தினம் ஒரு கதை - 89

தினம் ஒரு கதை - 89

புதிதாய் திருமணம் ஆன விவசாயி ஒருவன், தன் மனைவியை வேண்டுமென்றே அவமானப்படுத்தியபடி இருந்தான். அவள் சீதனமாக ஒரு பசு மாடு கொண்டு வந்திருந்தாள். அது தினமும் நிறைய பால் கொடுத்து வந்தது. மிக சுவையான, சத்தான பாலாக அது இருந்தது.

ஒருநாள் அவள் பால் கறந்து கொண்டிருந்தபோது இவன் அவளிடம் சண்டை இழுத்து எட்டி உதைத்தான். அவள் பால் சொம்பு கவிழ்ந்து கொட்ட தரையில் விழுந்தாள். பசு மாடு இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது.

மனைவி அழுது கொண்டே, ‘‘நான் அம்மா வீட்டுக்குப் போகிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள். ‘போனால் போ… எனக்கென்ன வந்தது’ என்று இவன் அலட்சியமாக இருந்தான்.

மறுநாள் காலையில் பால் கறக்க பசு மாட்டின் மடி அருகில் சொம்பைக் கொண்டு சென்றான். மடியில் பாலே ஊறவில்லை. அந்தப் பாலைத்தான் அவன் முக்கிய உணவாகக் கொண்டிருந்தான். அவ்வளவு சுவையானது. பசு பால் கொடுக்காத காரணத்தால் அதிர்ச்சியடைந்து போனான்.

அதற்கு அடுத்த நாளும் பால் கறக்க அமர்ந்தான். அப்போது மடியில் பால் ஊறவில்லை. அதிக கவலை கொண்டான்.

மூன்றாம் நாள் விவசாயி ஒரு திட்டத்தோடு வந்தான். அதன்படி தன் மனைவி விட்டு சென்ற சேலையை கட்டிக்கொண்டான். முகம் தெரியாதவாறு முக்காடு போட்டு மூடிக் கொண்டான். சொம்பை எடுத்து பால் கறந்தான். பசு நிறைய பால் கொடுத்தது. விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி. ‘ஆஹா, பசுவை ஏமாற்றி விட்டோம்’ என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டான். இப்படி இரண்டு நாட்கள் பசுவை ஏமாற்றி பால் கறந்துகொண்டிருந்தான்.

ஒரு நாள் மனைவியின் அண்ணன் வந்தான். தன் தங்கையை வந்து அழைத்துச் செல்லுமாறு மாப்பிள்ளையிடம் கெஞ்சினான். ‘‘முடியாது’’ என்று திமிராக மறுத்தான் இவன்.

மறுநாள் மாமனாரும் மாமியாரும் வந்து கெஞ்சினார்கள். ‘‘முடியாது’’ என்று திமிராக முகம் திருப்பிக் கொண்டான் இவன்.

அதற்கும் அடுத்த நாள் மனைவியின் சேலையை அணிந்துகொண்டு பால் கறக்க பசுவின் மடியருகே அமர்ந்தபோது, பசு அவனை எட்டி ஓர் உதை விட்டது.

‘‘ஏன் இப்படி ஈவு இரக்கமில்லாமல் உதைக்கிறாய்?’’ என்று வலியில் புலம்பினான் இவன்.

‘‘நீ ஈவு இரக்கமாக இருக்கிறாயா என்ன? பின் நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டது பசு.

பேசும் பசுவை ஆச்சர்யத்தோடு பார்த்தான் இவன். பசு தொடர்ந்து பேசியது.

‘‘நீ முதல் நாள் என் எஜமானியின் புடவையை கட்டிக் கொண்டு வந்தபோதே நீ ஏமாற்றுகிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் நான் ஏன் பால் கொடுத்தேன் தெரியுமா? உன் மனைவியின் புடவையைக் கட்டியதால், கொஞ்சமாவது அவளை நேசிக்கிறாய் என்று நினைத்தேன். அதனால்தான் பால் கொடுத்தேன். வீட்டுக்கு வருபவர்களை எதிரியாய் இருந்தாலும் ‘வாங்க’ என்று அழைப்பது போல, நான் பால் கொடுத்தது ஒரு பண்பாடு. ஆனால் நீ என்ன செய்கிறாய்? உன் மாமனார் வந்து பேசினாலும், மச்சினன் வந்து பேசினாலும், மரியாதையாக நடத்தாமல் விரட்டி விடுகிறாயே? அடிப்படைப் பண்பாடு கூட தெரியவில்லையா உனக்கு? தன் எல்லா பொருளையும் எடுத்துச் சென்ற மனைவி ஏன் ஒரு புடவையை மட்டும் விட்டுச் சென்றாள் என்பதையும் யோசித்துப் பார்’’ என்று கடிந்து கொண்டது பசு.

இவன் திகைத்துப் போய் பார்த்தான். பசு இன்னும் பேசியது.

‘‘நீ உன் மனைவியை விரட்டி விடும்போதுகூட என்னை உனக்கு பால் கொடுக்க சொல்லிவிட்டுத்தான் சென்றாள். பால் கொடுக்காமல் முரண்டு செய்தாலாவது மனைவி நினைவு வந்து அழைத்து வரமாட்டாயா என்றுதான் இரண்டு நாள் கொடுக்காமல் இருந்து பார்த்தேன். ஆனால், நீ என்னை ஏமாற்ற நினைத்தாயே தவிர, திருந்தவில்லை. கவலைப்படாதே! நீ என் எஜமானியை அழைத்து வராவிட்டாலும் கூட நான் உனக்கு சுவையான பாலை அவர் சொல்லுக்காக கொடுப்பேன்’’ என்றது.

விவசாயி உடனே சென்று மனைவியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டு திரும்ப தன் வீட்டுக்கே அழைத்து வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu