூட வரிச்சலுகை உண்டு. ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரைகூட சேமிக்கலாம்.

தபால் நிலையங்களிலும், பொதுத்துறை வங்கிகளிலும் பி.பி.எஃப். கணக்கு ஆரம்பிக்கலாம். 15 ஆண்டுகள் பணம் கட்ட வேண்டும். அதன்பிறகும் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். தொடர்ந்து அந்தக் கணக்கில் நீங்கள் பணம் மாதாமாதம் சேமித்தாலும் சரி... சேமிக்காவிட்டாலும் சரி... கணக்கை நீட்டிக்கலாம். ஐந்து ஐந்து ஆண்டுகளாக இப்படி நீட்டிக்க அனுமதி உண்டு. உங்கள் சேமிப்பு தொடர்ந்து வட்டியை சம்பாதித்துக் கொண்டே இருக்கும்.

கடன் பத்திரங்கள் ஈட்டும் தொகைக்கு ஏற்றபடி வட்டி கணக்கிடப்படுவதால், கணிசமான தொகையாக இது உங்களுக்குக் கிடைக்கும். இப்படி சேமிக்கும் பணம், ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ்க்கையைக் கழிக்க உதவும்.      

இருபத்தைந்தில் சேமிப்பு:

25 வயதுக்குள் பெரும்பாலான இந்தியர்கள் ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், சம்பாதிப்பதை செலவழிப்பதில் காட்டும் வேகத்தை பலரும் சேமிப்பில் காட்டுவதில்லை. இது ஒரு சிம்பிளான கணக்கு... நீங்கள் 25 வயதிலிருந்து சேமிக்கத் தொடங்குகிறீர்கள். மாதம் 5 ஆயிரம் ரூபாய் என தனியாக சேமிக்க ஆரம்பித்து இதை 30 ஆண்டுகள் செய்கிறீர்கள். வெறும் 10 சதவீத அளவுக்கு வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற சாதாரண முதலீடுதான் என வைத்துக் கொள்ளுங்கள். 30 ஆண்டுகள் கழித்து 55 வயதில் பார்த்தால், அது எந்த ஒரு கோடியே 8 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும்.

நீங்கள் சேமித்த 18 லட்ச ரூபாய் இப்படி ஆறு மடங்காக வளர்ந்து நிற்கிறது. இளம் வயதிலேயே சேமிக்க ஆரம்பித்ததும், கூட்டு வட்டியின் மகிமையுமே இதற்குக் காரணம். இதில், முதல் 5 ஆண்டுகளில் நீங்கள் சேமித்த மூன்று லட்ச ரூபாய் மட்டுமே 48 லட்ச ரூபாயாக 30 ஆண்டுகளில் பெருகி இருக்கும்.

ஒருவேளை நீங்கள் 30 வயதுக்குப் பிறகு சேமிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்றால், 55 வயதில் உங்கள் கையில் 60 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும். முதல் மாத சம்பளம் வாங்கிய நிமிடத்திலிருந்தே சேமிக்கத் தொடங்குங்கள்.

முப்பதில் இன்சூரன்ஸ்:

‘இன்சூரன்ஸ் என்பது முதலீடு இல்லை... காப்பீடு’ என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்வது நல்லது. ஒரு குடும்பத் தலைவர் எப்படி குடையாக இருந்து, நிழல் தந்து, தன் குடும்பத்தைக் காக்கிறாரோ, அப்படி அவர் இல்லாத காலங்களிலும் குடையாக இருந்து காப்பதாக காப்பீடு இருக்க வேண்டும். அப்படி காப்பீடு தருபவையாக ‘டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி’கள் இப்போது பிரபலமாகி வருகின்றன. ஒரு குடும்பத் தலைவர் அவசியம், தனது 30 வயதுக்குள்ளாக எடுக்க வேண்டிய பாலிசி இது.

ஒரு குடும்பத் தலைவரின் வருமானத்தில்தான் அந்தக் குடும்பமே சாப்பிடுகிறது. வீட்டு வாடகை, மளிகை செலவு, மருத்துவச் செலவுகளில் ஆரம்பித்து, பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் என எல்லாமே அவர்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்பத் தேவைகளுக்காக வாங்கிய கடன்களையும் அவர்தான் அடைக்க வேண்டியிருக்கிறது. அவர் இல்லாதுபோக நேரும் சூழலில், உதவிக்கு வருகிறது டெர்ம் பாலிசி. உதாரணமாக, 30 வயதில் ஒருவர் ஒரு டெர்ம் பாலிசி எடுத்தால், ஒரு கோடி ரூபாய் தொகைக்கு அவர் ஆண்டுக்கு தோராயமாக 10 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்த வேண்டும். இப்படி அவர் 60 வயது வரை கட்டலாம். டெர்ம் பாலிசியில், பாலிசி முடியும்போது தொகை எதுவும் கைக்கு வராது. வெறும் ரிஸ்க் கவர் மட்டுமே என்பதால், உயிரிழப்பு நேரும்போது முழுத் தொகையும் குடும்பத்துக்குக் கிடைக்கும். 30 வயதில் இப்படி ஒரு பாலிசி எடுக்கும் ஒருவர், 60 வயது வரை கட்டும் தொகை 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய். 60 வயதில் அவருக்கு ஒன்றுமே கிடைக்காது. ஆனால் அந்த 30 ஆண்டுகளும் அவர் குடும்பம், ஒரு கோடி ரூபாய் மீதான நம்பிக்கையைப் பெறுகிறது என்பதுதான் முக்கியம்.

குடும்பத் தலைவருக்கு இப்படி ஒரு டெர்ம் பாலிசி வேண்டும் என்றால், குடும்பத்தில் எல்லோருக்குமாக மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்.

முப்பத்தைந்தில் லட்சியங்கள்:

உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்வதைப் பற்றிக் கவலைப்படுபவரா நீங்கள்? அப்படியே இந்த விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்... அதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் கல்விக் கட்டணங்கள் உயர்கின்றன! இப்போது ஒரு எஞ்சினியரிங் படிப்புக்கான டியூஷன் ஃபீஸ் 7 லட்ச ரூபாய் என்றால், அது இன்னும் ஐந்து ஆண்டுகளில் 12 லட்சமாக ஆகலாம். பத்து ஆண்டுகளில் 22 லட்ச ரூபாய் ஆகக்கூடும்.

கல்விக்கடன் வாங்கி பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம். அதைவிட சிறந்த வழி, சிறு வயதிலிருந்தே அதற்காக சேமிக்கத் தொடங்குவது. உங்கள் குழந்தைக்கு உன்னதமான எதிர்காலத்தைத் தருவதுதான் உங்கள் லட்சியம் எனில், அதற்காக திட்டமிடுவதில் உங்களைவிட சிறந்தவர் யார் இருக்க முடியும்?

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு சொல்லும் உண்மைகள் இவை... தங்கள் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுக்காக 63 சதவீத பெற்றோர்கள், குழந்தை 3 வயதாக இருக்கும்போதிருந்தே சேமிக்கத் தொடங்குகிறார்களாம். 9 சதவீத பெற்றோர்கள், குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே சேமிக்கத் தொடங்குகிறார்களாம். எவ்வளவு சீக்கிரம் நீங்கள் சேமிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் செழித்து வளரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu