தினம் ஒரு கதை - 71

தினம் ஒரு கதை - 71

ஆசிரியர் கேபச்சியர் அந்த நான்காம் வகுப்பு மாணவனைப் பார்த்தார். அவன் பயந்த சுபாவமாக இருந்தான். அவர் கண்களை நேருக்கு நேர் சந்திக்காமல் நாசூக்காக தாழ்த்திக் கொண்டான். சக மாணவர்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொண்டு, யாரும் சட்டென்று கண்டுபிடித்துவிட முடியாதபடி இருந்தான். ஆனால் கேபச்சியர் இப்படி எத்தனை மாணவர்களை பார்த்திருப்பார்!

அவர்தான் அந்தப் பள்ளியில் நூலகரும் கூட. மாணவனை அழைத்து அன்பாகக் கேட்டார். ‘‘நீ ஸ்கூலுக்கு போற நேரம் தவிர மத்த நேரம் என்ன செய்வாய்?’’

‘‘நான்… நான் வந்து…’’

‘‘தயங்காம சொல்லுப்பா!’’

‘‘நான் வந்து… புத்தகங்கள் வாசிப்பேன்!’’

‘‘ஆஹா, நல்லது. அருமை. பாடப்புத்தகம் இல்லாமல் வேறு புத்தகங்களும் வாசிப்பாயா? அதை ஏன் இவ்வளவு தயங்கித் தயங்கி சொல்கிறாய்?’’

‘‘இல்ல… பொண்ணுங்கதானே புத்தகம் படிப்பாங்க. பசங்க எல்லாம் விளையாடத்தானே செய்வாங்க?’’

‘‘இப்படி ஓர் எண்ணம் உனக்கு இருக்கிறதா? அது தவறு. புத்தகம் படிப்பது ஆண், பெண் இருவருக்குமான பொது வேலை. விளையாடுவதும் அப்படித்தான். நீ நிறைய புத்தகம் வாசி. நம் பள்ளி லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் எடுத்துப் போய் வாசி. இங்கேயே வாசிப்பதாய் இருந்தாலும் சரி’’ என்றார்.

‘பெண்கள்தான் புத்தகம் படிப்பார்கள். ஆண்கள் விளையாட மட்டும்தான் செய்வார்கள்’ என்று தவறாக நினைத்துக் கொண்டு புத்தகம் வாசிப்பதையே வெளியே சொல்லாமல் தவிர்த்த சிறுவனின் எண்ணத்தை ஆசிரியர் கேபச்சியர் மாற்றினார்.

அன்றிலிருந்து பாட நேரம் முடிந்து ஓய்வு நேரத்தில் அச்சிறுவன் அருகே அமர்ந்து, அவன் என்ன புத்தகம் படித்தான் என்று கேட்பார். அவனைப் பேச விட்டு, காது கொடுத்துக் கேட்பார். விவாதிப்பார். பாராட்டுவார். ஊக்கப்படுத்துவார்.

கொஞ்ச நாளில் அவன் சுறுசுறுப்பான, தன்னம்பிக்கையான சிறுவனாக மாறிவிட்டான். ஆசிரியர் கேபச்சியர் கொடுத்த தன்னம்பிக்கை, வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உதவி செய்தது. வாழ்க்கையில் உழைத்து மென்பொருள் துறையில் மாபெரும் வல்லுனராகவும் தொழிலதிபராகவும் ஆகி, உலகிலேயே பெரிய பணக்காரரும் ஆகி, ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்தார். அந்த சிறுவன்தான், உலகம் போற்றும் பில்கேட்ஸ்.

ஆசிரியராக, பெற்றோராக, குழந்தைகளுக்குப் பெரியவர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கைக்கு விலையே கிடையாது. அது விலைமதிப்பற்ற அன்பும் சேவையுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu