தினம் ஒரு கதை - 94

தினம் ஒரு கதை - 94

நன்கு படித்த ஓர் இளைஞனுக்கும், ஓர் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருந்தது. சின்னச் சின்ன உரசல்கள் வந்தாலும் அவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.

ஒருநாள் அவர்கள் டி.வி பார்த்துக்கொண்டு இருக்கும்போது போன் வந்தது. இளைஞன் போன் பேசிவிட்டு வந்தான். குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

‘‘போன்ல யாரு?’’ என்று மனைவி கேட்டாள்.

‘‘எங்க அக்கா’’ என கணவன் சொன்னான்.

‘‘என்னவாம்?’’

‘‘அவங்க நாளை மறுநாள் சென்னை வர்றாங்களாம். பையனுக்கு மேற்படிப்பு கவுன்சிலிங்காம். இங்கதான் இரண்டு நாள் தங்குவாங்க!’’

‘‘அவங்க இங்க தங்கக்கூடாது.’’

‘‘ஏன்?’’ அவன் குரல் உயர்ந்தது.

‘‘போன தடவை உங்க தம்பி கல்யாணத்துல என்னை பொதுவுல வச்சி திட்டிட்டாங்க.’’

‘‘அவங்கதான் என்னைப் படிக்க வைச்சி, கல்யாணம் செய்து வைச்சாங்க. அவங்களை இங்க தங்கக்கூடாதுன்னு நான் எப்படி சொல்வேன்?’’

‘‘இல்லை. அவங்க இங்க தங்கினா நான் இங்க இருக்க மாட்டேன்.’’ அவள் அழுதாள்.

‘‘உனக்கென்ன மூளை குழம்பிப் போச்சா?’’

‘‘இல்லை. அவங்க இங்க வந்தா, நான் திரும்பி வரவே முடியாத இடத்துக்குப் போயிருவேன்.’’

‘‘அவங்க வருவாங்க, நீதான் அவங்களை கவனிச்சிக்கிறே!’’

‘‘நான் என்ன அவங்களுக்கு வேலைக்காரியா? முடியாது. வந்தா நேருக்கு நேர் நறுக்குன்னு கேட்டுருவேன்!’’

‘‘இப்படிப் பேசாதே. எனக்குக் கோபம் வரும்...’’

‘‘அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என்னை பொது இடத்துல அவமானப்படுத்தி இருக்காங்க உங்க அக்கா. அவ எல்லாம் ஒரு மனுஷியா?’’

‘‘மரியாதையா பேசு!’’

‘‘நான் அப்படித்தான் பேசுவேன்’’ என்று கத்தியபடியே டி.வி ரிமோட்டை தூக்கி மேலே வீசினாள் அவள். அது மின்விசிறியில் பட்டு பேரோசையோடு சுவற்றில் மோதி உடைந்தது. அதில் பெரிய துண்டு ஒன்று குழந்தையின் முகத்தில் பட்டு அது விறீட்டுக் கத்தியது.

இதையெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவன், ‘‘சொன்னா கேக்க மாட்டே?’’ என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவள் அப்படியே சுருண்டு சோபாவில் விழுந்தாள்.

இரண்டு நிமிடங்கள் ஆகியும் முழிக்கவில்லை. இவனுக்கு பயம் வந்தது. தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்தான். மூச்சு வருகிறதா என்று சோதித்தான். அந்தப் பதற்றத்தில் மூச்சு வந்தது மாதிரியும் இருந்தது; வராதது மாதிரியும் இருந்தது. ‘ஐயோ, என்னாச்சு இவளுக்கு’ என்று அழுதான். அருகில் இருந்த குழந்தையும் அம்மாவை உலுக்கியபடி அழுதது.

ஒருவேளை இவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் இவளை இனி பார்க்கவே முடியாதா? நான் இதற்காக தண்டனை அனுபவிக்கப் போய்விட்டால் என் குழந்தை ஆதரவில்லாமல் தனியே நிற்குமே! பத்து நிமிடங்களுக்கு முன் குளிர்பானமும் சிப்ஸும் சாப்பிட்டுக் கொண்டு மனைவியோடு மகிழ்ச்சியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்தோமே. குழந்தை அமைதியாக விளையாடிக் கொணடிருந்ததே. இப்போது எல்லாமே போய்விட்டதே. கதறினான்.

ஓடிப்போய் பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அடித்தான். அங்கே வயதான தம்பதியினர் தனியே இருக்கிறார்கள். இவன் நடந்ததைச் சொன்னான். அவர்கள் ஓடிவந்தார்கள். மூச்சு பேச்சில்லாமல் மயங்கி கிடக்கும் மனைவியைப் பரிசோதித்துத பாட்டி, அவள் கால்களை உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டார். இரண்டு நிமிடங்களில் இவன் மனைவி கண்விழித்தாள். அவளுக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார் தாத்தா. குழந்தை ஓடிச்சென்று ‘அம்மா’ என்று கட்டிக்கொண்டது.

கணவனும் மனைவியும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

பாட்டி பேசினார். ‘‘ஒரு பையனா நீ உன் மனசு, உன் ஈகோ, உன் அக்கா, உன்னோட நற்பெயர் அப்படின்னு யோசிச்சிருக்கே! ஒரு பொண்ணா அவ என் மனசு, என் உணர்வு, என் ஈகோ, என் தன்மானம் இப்படி யோசிச்சிருக்கா. உன்னோட ஈகோவும் உன் பொண்டாட்டி ஈகோவும் மோதியிருக்கு. எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் இப்படி ஈகோ மோதிக்கும்தான். அப்படி மோதிக்கும்போது யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுக்கிறதா நடிச்சா கூட போதும், இன்னொருத்தரும் விட்டுக் கொடுக்க ஆரம்பிச்சிருவாங்க.

உன் பொண்டாட்டிய உன் அக்கா பொது இடத்துல ‘அறிவில்லையா உனக்கு’ன்னு திட்டி இருக்காங்க. அதை என்ன ஏதுன்னு காதுகொடுத்துக் கேட்டு, அவளுக்கு நீ ஆறுதலே சொல்லலை. எங்கே அதைக் கேட்டா, உன் அக்காவைப் பத்தி தப்பா பேசுறதைக் கேக்கணுமோன்னு உனக்கு பயம். அவளுக்கும், உன் அக்கா உன்னை எப்படி வளர்த்தாங்க, படிக்க வைக்க எவ்வளவு சிரமப்பட்டாங்கன்னு கேக்கத் தோணல. எங்க அப்படிக் கேட்டா, அக்காவை அடிக்கடி குடும்பத்தோட வீட்டுக்கு வரச்சொல்லிடுவியோன்னு அவளுக்கு பயம்.

எது எப்படியோ, குடும்பத்துக்குள்ள ஆவேசப்படவே கூடாது. ஆவேசம் குடும்பத்தை அழிச்சிரும். நல்லதுக்கும் ஆவேசப்படக்கூடாது. அப்பதான் குடும்பம் விளங்கும்’’ என்று பாட்டி முடித்தார்.

கணவன் மனைவி குழந்தை மூவரும் ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டு அமைதியானார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu