தினம் ஒரு கதை - 76

தினம் ஒரு கதை - 76

மன்னர்கள் காலத்தில் நடந்தது இது. ஒரு தெருவில் முதியவர் ஒருவர் பசியால் வாடி நின்று கொண்டிருந்தார். அவருக்கு எதுவுமே நினைவில்லை. பசி அவ்வளவு வருத்தியது.

அப்போது அவ்வழியே ஒரு இளைஞன் நடந்து சென்றான். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து விரித்தால் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிதான நெய்யில் சுட்ட அப்பங்கள் சிலவற்றை விற்பதற்காக எடுத்துச் சென்றான். முதியவர் அவனிடம் ஒரு அப்பம் சாப்பிடக் கொடுக்கும்படி கெஞ்சினார். ‘‘காசில்லாமல் கொடுக்க மாட்டேன்’’ என்று அவன் மறுத்தான்.

‘‘என்னிடம் காசில்லை ஆனால் உன் வாழ்க்கையை சிறப்பாக்கும் மந்திரம் ஒன்று இருக்கிறது. அதை வேண்டுமானால் தருகிறேன்’’ என்றார் பெரியவர்.

அவன் யோசித்து பதில் சொல்வதற்கு முன்னர் சட்டென்று ஒரு நெய்யப்பத்தை பிடுங்கி உண்ண ஆரம்பித்தார். அவன் வேறு வழியில்லாமல், அவர் சாப்பிடக் காத்திருந்தான்.

பெரியவர் நெய்யப்பத்தை முழுமையாக சாப்பிட்டுவிட்டு அவனிடம் ஒரு பழைய ஓலை நறுக்கை நீட்டினார். அதில்தான் அந்த மந்திரம் இருப்பதாகச் சொன்னார். அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. ‘‘இற்றுப் போன ஓலையில் ஏதோ நாலெழுத்து கிறுக்கி வைத்து விட்டு ‘இதுதான் மந்திரம்’ என்று பொய்யா சொல்கிறீர்?’’ என்று கேட்டுவிட்டு, வயது வித்தியாசம் பாராமல் அவரை அடித்துக் காயப்படுத்தினான். ஓலையைத் தூக்கி வீசிவிட்டு, மீதம் நெய்யப்பங்களை விற்பதற்காக நடந்தான்.

வழியில் ஆளே இல்லாத இடத்தில் இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பூசணிக்காயை வைத்துக் கொண்டு ‘இது எனக்குதான். இது எனக்குதான்’ என்று அதை அடைய போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். இவனுக்கு அதைப் பார்க்க வேடிக்கையாய் இருந்தது. அருகில் சென்று வேடிக்கை பார்த்தான்.

அவர்கள் இருவரும் ஒரு பணக்காரனின் இரண்டு மனைவிகள் ஆவர். அன்று மதியம் கணவனுக்குப் பிடித்த பூசணிக்காய் கூட்டு செய்வதற்கு பூசணி வாங்க சந்தைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே இருந்தது ஒரே ஒரு பூசணிதான். அதை ஒருவர் வாங்கிவிட, பின்னால் போன இன்னொருவர் ‘நான்தான் இதை சமைப்பேன்’ என்று உரிமை கொண்டாட, இருவருக்கும் வீதியில் சண்டை. 

பணக்காரன் வந்து மனைவியர் இருவரையும் சமாதானம் செய்தான். இந்த இளைஞனிடம், ‘‘நீதானே சண்டையைப் பார்த்தாய். இருவரில் யார் முதலில் தாக்கியது?’’ என்று விசாரித்தான்.

இவன் வாயைத் திறக்கும் முன்பாகவே, ‘அவள்தான் முதலில் அடித்தாள் என்று சொல்லு’ என இரண்டு பெண்களும் அவனிடம் கத்தினார்கள். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அவன் முழித்தான். எங்கே அவன் எதாவது சொல்லி பிரச்னை வந்து விடுமோ என்று, இருவரும் பாய்ந்து அவனை அடிக்க ஆரம்பித்தார்கள். நெய்யப்பங்களும் தெருவில் கொட்டி வீணாகிவிட, அடி தாங்க முடியாமல் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடினான் அவன். 

அப்போது அவன் உள்மனதில் ஏதோ தோன்ற, முதியவரை அடித்த இடத்தில் அவன் தூக்கிப் போட்ட ஓலை நறுக்கைத் தேடி எடுத்தான். சுத்தப்படுத்தி கூர்ந்து படித்தான். அதில், ‘விலக்கி விடு, அல்லது விலகி ஓடு. வேடிக்கை மட்டும் பார்க்காதே’ என்றிருந்தது.

அதைப் படித்ததும் அவனுக்கு ஆச்சர்யம். இருவர் சண்டைக்கு ஒற்றை சாட்சியாக நிற்பது எவ்வளவு பெரிய ஆபத்து. ஒன்று விலக்கி விட்டு அவர்களை சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். இல்லை என்றால் விலகி நம் வேலையைப் பார்த்துப் போயிருக்க வேண்டும். எவ்வளவு பெரிய உண்மையை பெரியவர் சொல்லி இருக்கிறார் என்று மனம் சிலிர்த்தான்.

அப்போது அவன் தோளை ஒரு கரம் தொட்டது. அது பெரியவரின் கைகளேதான். ‘‘தம்பி, பசியின் காரணமாக என்னால் வேலை செய்ய முடியவில்லை. அதனால் உன் நெய்யப்பம் ஒன்றை எடுத்து சாப்பிட வேண்டியதாயிற்று. இப்போது உழைத்து காசு கொண்டு வந்திருக்கிறேன். வாங்கிக் கொள்’’ என்று கொடுத்தார்.

எதுவும் பேசாமல் அப்படியே முதியவரின் பாதங்களில் விழுந்தான் அவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu