தினம் ஒரு கதை - 82

தினம் ஒரு கதை - 82

திருமண வயது வந்த மகனுக்காக வரன் பார்த்து வைத்திருந்தார் அம்மா. மகன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. தான் சுதந்திரமாக, இலக்கற்று, நிம்மதியாக வாழ நினைப்பதாக பெற்றோரிடம் சொன்னான். ‘என்ன சொன்னாலும் மகனுக்குப் புரிய வைக்க முடியவில்லையே’ என பெற்றோர் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.

ஒரு விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் காட்டுக்குச் சென்றபோது ஒரு காட்டுப்பன்றி அவனைத் துரத்த, பெரிய மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். இருட்டிவிட்டது. இரவில் இறங்கி மீண்டும் அதனிடம் மாட்டிக்கொள்வதைவிட காலையில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்து அங்கேயே ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான்.

பௌர்ணமி வெளிச்சத்தில் அம்மரத்தின் கிளையில் ஒரு பறவைக்கூடு இருப்பதை கவனித்தான். அதில் குஞ்சுகள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்க ஆண் பறவையும் பெண் பறவையும் பேசிக் கொண்டிருந்தன.

ஆண் பறவை, ‘‘நான் உணவைக் கொடுக்கும்போது எல்லாம் இந்த இரண்டாம் குஞ்சு மூன்றாம் குஞ்சுக்கு கொடுக்க விடாமல் பிடுங்கி விடுகிறது. எத்தனையோ முறை சொல்லிவிட்டேன்’’ என்றது.

‘‘இந்த வயதில் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள். நாம்தான் புரிய வைக்க வேண்டும். அதுசரி, நீங்கள் இன்றிரவு சரியாக சாப்பிடவில்லையே, ஏன்?’’ என்றது பெண் பறவை.

‘‘ஏனோ மனம் வெறுமையாக இருக்கிறது. வாழ்க்கையே கசந்து போனாற்போல் இருக்கிறது.’’

‘‘நான் பாடுகிறேன். உங்கள் மனம் சரியாகும்’’ என்று சொல்லி பெண் பறவை இனிமையான பாடலைப் பாடியது. பாடலின் இசையில் சொக்கி ஆண் பறவை பெண் பறவையின் மேல் சாய்ந்து கொண்டது.

பிறகு திடீரென கண்விழித்த ஆண் பறவை பதறியது. ‘‘ஐயோ, இன்னும் ஒரு மாதத்தில் வெயில் காலம் ஆரம்பிக்கிறதே. எறும்புகள் தொல்லை இருக்குமே. கூட்டை நாசமாக்கி குஞ்சுகளையும் தின்ன வருமே!’’

‘‘கவலையே வேன்டாம். நம் கூட்டைச் சுற்றி கருஞ்சிவப்பு பழச்சாற்றைத் தடவினால் எறும்புகள் பக்கத்திலேயே வராது. இப்போதே கருஞ்சிவப்பு பழங்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டேன். உங்கள் தங்கை வீட்டில் நிறைய கருஞ்சிவப்பு பழங்கள் சேகரித்து விட்டதாக கேள்விப்பட்டேன். கொஞ்சம் வாங்கி வருகிறீர்களா?’’

‘‘வேண்டாம்… வேண்டாம்… அவளிடம் வாங்கினால் அதையே வாழ்க்கை முழுவதும் சொல்லிக்காட்டுவாள். அதற்கு நாமே கஷ்டப்பட்டு சேகரித்து விடுவோம். அவள் ஒரு பறவையா?’’

‘‘ஆஹா, இங்கே தங்கையை இப்படிச் சொல்லி விட்டு, நேரில் அப்படியே உருகுவீர்களே!’’

‘‘அவளை எனக்கு பிடிக்கவும் செய்யும்தான். ஆனால் அவளைப் பற்றி ஆழ்மனதில் என்ன நினைக்கிறேன் என்று உன்னிடம் மட்டும்தானே சொல்ல முடியும். நீதானே என் நம்பிக்கைக்குரியவள்!’’

‘‘அவ்வளவு நம்பிக்கையா என்மீது’’ என்றது பெண் பறவை.

‘‘ஆம், என் உடலின் ஒரு பாகமாக உன்னை நம்புகிறேன்” என்றது ஆண் பறவை. பெண் பறவை சட்டென்று ஆண் பறவையை முத்தமிட்டது.

‘‘மூன்று மாதங்களுக்குப் பிறகு நீயாக எனக்குக் கொடுக்கும் முத்தம்’’ என்று ஆண் பறவை சொன்னது. ‘‘போங்கள், கிண்டல் செய்யாதீர்கள்’’ என்று பெண் பறவை செல்லமாக கோபித்துக் கொண்டது.

‘‘இல்லை… இல்லை… உண்மையிலேயே உன்னை அதிகம் நேசிக்கிறேன்’’ என்றது ஆண் பறவை.

‘‘என்னை விட உங்களை யாரும் நேசிக்க முடியாது. இதோ பாருங்கள், உங்களுக்குப் பிடித்த வெளிர்நீலப் பழங்களை உலர்த்தி வைத்திருக்கிறேன்’’ என பெண் பறவை காட்டியது.

‘‘இது பனித்தீவில் கிடைக்கும் அபூர்வ பழமாச்சே. அங்கே போனால் கழுகுகள் கொத்துமே. நான் சிறுவயதில் தின்றது. நீ ஏன் அவ்வளவு சிக்கலான இடத்துக்குப் போகிறாய்’’ என்று ஆண் பறவை கடிந்து கொண்டது.

‘‘இல்லை, அந்தக் கழுகுகளை ஏமாற்ற நான் ஒரு டெக்னிக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்’’ என பெண் பறவை விளக்க, ஆண் பறவை அதை ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டது.

‘‘என்மீது உனக்குத்தான் எவ்வளவு பாசம்’’ என்று ஆண் பறவை அணைத்துக் கொண்டது. பெண் பறவையும் அணைக்க, இரண்டின் உள்ளமும் உடலும் இணைந்தன.

இளைஞன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ‘திருமணம் என்பது வெறுமே உடல் சுகத்துக்காக மட்டுமல்ல. அது நம்பிக்கைக்குரிய மனப்பகிர்தலுக்கான களம். யாரிடமும் சொல்ல முடியாததை வாழ்க்கைத்துணையிடம் சொல்லலாம். அது பரஸ்பர அக்கறை செலுத்தும் வாய்ப்பு. மனதில் ஊறும் அன்பை வெட்கமின்றி கொட்டும் ஏற்பாடு. மனம் ஒன்று கலந்து அதன் உச்சகட்ட அன்பாகத்தான் உடல் கலக்கிறதே தவிர. உடல் சுகத்துக்காக மட்டும் திருமணம் அல்ல’ என்று புரிந்து கொண்டான்.

மறுநாள் வீடு சென்று தான் உடனே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக பெற்றோரிடம் சொன்னான். அவன் தலைக்கு மேலே பறவைக்கூட்டங்கள் பறந்து சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu