தினம் ஒரு கதை - 39
தினம் ஒரு கதை - 39

வெளிநாட்டில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் அழகான தேவாலயம் இருந்தது.
அதன் பொறுப்பைக் கவனிக்க கறுப்பர் இனத்தவர் ஒருவர் வந்தார்.
இனப் பாகுபாடு காட்டும் குறுகிய மனம் படைத்த சிலர், அவரை நிறம் காரணமாக வெளியே போகச் சொன்னார்கள்.
அவரோ அதைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையை செம்மையாகச் செய்து கொண்டிருந்தார்.
இவரை எப்படியாவது தேவாலயப் பொறுப்பிலிருந்து துரத்த வேண்டும் என்று நினைத்த அடிப்படைவாதிகள், ஆயுதங்களோடு அவரைத் தாக்க வந்தார்கள்.
அவர் அதற்கும் கலங்காமல் தாக்க வந்தவர்களின் கண்களைக் கூர்ந்து பார்த்து பேசலானார்.
‘‘எனக்குக் கல்வியறிவு இல்லை என்று நீங்கள் நினைத்தால், இப்போதே கற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.
நான் சுத்தமாக இல்லை என்று நீங்கள் நினைத்தால், இப்போதே சுத்தம் செய்து கொண்டு வருகிறேன்.
என்னை பண்பாடற்றவன் என்று நீங்கள் நினைத்தால், உடனே பண்பாட்டைப் பழகிக் கொள்கிறேன்.
ஆனால் என் தோலின் நிறத்தை வைத்து வெறுத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என்னைப் படைத்த கடவுளிடம் போய் கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு தன் பணியைப் பார்க்கப் போய்விட்டார்.
அவரைத் தாக்க வந்தவர்கள், ‘‘பிறப்பினால் அனைவரும் ஒன்று. இனி பாகுபாடு நினைக்க மாட்டோம்’’ என்று சொல்லிவிட்டு, திருந்தி திரும்பிச் சென்றார்கள்.
Share
Leave a Reply to Ravi Mohan Cancel reply
One comment on “தினம் ஒரு கதை - 39”

அனைத்து கதைகளும் அருமை!