தினம் ஒரு கதை - 90

தினம் ஒரு கதை - 90

வீட்டில் அனைவரும் அதை அவரிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அவர்தான் குடும்பத்தலைவர். அவர்தான் அதிகம் சம்பாதிக்கிறார். அவர்தான் அதிகம் படித்தவர். அவர்தான் குடும்பத்தை அதிகம் நேசிப்பவர் என்று பல விஷயங்கள் குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும் நேற்று அவர் தியேட்டரில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை.

அந்தக் குடும்பத்தில் ஏழு பேர். ஐம்பது வயதான குடும்பத் தலைவர் இவர். மனைவி. கல்லூரி படிக்கும் மூன்று பிள்ளைகள். வயதான அம்மா அப்பா. அனைவரும் ஜுராசிக் பார்க் திரைப்படம் பார்க்கப் போனார்கள்.

டைனோசர் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள், படத்தை பேரார்வத்துடன் குடும்பம் குடும்பமாகப் பார்த்தார்கள். அப்படி இந்த ஐம்பது வயது குடும்பத்தலைவரும் குடும்பத்துடன் சென்றார். கிளம்பும்போதுதான் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் நினைவு வந்தது. அவரையும் அழைத்தார்கள்.

சாதாரணமாக சினிமாவுக்கு அழைத்தால், ‘‘ஏ.சி குளிர் எனக்கு ஆகாது’’ என்று வர மறுத்துவிடுவார் அவர். ஆனால் இம்முறை ஒப்புக் கொண்டார். ‘‘எல்லாரும் டைனோசர்னு பேசிக்கறாங்களே. எனக்கும் பாக்கணும்’’ என்று சொன்னவர், இன்னொரு கோரிக்கையும் வைத்தார். ‘‘என் பொண்ணு காலேஜ் படிக்கிறா. அவளை விட்டுட்டு படம் பார்க்க கஷ்டமா இருக்கு. அவளையும் கூட்டிட்டு வரலாமா ஐயா?’’ என்றார்.

இதைக் கேட்டு வீட்டார் மனம் இளகிவிட்டது. அவளையும் அழைத்து வரச்சொன்னார்கள்.

வேலை செய்யும் பெண் தன் மகளை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு நேராக வந்து விடுவதாகச் சொல்லி முதலில் கிளம்பிவிட்டார். இவர்கள் காரில் கிளம்பிப் போய் ஒன்பது டிக்கெட் எடுத்தார்கள். வேலை செய்யும் பெண்ணின் குடும்பத்துக்காகக் காத்திருந்தார்கள். 15 நிமிடங்களில் அவர் மகளோடு வந்தார். மகளுக்கு 20 வயது இருக்கும். இருப்பதில் நல்ல தாவணியாகக் கட்டியிருந்தாலும், அந்த மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் சூழலுக்கு அவளின் ஏழ்மை பளிச்சென தெரிந்தது. தான் பார்க்க அந்தஸ்தாக இல்லை என்ற கூச்சத்தில் யாருடைய கண்களையும் சந்திக்காமல் தலைகுனிந்து இருந்தாள்.

படம் ஆரம்பிக்க இரண்டு நிமிடமே இருந்தது. வேகமாக உள்ளே நுழைந்தார்கள். வரிசையாக இருந்த ஒன்பது சீட்களில் ஏழில் இவர்கள் அமர்ந்து கொள்ள, எட்டாவது சீட்டில் வேலை செய்யும் பெண்மணியும், ஒன்பதாவது சீட்டில் அவர் மகளும் அமர்ந்தனர். குடும்பத்தலைவர் நடுவில் அமர்ந்திருந்தார்.

படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் திடீரென குடும்பத்தலைவர் எழுந்து, ‘‘ஒரு சீட் தள்ளி உக்காருங்க’’ என்று அனைவரையும் தள்ளி உட்காரச் செய்து, வேலை செய்யும் பெண்மணியின் மகள் அருகே போய் அமர்ந்து கொண்டார்.

சட்டென்று அதைப் பார்க்க குடும்பத்தினருக்கு ஏதோ போல் இருந்தது. படத்தின் நடுவே அவளிடம் பேசியதும், சிரித்ததும், இடைவேளையில் பாப்கார்னை அவளுக்கு நீட்டி ‘‘எடுத்துக்கோ’’ என்றதும்… பார்க்க ஏதோ மாதிரி இருந்தது அவர் மனைவிக்கு.

‘‘ச்சே! ஒரு மனுஷன் அம்பது வயசுல இப்படியா இருப்பாரு’’ என்று ஆத்திரம் வந்தது. வயதான தாய் தந்தையர், வயதுக்கு வந்த மூன்று பிள்ளைகள் எதிரில் இப்படியா நடந்து கொள்வார் என்று எரிச்சல் வந்தது.

இதை எப்படிக் கேட்பது என்று தயங்கித் தயங்கி, வேலை செய்யும் பெண்மணி வராத ஒருநாளில் நாளில் கேட்டேவிட்டார். குடும்பத்தலைவர் மனைவியைப் பார்த்தார். தனியாக அவரிடம் பதில் சொல்லாமல், அனைவரும் சாப்பிடும்போது பேசினார்.

‘‘அன்னைக்கு நான் அப்படி எழுந்து போய் ஏன் அந்தப் பொண்ணு பக்கத்துல உட்கார்ந்தேன்னு உங்க அம்மா கேட்டாங்க. உங்க எல்லாருக்கும் அந்த சந்தேகம் இருக்குன்னு நினைக்கறேன். அந்த கல்லூரிப் பெண்ணோட சீட்டுக்கு பக்கத்துல மூணு நாகரிகமில்லாத மனிதர்கள் அமர்ந்து அவளைத் தொந்தரவு செய்துகிட்டே இருந்தாங்க. அவ கையை இருட்டுல தொடுறதும், மேலே சாயுறதுமா இருந்தாங்க. அவ அம்மா கிட்ட சொல்லி அழுதா. ஆனா அவங்களோ, ‘சும்மா இரும்மா, இதையெல்லாம் பிரச்னையாக்குனா முதலாளி வீட்டுக்காரங்களுக்கு தொந்தரவா இருக்கும். நீ இப்படி சாய்ஞ்சுக்கோ’ன்னு சொன்னாங்க. அந்தப் பொண்ணு அம்மா மேல சாய்ஞ்சுக்கிட்டு ஒதுங்கி உட்கார்ந்து படம் பார்த்துது.’’

அனைவரும் அவரையே ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ‘‘அவ பாவம், சின்ன பொண்ணு. இதுவரைக்கும் நம்மகூட சினிமா வந்திருக்காளா? டைனோசர் பாக்க வந்திருக்கான்னா, அப்போ எவ்வளவு ஆசையா வந்திருப்பா. இப்படி தடியனுங்க தொந்தரவு செய்தா அவளால எப்படிப் படம் பாக்க முடியும்? நாம டிக்கெட் எடுத்துக் கொடுத்தா போதுமா? அந்தப் பொண்ணை நல்லபடியா படம் பாக்க வைக்கிறதும் நம்ம பொறுப்புதானே?’’

‘‘அப்ப நீங்க சிரிச்சி பேசினது? பாப்கார்ன் கொடுத்து சாப்பிட்டது?’’ ஒரு மகன் கேட்டான்.

‘‘நான் முதலாளி. பக்கத்துல இருந்தா அவளுக்குக் கூச்சமா இருக்குமில்லையா? அதை சகஜப்படுத்த பேசினேன். அவ பி.எஸ்சி விலங்கியல் படிக்கறதால எனக்கு சில டைனோசர் தகவல் சொன்னா. பக்கத்துல இருக்கிறவங்க கிட்டதானே பாப்கார்ன் ஷேர் பண்ணிக்க முடியும். வேறென்ன சந்தேகம்?’’ என்றார் குடும்பத்தலைவர்.

அனைவரும் தலைகுனிந்தனர். அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

‘‘நல்லவேளை, கேட்டீங்க. சந்தேகம் தீர்த்துட்டேன். இப்போ சூடு ஆறிப்போறதுக்கு முன்னாடி என்னை இட்லி சாப்பிட விடுங்க’’ என்று இட்லியை ருசித்து சாப்பிட ஆரம்பித்தார் குடும்பத்தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu