தினம் ஒரு கதை - 98

தினம் ஒரு கதை - 98

ஒரு தீவின் கரையில் காலை வேளையில் ஓர் அழகான பெண் கிளிஞ்சல்கள் சேகரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே ஓர் இளைஞன் மயங்கிக் கிடப்பதை பார்த்தாள்.

அவனைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து, குடிக்க நீரும் உண்ண உணவும் கொடுத்தாள்.

அங்கேயே ஒரு குடிசை கட்டி அவனைத் தங்க வைத்து, தினமும் அவள் வீட்டிலிருந்து உணவு கொடுத்து உபசரித்தாள். நாளடைவில் இருவரும் காதலித்தார்கள். அவளுடைய பெற்றோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெண்கள் திருமணம் செய்துகொண்டு அந்த தீவைப் விட்டு போவது அவர்கள் வழக்கமில்லை.

ஆனாலும் மகளின் ஆசையைப் புரிந்து கொண்டு திருமணம் செய்து வைத்தனர். அவளும் அந்த இளைஞனோடு கப்பலில் ஏறி அவன் தேசத்துக்கு வாழச்சென்றாள். அங்கே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

வருடங்கள் உருண்டோட, அவன் நடவடிக்கை மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உணர்வுகளைப் புறக்கணிக்கத் தொடங்கினான். அவளை அடக்கி ஆள நினைத்தான். அவளுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற ஆர்வம் காட்டாமல் இருந்தான். மனைவி என்று நேசிக்காமல், தன் இரண்டு பெண் குழந்தைகளின் காவலாளி மற்றும் செவிலியர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தான்.

அவளுக்கு அவன் உதாசீனம் வலித்தது. பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தன் உணர்வுகளைச் சொன்னாள். ‘‘உனக்கென்னம்மா? பெரிய வீடு, நல்ல உடை, நல்ல உணவு எல்லாம் இருக்கிறது. அவர் வாங்கிக் கொடுக்கிறார். இந்த வாழ்க்கை கூட கிடைக்காத பலர் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை, பொறுத்துக் கொள்’’ என்றார் அவர்.

அவள் தன் பெற்றோரிடம் சொல்லிப் பார்த்தாள். அவர்களும் அதையே சொன்னார்கள். கணவனிடம் சொன்னாள். ‘‘உனக்கு என்ன குறை வைத்திருக்கிறேன். உனக்கு எல்லாமே செய்திருக்கிறேனே’’ என்றான். அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை. சோர்ந்து விட்டாள்.

ஒருநாள் கணவன் தன் நண்பர்களை குடும்பத்துடன் விருந்துக்கு அழைத்திருந்தான். இவளும் காலையில் இருந்து விருந்து தயார் செய்தாள். காலை உணவாக அனைவருக்கும் இடியாப்பமும் மீன் கறியும் வைத்தாள். கணவன் அவள் காதுக்குள் கிசுகிசுத்தான், ‘‘தேங்காய்ப்பால் எடுக்கவில்லையா?’’ அவள் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

அடுத்து அவித்த பட்டாணியைப் பரிமாறினாள். ‘‘தேங்காய், மாங்காய் எல்லாம் போட்டு தாளிக்கவில்லையா? அது சுவையாக இருக்குமே’’ என்று கணவன் மெல்லக் கேட்க, ‘இல்லை’ என்றாள்.

மதிய உணவுக்கு ரசம் வைக்கவில்லை. உணவு உண்டதும் வெற்றிலை பாக்கு கொடுக்கவில்லை. பழங்களை வெட்டி தேன் போட்டுக் கொடுப்பார்கள். அதுவும் கொடுக்கவில்லை.

நண்பர்கள் அதைப் பொருட்படுத்தாமல் ‘நல்ல விருந்து’ என்று பாராட்டிவிட்டுப் போனார்கள். அவர்கள் போனதும் கணவன் வெடித்தான். ‘‘என்ன விருந்து செய்திருக்கிறாய்? தேங்காய்ப்பால் எடுக்கவில்லை, வெறும் பட்டாணியை அவித்துக் கொடுக்கிறாய், ரசம் வைக்கவில்லை, வெற்றிலை பாக்கு கொடுக்கவில்லை. உனக்கு விருந்தினர்களை கவனிக்க ஆர்வமே இல்லை’’ என்றான்.

‘‘இல்லையே! உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டுத்தானே சென்றார்கள். தேங்காய்ப்பால் இல்லை என்று இடியாப்பம் குறைவாக சாப்பிட்டார்களா? அல்லது ரசம் இல்லை என்று குறைவாக சாப்பிட்டார்களா? கடைசியாக பாராட்டிவிட்டுத்தானே போனார்கள்!’’

‘‘உனக்குப் புரியவில்லை. அடிப்படை உணவிடுவது வேறு. நுணுக்கமாக விருந்து செய்வது வேறு.’’

‘‘விருந்தில் நுண்ணிய உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் நீங்கள், ஏன் வாழ்க்கையில் என் நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் சோறு, வீடு, உடை கொடுப்பதே போதும் என்று நினைத்துக் கொள்கிறீர்கள்?’’

இப்போதுதான் கணவனுக்கு தன் தவறு புரிந்தது. ‘‘உனக்கு என்ன குறை, சொல்!’’

‘‘கண்டுபிடியுங்கள். என் தீவில் இருந்தபோது காதலுக்கு என் சம்மதம் வாங்க எவ்வளவு முயற்சி செய்தீர்கள். அது போல எனக்கு என்ன குறை, எனக்கு என்ன வெறுமை உணர்வு என்று கண்டுபிடியுங்கள். இவள் குடும்பத்துக்குள் அகப்பட்டுக் கொண்டாள். இரண்டு குழந்தைகளாயிற்று. இனிமேல் எக்காலத்திலும் இந்த குடும்ப அமைப்பை விட்டு வெளியேற மாட்டாள் என்ற கணக்குப் போடு அலட்சியமாய் இருக்கும் உணர்வை விடுங்கள். என்னைக் காதலிக்கும்போது எப்படிப் பார்த்தீர்களோ, அப்படி உயிராய்ப் பாருங்கள்.’’

அவன் கண்கலங்கினான். ‘‘என்னை மன்னித்து விடு அன்பே’’ என்று அவள் கைகளைப் பற்றினார். அவளை அணைத்துக் கொண்டான்.

அது அவர்கள் முதல் காதல் அணைப்பின் இனிய தொடலைப் போன்றே அன்பாயிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu