தினம் ஒரு கதை - 74

தினம் ஒரு கதை - 74

1894ம் ஆண்டு. இங்கிலாந்தின் ஆல்டர்ஷாட் நகரத்தில் ஓர் உணவகத்தில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஹன்னா என்னும் 29 வயது பெண், நடித்து பாடிக் கொண்டிருந்தார்.

அன்று அவருக்கு உடல்நலம் சரியில்லை. இருந்தாலும் குடும்பத்தின் வறுமை காரணமாக நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஓர் அம்மாவாக குழந்தைகளையும் வீட்டில் விட்டு விட்டு வரமுடியாமல், தான் நடிக்கும் உணவகத்துக்கே அழைத்து வந்திருந்தார்.

உடல் நலமில்லாமலும் மனக்குழப்பத்துடனும் நடித்துக் கொண்டிருந்த ஹன்னாவால், திடீரென்று சரியாகப் பாட முடியவில்லை. அவர் தொண்டை கட்டிக் கொண்டுவிட்டது.

பார்வையாளர்கள் இதைக் கண்டு கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ‘ஓ’வென்று கூச்சல் போட்டார்கள். ஹன்னா மிகுந்த மனவேதனை அடைந்து, கண்ணீருடன் திகைத்து நின்றார்.

அப்போது மேடையிலிருந்து அந்த நடிகையின் குரலிலேயே இன்னொரு குரல் பாடலைப் பாடியது. அது மிக இனிமையாகவும் இருந்தது. மேடையின் செயற்கைப் புகை அமைப்பும், வண்ணத்தாள்களின் பொழிவும் அக்குரலுக்குச் சொந்தமான நபரை மக்களுக்குக் காட்டவில்லை.

புகை மெல்ல அடங்கியபோது, அங்கே ஐந்து வயது சிறுவன் ஒருவன் நின்று, இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் வேறு யாருமல்ல, நடிகை ஹன்னாவின் மகன்தான்.

இதைப் பார்த்து மக்கள் ஆச்சர்யத்தில் பாராட்டி குரல் எழுப்பினார்கள். அவன் தொடர்ந்து இனிமையாகப் பாடி ஆட, அந்தச் சிறுவன்மீது பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

திடீரென்று பாட்டை பாதியில் நிறுத்திய சிறுவன், ‘‘இருங்க… இருங்க… நீங்க போட்ட பணத்தை எடுத்துட்டுப் பாடுறேன். காசு முக்கியம்’’ என்று பணத்தை எடுப்பதாக பாவனை செய்கிறான்.

கூட்டம் அந்த வேடிக்கையை ரசிக்கிறது. மேடையில் நிறைய பணம் விழுவதைப் பார்த்த கலை நிகழ்ச்சியின் நிர்வாகி, பணத்தை எடுக்க வருகிறார். ‘‘சார், அது என் பணம். எடுக்காதீர்கள்’’ என்று அவரை துரத்துகிறான் சிறுவன். அவர் ஓடுவது போல பாவனை செய்கிறார். இதைப் பார்த்த கூட்டம் வெடித்துச் சிரிக்கிறது.

அது வெறும் பாடல் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், நகைச்சுவை நிகழ்ச்சியாகவும் மக்களை திருப்திப்படுத்துகிறது.

விழா முடிந்ததும் நடிகை ஹன்னா தன் மகனை அணைத்து உச்சி முகர்கிறார். அப்போது தொடங்கி வாழ்க்கையில் மிகப்பெரிய நகைச்சுவையாளராக முன்னேறினான் அந்தச் சிறுவன். அவர்தான் நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின்.

‘உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அது எனக்கு துன்பத்தையே கூட கொடுக்கட்டும். ஆனால் நான் வாழ்நாள் எல்லாம் உலகத்தை சிரிக்க மட்டுமே வைப்பேன். மகிழ்ச்சியில் திளைக்க மட்டுமே வைப்பேன். வேறொன்றும் செய்வதாக உத்தேசமில்லை’ என்று தன் நகைச்சுவைத் திறனால் உலகை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாபெரும் மேதை சார்லி சாப்ளின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu