தன்னம்பிக்கையை செதுக்கும் 6 வழிகள்!
தன்னம்பிக்கையை செதுக்கும் 6 வழிகள்!
வாள் கலை!
ஜப்பானிய சாமுராய் வீரர்களைக் கேட்டால், ‘‘போரும் காதலும் ஒன்றுதான்’’ என்பார்கள். போரில் மனிதர்களை வெல்ல வேண்டியிருக்கிறது; காதலில் மனித மனங்களை வெல்ல வேண்டியிருக்கிறது. போர்முனைக்கு ஒரு வீரன் எடுத்துச் செல்லும் வாளை எப்படிப் பயன்படுத்துவது என்பதே ஒரு மாபெரும் கலை. தன்னிகரற்ற வாள் சண்டை வீரரும், புகழ்பெற்ற ஜென் துறவியுமான தலான், இதுபற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது நிஜத்தில் வாள் சண்டைக்கான கையேடு இல்லை; வாழ்க்கைக் கையேடு! தன்னம்பிக்கையை வளர்க்கும் அந்தக் கையேட்டிலிருந்து சில பகுதிகள் இங்கே...
அமைதியில் மூழ்குங்கள்
வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட எல்லோருக்கும் ஒரு உண்மை தெரியும். எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. எனவே, ‘இப்படி ஒரு பிரச்னை ஆரம்பமாகப் போகிறதே’ என்றோ, ‘இந்த நல்ல காலம் முடிவுக்கு வருகிறதே’ என்றோ வருந்துவதில் அர்த்தம் இல்லை! நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதற்காகப் போராடுங்கள். தன் பாதை எது என தீர்மானித்துவிட்ட நதி, சலசலப்பின்றி ஆழமான அமைதியோடு நகரும். அதேபோன்ற அமைதியோடு செயல்படுங்கள்.
மனதோடு பேசுங்கள்
தனது பலத்தை முழுமையாக அறிந்தவர்களும், சரியான இடத்தில் சரியான வார்த்தைகளைப் பேசத் தெரிந்தவர்களும், தங்கள் உடலையும் மனதையும் முழுமையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களும் மனதின் குரலை தெளிவாகக் கேட்கிறார்கள். இரைச்சலான சூழலில், யாருடைய அழைப்பும் உங்கள் காதுகளில் விழாது... மனதின் அழைப்பு கூட! உலகத்தின் இயல்புகளோடு பொருந்திப் போய், ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தால்தான் மனம் சொல்வது கேட்கும். மனதோடு இப்படிப் பேசுங்கள்.
இன்னொருவராக மாறுங்கள்
ஒவ்வொரு விஷயம் பற்றியும் நாம் கருத்துகள் வைத்திருக்கிறோம். நம் பார்வையில் அதை தரிசிக்கிறோம். நாம் தீர்மானிப்பதுதான் சரி என முடிவு செய்கிறோம்.
இந்த உலகில் மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பார்வைகள் இருக்கும்; தீர்மானங்கள் இருக்கும். நம் லட்சியத்தை அடைவதற்கு மற்றவர்களின் உதவியும் தேவை. எனவே நம் கண்களால் மட்டும் உலகத்தைப் பார்க்காமல், அடுத்தவர்களின் கண்களாலும் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களின் எண்ணங்கள் நமக்குப் புரியும்.
குருவை அடையுங்கள்
யாரும் குறுக்கிடாத ஒரு பாதையில் நாம் பயணிக்கப் போவதில்லை. ஏதோ ஒரு நேரத்தில், எங்கோ ஒரு இடத்தில், நம் பயணத்தில் யாரேனும் குறுக்கிடக்கூடும். அன்பாலோ, அக்கறையாலோ, அல்லது பெருமைக்காகவோ, அவர்கள் நமக்கு ஏதேனும் கற்றுத் தர முன்வரக்கூடும். அதில் நண்பர்கள் யார், நடிப்பவர்கள் யார் என்பதை எப்படி பிரித்துப் பார்ப்பது?
‘மிகச்சிறந்த பாதை’ என ஏதோ ஒன்றை சுட்டிக் காட்டுவது ஒரு உண்மையான குருவின் வேலை இல்லை. நம் பயணம் எதை நோக்கியது என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த இடத்தை அடைவதற்கான பல்வேறு பாதைகளைக் காட்டுவதும், அதில் நம் விருப்பத்துக்குரிய பாதையை நம்மையே தீர்மானித்துக் கொள்ளச் சொல்வதும்தான் குருவின் கடமை. பாதையை நாம் தீர்மானித்த பிறகு, குருவுக்கு வேலை இல்லை. ஏனெனில், ஒவ்வொரு பாதையும், அதில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் வித்தியாசமான சவால்களைத் தருகின்றன. அனுபவித்தே இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். இந்த அடிப்படை புரியாவிட்டால், நாம் எங்குமே போய்ச் சேர முடியாது.
ஆபத்துகளிடமிருந்து விலகுங்கள்
நமது ஒரே ஒரு கனவை நிஜமாக்க, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பணயம் வைத்தாலும் பரவாயில்லை என நினைக்கிறோம். இதுதான் லட்சிய வாழ்க்கை எனவும் நம்புகிறோம். இதைவிட அபத்தம் வேறெதுவும் இல்லை. ஒரு கனவை நிஜமாக்க, நமது ஜீவனை துடிப்போடு வைத்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி உழைக்க வேண்டும். நம்மை அச்சுறுத்தும் ஆபத்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பது பற்றியும் வெகுநேரம் திட்டமிடுகிறோம் என்றால், நாம் தவறான படிகளில் அடியெடுத்து வைக்கும் ஆபத்து நிறைய இருக்கிறது. எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என நாம் எப்போதும் நினைத்தால், எதையுமே கட்டுப்படுத்தும் நிலையை நாம் இழந்துவிட்டோம் என அர்த்தம். ஏனெனில், ஆபத்துகள் எந்த எச்சரிக்கையும் செய்துவிட்டு நம்மைத் தாக்குவதில்லை. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதைத் திட்டமிடுவதற்கு நமக்கு நேரம் இருக்காது. எல்லா விஷயங்களுக்கும் முன்யோசனையோடு திட்டமிடுவதற்கு பழகாதீர்கள். திடீரென பிரச்னை வரும்போது திக்குமுக்காடிப் போவீர்கள். பிரச்னைகளை அவ்வப்போது எதிர்கொள்ளப் பழகுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் அமைதி சாத்தியமாகும்!
கற்ற கல்வியும் உங்கள் அனுபவங்களும் உங்களை ஒரு மெஷின் போல மாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் பேசும் வார்த்தைகளை, உங்கள் அனுபவம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். உங்கள் மனம் சொல்லும் ஆலோசனை தவறாகவே இருந்தாலும், அந்தக் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்!
Share
Related Posts