கனவுகளைத் துரத்துங்கள் ஒரு கனவு, ஒரு இலக்கு, ஒரு லட்சியம், ஒரு பார்வை, ஒரு வேட்கை... வெற்றியை விரும்பி உழைக்கும் எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. பிளஸ் 2-வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண், ஐ.ஏ.எஸ் தேர்வில் டாப் இடம், வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதிலேயே உயர்ந்த பதவி, செய்யும் தொழிலில் அந்த ஊரிலேயே முதன்மையான அந்தஸ்தைப் பெறுவது... இப்படி கனவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானவை. ஆனால், உழைப்பில் உத்வேகம் காட்டும் பலரும் வழியில் எங்கேயோ இந்த […]
'வைகறை துயிலெழு’ என ஔவையார் சொன்னார். வைகறை என்பது அதிகாலை 2 முதல் 6 மணி வரை. சூரிய உதயத்துக்கு முன்பாக வைகறையின் மையத்தில் - அதாவது காலை நான்கு மணிக்கு எழுவது சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். உடல் ஆரோக்கியம், செல்வம், அறிவு எல்லாம் தரும் இந்த இயற்கை சார்ந்த தூக்க முறையால் நமக்குப் பத்து நன்மைகள் கிடைக்கின்றன...
1. நேர நிர்வாகம் என்பது நேரத்தைத் திட்டமிடுவது இல்லை. உங்களைத் திட்டமிடுவது! எவ்வளவுதான் திட்டமிட்டு உழைப்பவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். அந்த நேரத்தில் நீங்கள் எப்படி செயல்படுவது என்பதையே திட்டமிடுகிறீர்கள். 2. எந்த விஷயத்தில் நமது நேரம் பயனற்ற வகையில் நீண்ட நேரம் செலவழிகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள். நண்பர்களுடன் அரட்டை, செல்போன் பேச்சு, டீக்கடை மீட்டிங், டி.வியில் கிரிக்கெட் மேட்ச்… என எல்லாவற்றுக்கும் வாழ்க்கையில் பங்கு இருக்க வேண்டும். பொழுதுபோக்கு […]
மேடையில் மட்டுமில்லை... மனிதர்களோடு பேசுவதற்கும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டில், அலுவலகத்தில், வியாபாரம் செய்யும் இடத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் கூட்டத்தில், தொலைபேசியில், ஏன்... அறிமுகம் இல்லாத புது இடத்திலும் புது மனிதர்களிடமும் பேச்சுதான் நாம் விரும்பும் விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது. நாம் விரும்புவது எதுவானாலும், அதைப் பேச்சின் மூலமே வெளிப்படுத்த முடியும்; அதன் விளைவான செயல்களால் அடைய முடியும். அதற்கு எப்படிப் பேச வேண்டும்? * பேச்சு என்பது வெறுமனே தகவல் பரிமாற்றம் அல்ல. ‘இதை […]
ஒருமுறை நாரதர் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு வாலிப யோகி தியானத்தில் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு புற்றே வளர்ந்திருந்தது. நாரதரின் ‘‘நாராயண...’’ நாமத்தைக் கேட்டதும் அந்த யோகி கண்விழித்துப் பார்த்தார். ‘‘நாரத பகவானே, எங்கு சென்று கொண்டிருக்கிறீர்?’’ என்றார். ‘‘நான் கைலாயம் சென்று கொண்டிருக்கிறேன்’’ என்றார் நாரதர். ‘‘அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் நீண்ட காலமாக சிவபெருமானை தரிசிப்பதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தவம் […]
தவறுகளிலிருந்துதான் புதிய விஷயங்களை மனித இனம் கற்றுக் கொள்கிறது. ஆனால் எல்லா தவறுகளையும் ஒரே மாதிரி பார்க்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ‘‘சில தவறுகளைச் செய்யப் பயப்படத் தேவையில்லை. அவைதான் நம்மை பண்பட்டவர்களாக செதுக்குகின்றன’’ என்கிறார்கள் வாழ்க்கை நலக் கல்வி தரும் நிபுணர்கள். அவை... தப்பானவரிடம் காட்டும் அன்பு: நம் நேசத்தை எல்லாம் கொட்டி உருவாக்கும் ஒரு உறவு தப்பானது என்றால் இதயமே நொறுங்கிப் போய் விடும். ஆறாத் துயரத்தில் கண்ணீர் பெருக்கெடுக்கும். மாதங்கள், வருடங்கள் […]
1. கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திரப் போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம்.எஸ்.சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்காது. வர்கீஸ் குரியன் முடியாது என்று நினைத்திருந்தால், இந்தியா பால்வளத்தில் தன்னிறைவு அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. ‘முடியாது’ என்ற நோய் பல […]
ஒரு கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி, ஒரு படகுப் போட்டி அணியை உருவாக்கினர். அவர்களுக்கு பயிற்சியாளர்கள் என்று யாருமில்லை. டி.வியில் எப்போதாவது காட்டப்படும் படகுப்போட்டிகளை பார்த்ததோடு சரி! இயல்பாகவே அவர்களது தொழிலாக படகு ஓட்டுதல் இருந்தது. கடலிலிருந்து அவர்களது கிராமத்தின் வழியே நிலங்களை ஊடுருவிச் செல்லும் ஒரு உப்பங்கழியில் படகில் சென்று மீன் பிடிப்பது அவர்களது தினசரிக் கடமை. மாலை வரை மீன் பிடித்துவிட்டு, அதன்பிறகு அதே உப்பங்கழியில் வேகமாக படகு ஓட்டிப் பயிற்சி எடுப்பார்கள்.இப்படி […]
மிகச்சிறிய அந்த நகரத்தில் மக்கள் உற்சாகமாக வாழ்ந்து வந்தனர். அங்கு யாருமே ஏழைகள் இல்லை; எல்லோருமே மாட மாளிகைகளில் வாழ்ந்தனர். பரம்பரை சொத்துகளுக்கும் தினசரி வருமானத்துக்கும் எப்போதும் குறைவில்லாத வாழ்க்கை. விதம்விதமான உணவுகளை சாப்பிட்டு, தினம் ஒரு கேளிக்கையில் ஈடுபட்டு சந்தோஷமாக இருந்தனர் எல்லோரும்! மாற்றம் என்பதுதானே மாறாத இயற்கை நியதியாக இருக்கிறது. விடுதிகளில், பூங்காக்களில் அடிக்கடி கூடிப் பேசும்போதுதான் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு கவலை இருப்பது புரிந்தது. ‘மகன் படிப்பதில்லை...’, ‘மகள் சொன்ன பேச்சை மதிப்பதில்லை...’, […]
புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதிய மிகப் பிரபலமான கட்டுரையின் சுருக்கம் இது. ஏதோ மலை ஏறுகிறவர்களுக்கான ஆலோசனைக் கட்டுரை போல இருக்கும். ஆனால் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்குமான அட்வைஸ் பட்டியல் இது. ‘மலை’ என்ற இடத்தில் வேலை, வாழ்க்கை, லட்சியம், ஆசை என எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பொருத்தி படித்துக் கொள்ளலாம்... மலையைத் தேர்ந்தெடுங்கள் ‘அந்த மலை அழகாக இருக்கும்...’, ‘இந்த மலைதான் ஏறுவதற்கு மிகவும் சுலபமானது’ என அடுத்தவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு […]