தினம் ஒரு கதை - 70

தினம் ஒரு கதை - 70

வீட்டில் ஒரு பிள்ளை சரியாக சாப்பிடாமல் இருந்தால், அம்மாவுக்கு கவலையாகத்தானே இருக்கும். அப்படி அந்த அம்மாவுக்கு தன் ஒரு மகனைப் பார்த்து கவலை வந்தது.

வீட்டில் அம்மா, அப்பா மற்றும் வேலைக்குச் செல்லும் மூன்று பிள்ளைகள் இருந்தனர். பெரிய மகனும், அதற்கடுத்த மகளும் வேலை முடிந்து மாலையில் வீடு வந்து விடுவார்கள்.

ஆனால், இளையவன் நள்ளிரவுதான் வருவான். அவன் வேலை அப்படி. நள்ளிரவு வரும் மகனுக்கு அம்மா சாதமும், குழம்பும், கூட்டும், பொரியலும் வைத்தால் ஏனோ தானோ என்று கொஞ்சம் கொறித்துவிட்டு எழுந்து விடுவான்.

அம்மாவுக்கு ஒரே யோசனையாக இருந்தது. ‘ஏன் இவன் சாப்பிடவில்லை’ என்ற கேள்வி எழுந்தது. நேரடியாகக் கேட்காமல் நாமே கண்டுபிடிப்போம் என்று ஒவ்வொரு நாளும் மகனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

கறிக்குழம்பு வைத்தபோது அதை எடுத்து ஊற்றும் விதத்தில் அதிக அலட்சியம் தெரிந்ததை கவனித்தார். இன்னொரு நாள் அவனுக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வைத்தபோதும் கரண்டியால் அலட்சியமாக ஊற்றுவதைக் கண்டார். அதைத் தொடர்ந்து அவன் ஏதோ முணுமுணுத்தான். சரிவர சாப்பிடாமல் எழுந்துவிட்டான்.

ஆனால் அம்மாவின் முகம் மலர்ந்தது. மகன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்து விட்டார்.

மறுநாள் மதியம் மகனுக்கு பிடித்த மீன் குழம்பு வைத்தார். குழம்பு கொதித்ததும், அதில் மூன்று நல்ல துண்டு மீன்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, இளைய மகனுக்குத் தேவையான குழம்பையும் அதில் ஊற்றி தனியே எடுத்து வைத்து விட்டார்.

இரவு மகன் வந்ததும், சுடு சாதத்தில் மெலிதாய் சூடேற்றப்பட்ட மீன் குழம்பை ஊற்றிக் கொடுத்தார். மதியம் தனியாக எடுத்து வைத்த நல்ல மீன் துண்டுகளையும் தட்டில் வைத்தார். இரண்டு சின்ன வெங்காயத்தை கடிக்க உரித்து வைத்தார்.

மகன் உற்சாகமாகி, ஒரு குழந்தை போல ஆசை ஆசையாக சாப்பிட்டான். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, ‘‘சாப்பாடு அருமைம்மா’’ என்று சொல்லி எழுந்தான்.

அவன் தூங்கப் போன பிறகு அம்மாவிடம் அப்பா கேட்டார். ‘‘அவனுக்கு என்ன மனக்குறை என எப்படி நீ கண்டுபிடித்தாய்?’’

‘‘நாமெல்லாம் சாப்பிட்டுவிட்டு மிச்சம் இருக்கிற குழம்பை கடைசியில் சாப்பிடுற அவனுக்குக் கொடுக்கிறதா இதுவரை நினைத்திருக்கிறான். ஓரளவுக்கு அது உண்மையும்கூட. என்னை அறியாமலேயே அதைச் செய்திருக்கிறேன். கறிக்குழம்பில் வெறும் எலும்புதான் இருந்தது. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பில் நல்ல கத்தரிக்காய் அவனுக்குக் கிடைக்கவில்லை. இது அவன் மனதை பாதித்திருக்கிறது. அதே சமயம் அவனுக்கு உணவு விஷயத்தில் அம்மாவிடம் சண்டை போடவும் வெட்கமாக இருந்தது. இதனால்தான் சரியாக சாப்பிடவில்லை’’ என்று அம்மா சொன்னார்.

‘‘இதை எப்படி சரி செய்தாய்?’’

‘‘சமைத்ததும், அவன் பங்கை தனியாக எடுத்து வைத்துவிட்டேன். பிரச்னை தீர்ந்தது.’’

‘‘சரியாகச் செய்தாய். வீட்டின் வளங்களை சரிசமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்காமல் இருக்கும்போதுதான் பிரச்னையும் மனக்குறையும் வரும். வீட்டின் வளங்களையும் நாட்டின் வளங்களையும் அனைவருக்கும் சரி சமமாகப் பகிர்ந்து கொடுத்தால் பிரச்னை மிக அரிதாகவே வரும்’’ என்று சொல்லி, அம்மாவைப் பாராட்டினார் அப்பா.

மகனின் மனக்குறையைத் தீர்த்து வைத்த திருப்தியில் நிம்மதியாக தூங்கச் சென்றார் அந்த அன்பான அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

crossmenu