மகாபாரதம் சொல்லித் தரும் நிர்வாகக் கலை!

மகாபாரதம் சொல்லித் தரும் நிர்வாகக் கலை!

மகாபாரதம் சொல்லித் தரும் நிர்வாகக் கலை!

அம்புப் படுக்கையில் இருந்தபடி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தர்மருக்கும் பாண்டவர்களுக்கும் பல உபதேசங்களைச் சொன்னார் பிதாமகர் பீஷ்மர். அதில் ‘ராஜ நீதி’ என அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள், வாழ்க்கையில் வெற்றியை அடையத் துடிக்கும் பலருக்கும் நிர்வாகக் கலை மந்திரங்களாக இருக்கும்.

* எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் உதவி கிடைக்காது. வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க்கைக்கு இவ்விரண்டும் தேவை. இவ்விரண்டில் முயற்சியே மேலானது. ஒருவேளை உன் முயற்சி வீணாய் போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது. எப்போதும் விடாமுயற்சி என்பது மிகப் பெரிய நீதியாகும்.

* பொறாமையின்மை, நல்லவர்களை அரவணைத்துச் செல்வது, சூரத்தனம், சுறுசுறுப்பு, உண்மை, மக்களின் நன்மை, நேராகவும் கபடமாகவும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது, செயலில் சோர்வின்மை, கருவூலத்தைப் பெருகச் செய்வது, நண்பர்& பகைவர்& நடுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிவது, வேலைக்காரரைப் பகைவரிடம் சேராதிருக்குமாறு செய்வது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவரை அலட்சியப்படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குவது, நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய குணங்கள் வெற்றிக்கு அவசியம்.

* முயற்சியால் சிறந்தவன் கல்வியில் சிறந்த பண்டிதனை விட மேலானவன்.

* செயல் அனைத்தும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். நற்குணமும் நல்லொழுக்கமும் புலனடக்கமும் தெளிவும் தானமும் உள்ளவனுக்கு எல்லாம் தட்டாமல் கிடைக்கும்.

* எல்லா நேரங்களிலும் பொறுமையாகவும் சாந்தமாகவும் மட்டுமே இருக்கவும் கூடாது; எப்போதும் கடுமையாக நடந்துகொள்ளவும் கூடாது. எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ, அந்தந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும். அதாவது அதிக தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனைப் போல இருக்க வேண்டும்.

* மேலோரிடம் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும், இது பொது விதி. ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக்கத் தயங்கக் கூடாது.

* எப்போதும் கர்ப்பிணியின் தர்மத்தில் இருக்க வேண்டும். அது என்ன கர்ப்பிணி தர்மம்? ஒரு கர்ப்பிணி தன் மனதிற்கும் நாவிற்கும் சுவையான உணவு உண்ணாமல், கருவில் வளரும் தன் குழந்தைக்கு உகந்த உணவுகளையே உண்கிறாள். அதுபோல தனது ஆசைகளை மட்டும் பார்க்காமல், எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் தர்ம வழியில் செல்ல வேண்டும்.

* எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்ள வேண்டும். அதற்காக ரொம்பவும் கீழே இறங்கி வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடாது. அது அவர்களில் சிலரை தவறாக நடக்க வைக்கும். ‘‘நான் சொன்னால் சொன்னபடி அவர் நடப்பார்’’ என ஆணவத்தோடு சொல்லி உங்களை கவிழ்க்கப் பார்ப்பார்கள். 

* எப்போதும் நலம்விரும்பிகளுடன் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்ய வேண்டும். எல்லோரையும் நம்பி விடக் கூடாது. நம்பத் தக்கவர்களை மட்டுமே நம்ப வேண்டும். அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.

* செல்வத்தை விரும்பும் மனிதன், பணிவுடன் இருக்க வேண்டும். இன்சொல் கூற வேண்டும். வாழ்கின்ற காலம் குறைவாக இருந்தாலும், மின்னல் போல ஒளி விட வேண்டும். உமியில் உள்ள தீயைப் போல ஒளியின்றி நெடுங்காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது. நன்றி கெட்டவர்களிடம் கொடுக்கல் வாங்கல் கூடாது. நன்றி கெட்டவர்கள் காரியம் ஆகும் வரை நல்லபடியே இருப்பர். ஆனதும் நம்மை அவமதிப்பர்.

* சோம்பேறிகளும், தைரியமற்றவர்களும், போலிக் கௌரவம் பார்ப்பவர்களும், பிறர் என்ன சொல்வார்களோ எனப் பயப்படுபவர்களும், விட்டு விட்டு முயல்பவர்களும் பொருளை அடைய மாட்டார்கள்.

* ஆமை போல தன் உடலை மறைத்துக் கொள்ள வேண்டும். கழுகைப் போல் தொலைநோக்குடனும், கொக்கைப் போல லட்சியத்தின் மீது குறியுடனும், நாயைப் போல விழிப்புடனும் திகழ வேண்டும்.  சிங்கத்தைப் போல பயமின்றித் தன் வலிமையைக் காட்ட வேண்டும்.

* கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்ப்பதும் அறிவுடையார் செயல் அன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu