தினம் ஒரு கதை - 86

தினம் ஒரு கதை - 86

பள்ளி முடிந்ததும் அப்பாவைப் பார்க்க, அவர் வேலை பார்க்கும் இடத்துக்கு அந்த சிறுமி சென்றாள். அவள் அப்பா ஓர் உணவகத்தில் சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு நாள் கழித்து அவளுக்குப் பிறந்த நாள் வருவதால், பள்ளி முடிந்ததும் நேரடியாக தான் வேலை பார்க்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தார் அப்பா.

அதன்படி வந்து அப்பாவுக்காகக் காத்திருந்தாள் மகள். அப்பா சுறுசுறுப்பாக உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தார். சில வாடிக்கையாளர்கள் இன்முகத்துடனும், சிலர் எரிச்சலுடனும் அப்பாவை நடத்தினார்கள். சிலர் மெலிதாக அவமானப்படுத்திப் பேசும்போதெல்லாம் இவளுக்கு ஒருமாதிரி இருந்தது. அரை மணி நேரத்தில் முதலாளி வந்தார். அப்பா முதலாளி முன்னால் நின்றார்.

‘‘சார், சம்பளத்துல கொஞ்சம் முன்பணம் கேட்டிருந்தேனே?’’ என்றார் அப்பா.

‘‘என்னங்க, அடிக்கடி இப்படியே கேக்குறீங்க. வேலைக்கு மட்டும் லீவு போட்டுட்டு போறீங்க?’’

‘‘இல்ல சார், நான் கடைசியா லீவு எடுத்ததே ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான்!’’

‘‘அப்ப நான் தப்பா சொல்றேனா? நான் பொதுவா சொன்னேன். உன்னைக் குறிப்பிட்டு சொன்னேனா. ஹோட்டலை நடத்துறவன் நான். இதைக்கூட சொல்லக் கூடாதா?’’ என்று முதலாளி கத்தினார்.

பலரும் திரும்பிப் பார்த்தார்கள். கத்தி முடித்த பிறகு அப்பாவிடம் ஐயாயிரம் ரூபாய் பணத்தை நீட்டினார் முதலாளி. அப்பா வாங்கிக் கொண்டு பணிவாக நன்றி சொன்னார்.

வெளியே வந்து இருவரும் துணிக்கடையை நோக்கி நடந்தார்கள். மகள் அமைதியாக நடப்பதைப் பார்த்து அப்பா மகளின் முகத்தைப் பார்த்தார். முகம் கலங்கியிருந்தது. மகள் வெடித்தாள்.

‘‘என்னப்பா இது? எல்லோரும் இருக்கும்போது இப்படி உங்களைப் பேசுறாங்க. என்னால தாங்கிக்கவே முடியல. எனக்கு இப்படி ஒரு டிரஸ் வேணாம்பா!’’

‘‘சே ச்சே! அப்படி சொல்லாதம்மா. உன்கூட வந்து இப்படி டிரஸ் எடுத்துக் கொடுக்குறதுதான் எனக்கு சந்தோஷம். அப்பாவுக்காக வா’’ என்று சொல்லி மகளை அழைத்துச் சென்றார். நல்லதாக இரண்டு டிரஸ் எடுத்துக் கொடுத்தார்.

மகள் மனநிலை மாறி இருந்தது. பின் இருவரும் ஒரு கேக் கடைக்குச் சென்றார்கள். கேக் ஆர்டர் செய்து முன்பணம் கொடுத்தார்கள். அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று பலூன், வண்ணத்தாள்கள், ஜிகினா எல்லாம் வாங்கினார்கள். மளிகைக்கடைக்கு வந்து கேசரி, பஜ்ஜி செய்வதற்கான பொருட்களை வாங்கினார்கள்.

வாங்கிய பிறகு அப்பா கடன் சொன்னார். அதற்கு அந்த வயதான கடைக்காரர், ‘‘என்னப்பா இது கடன் வைக்கிறே? புதுப்பழக்கம். இனிமே இது மாதிரி செய்யாதே. நான் யாருக்கும் கடன் கொடுக்கிறதில்லை. முதல் தடவை கேக்கிறதால கொடுக்கிறேன்’’ என்றார்.

பிறகு அப்பா மகளை அருகில் உள்ள ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்துச் சென்றார். ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார்கள்.

‘‘அப்பா, எனக்கொரு சந்தேகம். மளிகைக்கடையில சாமான் வாங்கும்போது உங்ககிட்டதான் பணம் இருந்துச்சே. ஆனாலும் ஏன் கொடுக்கலை?’’

‘‘கடனுக்கு வாங்கினதுக்கு கடைக்கார தாத்தா என்ன சொன்னார்?’’ அப்பா கேட்டார்.

‘‘கடுமையா பேசினார்!’’

‘‘நான் சின்ன வயசுல இருந்தே அந்த மளிகைக்கடைலதான் பொருள் வாங்குறேன். வாழ்க்கையில முதல் தடவை அவருக்கு பணம் கொடுக்கலைன்னு சொன்ன உடனே கோபப்பட்டார். சரியா?’’

‘‘ஆமாம்பா!’’

‘‘இதே மாதிரி நாம துணிக்கடையிலும், கேக் கடையிலும், அலங்காரப் பொருள் கடையிலும், ஐஸ்க்ரீம் கடையிலும் பணம் இல்லன்னு சொன்னா என்ன நடக்கும்?’’

‘‘அவுங்களும் அவமானப்படுத்தி இருப்பாங்கப்பா!’’

‘‘அப்போ நாம இப்போ போன அஞ்சு கடையிலும் அவமானப்பட்டிருப்போம் இல்லையா??’

‘‘ஆமாம்பா!’’

‘‘இப்படி ஐந்து கடைகள்ல ஐந்து வெவ்வேறு மனிதர்கள்கிட்ட அவமானப்படுறதுக்கு, என் முதலாளி உரிமையோட சொல்ற சொல்லைத் தாங்கிக்கலாமே! அதுல நான் என்ன குறைஞ்சி போறேன் சொல்லு?’’

சிறுமி ஐஸ்க்ரீம் தின்பதை நிறுத்தி விட்டு அப்பாவைப் பார்த்தாள். அவளுக்கு எல்லாமே புரிந்தது.

அப்பா தொடர்ந்தார். ‘‘வாழ்க்கையை ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு மட்டும் பாக்கக் கூடாது. என் முதலாளிக்கு நிறைய பொறுப்புகள்.வேலைகள் தலைக்கு மேல இருக்கு. அந்த டென்ஷன்ல அவர் முன்ன பின்ன பேசலாம். எல்லாத்துக்கும் வார்த்தைக்கு வார்த்தை நான் அர்த்தம் எடுத்துக்க மாட்டேன். செயலா அவரு எனக்கு நல்லதுதான் செய்றாரு. வருஷா வருஷம் உன் ஸ்கூல் ஃபீஸ் பணத்துல பாதி அவருதான் கொடுக்குறாரு. பிறகு சொற்களை வைச்சி நான் ஏன் அவமானப்படனும். இப்ப பாரு, என் பொண்ணு முன்னாடி அவ கேட்டத எல்லாம் நான் வாங்கிக் கொடுத்து கம்பீரமாத்தானே இருக்கேன். அவ்ளோதான். வாழ்க்கை ரொம்ப எளிமையானது.’’

‘‘அப்பா, அப்போ சூடு சுரணை இல்லாம இருக்கணுமாப்பா?’’

‘‘நிச்சயமா ஒரு மனுஷன் தன்மானமா இருக்கணும் செல்லம். ஆனா ஒவ்வொரு விநாடியும் ‘என் தன்மானத்துக்கு அடி விழக்கூடாது’ன்னு பதற்றமா அதையே பாத்துட்டு இருந்தா வாழ்க்கையில எல்லாமே தப்பாகத்தான் தெரியும். நிம்மதியே இருக்காதுன்னு சொல்றேன்.’’

‘‘மகிழ்ச்சிப்பா!’’

‘‘மகிழ்ச்சி.’’ அப்பா ஐஸ்க்ரீமை ஊட்டிவிட்டார். வாய் கொள்ளாமல் அதை வாங்கி உண்டு சிரித்தாள் மகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu