தினம் ஒரு கதை - 75

தினம் ஒரு கதை - 75

விநோதமான திருமணப் பழக்கம் அந்தப் பழங்குடியினருக்கு இருந்தது.

யார் திருமணப் பெண்ணோ, அவள் சிறிய ஓலைக் குடிசையில் மூன்று நாட்கள் குலதெய்வ பூஜை செய்து காத்திருக்க வேண்டும். அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், அந்த வீட்டைச் சுற்றி நின்று நடனம் ஆடுவார்கள். ஆடும்போது அவர்கள் கையில் நீளமான மரக்குச்சிகள் இருக்கும்.

நடனம் முடிந்ததும் அக்குச்சிகளை குடிசை ஓலையில் சொருகுவார்கள். உள்ளே இருக்கும் மணப்பெண்ணுக்கு அந்தக் குச்சிகளின் முனை மட்டும் தெரியும். அவள் அதில் ஏதாவது ஒரு குச்சியைப் பிடித்து இழுப்பாள். அந்தக் குச்சியை குடிசையில் சொருகிய இளைஞனைத்தான் அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த சமூகத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள். அவன் மிகச் சிறந்த வேடன். எப்படிப்பட்ட விலங்கையும் எளிதாக வேட்டையாடிவிடுவான். அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்கள்.

ஆனால் சம்பிரதாயத்தை மீறி எதுவும் செய்ய முடியாது. எனவே ஒரு தந்திரம் செய்தார்கள். ‘‘நான் என் குச்சியின் முனையில் சிவப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். எந்தக் குச்சியின் முனை சிவப்பாக இருக்கிறதோ அதுவே என்னுடையது. நீ அதை சரியாகப் பிடித்து இழு. சம்பிரதாயத்தைக் காப்பாற்றியதாகவும் ஆயிற்று’’ என்றான்.

அவளும் இத்திட்டத்தை ஏற்றாள். இவர்கள் பேசியதை வேடனின் நண்பன் வேடத்தில் இருந்த துரோகி ஒருவன் ஒட்டுக் கேட்டான். அவன் அவர்கள் தந்திரத்துக்கு மாற்றாக தந்திரம் செய்ய திட்டமிட்டான்.

மறுநாள் திருமணச் சடங்கு ஆரம்பமானது. அவளை குடிசை வீட்டுக்குள் வைத்தனர். மூன்று நாட்கள் அவள் குலதெய்வ பூஜை செய்து காத்திருந்தாள். மூன்றாம் நாள் மதியம் வெளியே இளைஞர்கள் நடனமாடும் ஓசை கேட்டது.

உள்ளே அவள், வீட்டுக் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரப்போகும் குச்சி முனைகளுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். எது சிவப்பு முனையோ, அதைப் பிடித்து விடலாம் என்று காத்திருந்தாள். அதன்படியே திடீரென பதினான்கு குச்சி முனைகள் குடிசைக்குள் வந்தன. அவை குச்சி முனைகள் மட்டுமல்ல, அவளைத் திருமணம் செய்துகொள்ள போட்டி போடும் பதினான்கு இளைஞர்களின் வேறு வடிவம்.

பயத்திலும் ஆர்வத்திலும் சிவப்பு முனை குச்சியைத் தேடினாள். அங்கே இரண்டு சிவப்பு முனைக் குச்சிகள் நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தாள். யாரோ அவர்கள் திட்டத்தை அறிந்ததை எண்ணி திகைத்தாள்.

இரண்டில் எது அவள் நேசிப்பவனுடைய குச்சி முனை? பதறினாள். அழுதாள். 

பதறுவதாலோ அழுவதாலோ ஆக்கூடியது ஒன்றுமில்லை. ‘யோசிப்போம்’ என்று முதல் சிவப்பு முனை குச்சி அசையாமல் நகத்தை வைத்து மெலிதாக சுரண்டிப் பார்த்தாள். அது சிவப்புப் கிழங்கின் சாயம்.

இரண்டாம் முனையை சுரண்டினாள். அது காட்டுப்பன்றியின் ரத்தம். நான் நேசிப்பவன் மிகச்சிறந்த வேடனாயிற்றே. ஒருவேளை காட்டுப்பன்றியின் ரத்தம் உடைய குச்சி அவனுடையதாக இருக்குமோ? யோசித்தாள்.

‘இல்லை, காட்டில் வாழும் மிகச் சிறந்த வேடன் எப்போதும் விலங்குகளை உணவுக்காக அன்றி வேறு எதற்கும் வேட்டையாடுவதோ சித்திரவதை செய்வதோ இல்லை. அவன் காட்டு உயிர்களையும் ஓர் உயிராக நினைப்பானே தவிர, தன்னை உயர்வானவனாக நினைத்து எந்த உயிரையும் சித்திரவதை செய்ய மாட்டான். ஆகையால் நிச்சயமாக சாயத்துக்காக காட்டுப்பன்றியைத் துன்புறுத்தியவன் என்னவன் கிடையாது’ என்று முடிவு செய்து, சிவப்பு கிழங்கு சாயம் இருந்த முனையைப் பிடித்து இழுத்தாள். பயத்தோடு காத்திருந்தாள்.

கதவு திறக்கப்பட்டது. அங்கே அவள் விரும்பியவன் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள். ஓடிச்சென்று அன்போடு அணைத்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu